Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል-አንዓም   አንቀጽ:
وَقَالُوْا هٰذِهٖۤ اَنْعَامٌ وَّحَرْثٌ حِجْرٌ ۖۗ— لَّا یَطْعَمُهَاۤ اِلَّا مَنْ نَّشَآءُ بِزَعْمِهِمْ وَاَنْعَامٌ حُرِّمَتْ ظُهُوْرُهَا وَاَنْعَامٌ لَّا یَذْكُرُوْنَ اسْمَ اللّٰهِ عَلَیْهَا افْتِرَآءً عَلَیْهِ ؕ— سَیَجْزِیْهِمْ بِمَا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
6.138. “இந்த கால்நடைகளும் பல வகையான பயிர்களும் தடுக்கப்பட்டவையாகும். சிலைகளின் சேவகர்கள் போன்ற தாம் விரும்பியவர்களைத் தவிர வேறு யாரும் இவற்றை உண்ணக்கூடாது; இந்த கால்நடைகளின் முதுகுகள் தடை செய்யப்பட்டவையாகும். இவற்றின் மீது பயணம் செய்யவோ சுமைகளை ஏற்றவோ கூடாது; (அல்பஹீரா: காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்,அஸ்ஸாஇபா: சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்டு மேய விடப்பட்ட பெண் ஒட்டகம், அல்ஹாமி: அதிகமான பெண் ஒட்டகங்களை கருவுறச் செய்த ஆண் ஒட்டகம்) இந்த கால்நடைகளை அறுக்கும் போது அல்லாஹ்வின் பெயர் கூறக் கூடாது. சிலைகளின் பெயர்களைத்தான் கூற வேண்டும்” என்று இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள். இவைகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த சட்டம் என அல்லாஹ்வின் மீது பொய் கூறியே இவற்றைச் செய்தனர். அல்லாஹ்வின் மீது அவர்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருந்ததன் காரணமாக விரைவில் அவன் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَقَالُوْا مَا فِیْ بُطُوْنِ هٰذِهِ الْاَنْعَامِ خَالِصَةٌ لِّذُكُوْرِنَا وَمُحَرَّمٌ عَلٰۤی اَزْوَاجِنَا ۚ— وَاِنْ یَّكُنْ مَّیْتَةً فَهُمْ فِیْهِ شُرَكَآءُ ؕ— سَیَجْزِیْهِمْ وَصْفَهُمْ ؕ— اِنَّهٗ حَكِیْمٌ عَلِیْمٌ ۟
6.139. “இந்த சாயீபா, பஹீரா போன்ற கால்நடைகளின் வயிற்றிலுள்ள குட்டிகள் உயிரோடு பிறந்தால் அவை எங்கள் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். பெண்களுக்குத் தடை செய்யப்பட்டதாகும். அவற்றின் வயிற்றிலுள்ள குட்டிகள் செத்துப் பிறந்தால் அவை எங்களின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அனுமதிக்கப்பட்டதாகும்” என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் இவ்வாறு கூறியதனால் தகுந்த தண்டனையை அல்லாஹ் அவர்களுக்கு அளிப்பான். தான் வழங்கும் சட்டங்களிலும், தன் படைப்புகளைப் பராமரிப்பதிலும் அவன் ஞானம் மிக்கவன்; அவர்களைக் குறித்து நன்கறிந்தவன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قَدْ خَسِرَ الَّذِیْنَ قَتَلُوْۤا اَوْلَادَهُمْ سَفَهًا بِغَیْرِ عِلْمٍ وَّحَرَّمُوْا مَا رَزَقَهُمُ اللّٰهُ افْتِرَآءً عَلَی اللّٰهِ ؕ— قَدْ ضَلُّوْا وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟۠
6.140. கீழ்த்தரமான அவர்களின் சிந்தனையினாலும், அறியாமையினாலும் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்தவர்களும், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளை அவன் கூறியதாக புனைந்துகூறி தடைசெய்து கொண்டவர்களும் அழிந்துவிட்டார்கள். அவர்கள் நேரான வழியை விட்டும் பிறழ்ந்துவிட்டார்கள். அவர்கள் நேர்வழி பெற்றவர்களாவும் இருக்கவில்லை.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَهُوَ الَّذِیْۤ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَیْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّیْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَّغَیْرَ مُتَشَابِهٍ ؕ— كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ یَوْمَ حَصَادِهٖ ۖؗ— وَلَا تُسْرِفُوْا ؕ— اِنَّهٗ لَا یُحِبُّ الْمُسْرِفِیْنَ ۟ۙ
6.141. அல்லாஹ்தான் தண்டுகளுடைய, தண்டுகளற்ற பரந்த தோட்டங்களை பூமியின் மேற்பரப்பில் உருவாக்கினான். அவனே பேரீச்ச மரங்களை முளைக்கச் செய்தான். வடிவத்திலும் சுவையிலும் வேறுபட்ட பழங்களையுடைய பயிர்களையும் அவன் படைத்துள்ளான். அவனே ஆலிவ், மாதுளை ஆகியவற்றை உருவாக்கினான். அவற்றின் இலைகள் ஒன்றுபோல் இருக்கின்றன. சுவையோ வேறுபட்டு இருக்கிறது. மனிதர்களே! அவை விளையும்போது அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள். அவை அறுவடைசெய்யப்படும்போது அவற்றிற்கு உரிய ஸகாத்தை வழங்கிவிடுங்கள். உண்பதிலும் செலவு செய்வதிலும் மார்க்க வரம்புகளை மீறிவிடாதீர்கள். ஏனெனில் உண்ணவதிலும் செலவளிப்பதிலும் அவயைல்லாத ஏனையவற்றிலும் தன் வரம்புகளை மீறக்கூடியவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. மாறாக அவர்களை வெறுக்கிறான். இவையனைத்தையும் படைத்தவனே தன் அடியார்களுக்காக இதனை ஆகுமாக்கித் தந்துள்ளான். அதனைத் தடைசெய்யும் அதிகாரம் இணைவைப்பாளர்களுக்குக் கிடையாது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمِنَ الْاَنْعَامِ حَمُوْلَةً وَّفَرْشًا ؕ— كُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ— اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟ۙ
பெரிய ஒட்டகங்கள் போன்ற பொதி சுமப்பதற்குப் பொருத்தமான கால்நடைகளையும் சிறு ஒட்டகங்கள் ஆடுகள் போன்ற பொதி சுமப்பதற்குத் தகுதியற்ற கால்நடைகளையும் அவனே உங்களுக்காகப் படைத்துள்ளான். மனிதர்களே! அவன் உங்களுக்கு அனுமதித்த அல்லாஹ் அருளிய இப்பொருட்களிலிருந்து உண்ணுங்கள். இணைவைப்பாளர்கள் செய்வது போன்று அல்லாஹ் தடைசெய்தவற்றை அனுமதிப்பதிலும் அனுமதித்தவற்றைத் தடைசெய்வதிலும் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி விடாதீர்கள். மனிதர்களே! நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு வெளிப்படையான விரோதியாவான். நீங்கள் அவ்வாறு செய்து அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட வேண்டும் என்று அவன் விரும்புகிறான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• ذم الله المشركين بسبع صفات هي : الخسران والسفاهة وعدم العلم وتحريم ما رزقهم الله والافتراء على الله والضلال وعدم الاهتداء؛ فهذه أمور سبعة، وكل واحد منها سبب تام في حصول الذم.
2. இணைவைப்பாளர்களை அல்லாஹ் ஏழு பண்புகளைக் கொண்டு இழித்துரைத்துள்ளான். அவை: இழப்பு, மடமைத்தனம், அறிவின்மை, அல்லாஹ் வழங்கியதை தடை செய்துகொள்ளல், அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுதல், வழிகேடு, நேர்வழியடையாமை. இவ்வேழு காரியங்களில் ஒவ்வொன்றும் இழிவுக்கான தனிக் காரணமாகும்.

• الأهواء سبب تحريم ما أحل الله وتحليل ما حرم الله.
1. மனஇச்சையே அல்லாஹ் அனுமதித்ததை தடைசெய்வதற்கும் அவன் தடைசெய்ததை அனுமதிப்பதற்கும் காரணமாக இருக்கின்றது.

• وجوب الزكاة في الزروع والثمار عند حصادها، مع جواز الأكل منها قبل إخراج زكاتها، ولا يُحْسَب من الزكاة.
2. பயிர்களையும் பழங்களையும் அறுவடை செய்யும் போது அவற்றிற்குரிய ஸகாத் வழங்குவது கடமையாகும். ஸகாத் வழங்கப்படும் முன்னரே அவற்றிலிருந்து உண்ணலாம். அது ஸகாத்தில் சேராது.

• التمتع بالطيبات مع عدم الإسراف ومجاوزة الحد في الأكل والإنفاق.
3. உண்பதிலும் செலவு செய்வதிலும் வரம்புமீறாது, வீண்விரயம் செய்யாமல் நல்லவற்றை அனுபவிக்கலாம்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-አንዓም
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት