Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል-አዕራፍ   አንቀጽ:
وَلَمَّا رَجَعَ مُوْسٰۤی اِلٰی قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ— قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِیْ مِنْ بَعْدِیْ ۚ— اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْ ۚ— وَاَلْقَی الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَاْسِ اَخِیْهِ یَجُرُّهٗۤ اِلَیْهِ ؕ— قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُوْنِیْ وَكَادُوْا یَقْتُلُوْنَنِیْ ۖؗ— فَلَا تُشْمِتْ بِیَ الْاَعْدَآءَ وَلَا تَجْعَلْنِیْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
7.150. மூஸா தம் இறைவனிடம் தனிமையில் உரையாடிய பின், தன் சமூகத்தார் காளைக் கன்றை வணங்கியதனால் கோபத்தாலும் கவலையாலும் கொந்தளித்தவராக அவர்களிடம் திரும்பிய போது கூறினார்: “என் சமூகமே! நான் உங்களை விட்டு சென்ற பிறகு உங்களுக்கு ஏற்பட்ட நிலமை மோசமானதாகும். ஏனெனில் அது அழிவுக்கும் துர்பாக்கியத்திற்கும் வழிவகுக்கும். என்னைக் காத்திருந்து சடைவடைந்ததனால், காளைக் கன்றை வணங்க ஆரம்பித்து விட்டீர்களா?” அவருக்கேற்பட்ட கடுமையான கவலையினாலும் கோபத்தினாலும் அவர் பலகைகளை எறிந்தார். அவர்களுடன் கூட இருந்தும், அவர்கள் காளைக் கன்றை வணங்கியதைத் தடுக்காமலிருந்த காரணத்தினால் தம் சகோதரர் ஹாரூனின் தலையையும் தாடியையும் பிடித்து இழுத்தார். அவர் மூஸாவிடம் மன்னிப்புக்கேட்டவராகவும் மன்றாடியவராகவும் கூறினார்: “என் தாயின் மகனே! நிச்சயமாக சமூகத்தினர் என்னை பலவீனமானவனாகக் கருதி, என்னை இழிவாக எண்ணி விட்டனர். அவர்கள் என்னைக் கொல்ல எத்தனித்தனர். எனவே எனது எதிரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் தண்டனையை எனக்கு அளித்துவிடாதீர். என் மீது கோபப்பட்டு காரணமாக அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கிய அநியாயக்கார சமூகத்துடன் என்னை சேர்த்துவிடாதீர்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قَالَ رَبِّ اغْفِرْ لِیْ وَلِاَخِیْ وَاَدْخِلْنَا فِیْ رَحْمَتِكَ ۖؗ— وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟۠
7.151. மூஸா தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்: “என் இறைவா! என்னையும் என் சகோதரன் ஹாரூனையும் மன்னித்துவிடுவாயாக. உன் கருணையில் எங்களைப் பிரவேசிக்கச் செய்வாயாக. உன் கருணையால் எங்களை சூழ்ந்துகொள்வாயாக. எங்கள் இறைவா! அனைவரையும் விட நீயே கருணை காட்டக்கூடியவன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّ الَّذِیْنَ اتَّخَذُوا الْعِجْلَ سَیَنَالُهُمْ غَضَبٌ مِّنْ رَّبِّهِمْ وَذِلَّةٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ؕ— وَكَذٰلِكَ نَجْزِی الْمُفْتَرِیْنَ ۟
7.152. காளைக் கன்றை வணங்கப்படும் கடவுளாக ஆக்கிக் கொண்டவர்கள் தமது இறைவனை கோபமூட்டி அவமதித்ததால் அவனது கடுமையான கோபத்திற்கு ஆளாவதோடு இவ்வுலக வாழ்வில் இழிவுக்கும் உள்ளாவார்கள். அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டக்கூடியவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குகின்றோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَالَّذِیْنَ عَمِلُوا السَّیِّاٰتِ ثُمَّ تَابُوْا مِنْ بَعْدِهَا وَاٰمَنُوْۤا ؗ— اِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟
7.153. அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி, பாவங்கள் புரிந்து தீய செயல்கள் செய்தவர்கள் அதன் பின்னர் அல்லாஹ்வின்பால் மீண்டு நம்பிக்கை கொண்டு தாங்கள் செய்துகொண்டிருந்த பாவங்களை விட்டும் அவர்கள் விலகிக்கொண்டால், இணைவைப்பு மற்றும் பாவங்களை விட்டும் நீங்கி நம்பிக்கை கொண்டு வணக்கம் புரியும் போது -தூதரே!- உம் இறைவன் அவர்களின் பாவங்களை கண்டுகொள்ளாமல் மன்னித்து விடுபவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَلَمَّا سَكَتَ عَنْ مُّوْسَی الْغَضَبُ اَخَذَ الْاَلْوَاحَ ۖۚ— وَفِیْ نُسْخَتِهَا هُدًی وَّرَحْمَةٌ لِّلَّذِیْنَ هُمْ لِرَبِّهِمْ یَرْهَبُوْنَ ۟
7.154. மூஸாவை விட்டு கோபம் தணிந்த போது கோபத்தினால் தாம் எறிந்த பலகைகளை எடுத்துக் கொண்டார். அது வழிகேட்டிலிருந்து நேர்வழியையும் சத்தியத்தையும் தங்களின் இறைவனை அஞ்சி அவனது தண்டனையைப் பயப்படுவோருக்கு கருணையையும் உள்ளடக்கியதாக இருந்தது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاخْتَارَ مُوْسٰی قَوْمَهٗ سَبْعِیْنَ رَجُلًا لِّمِیْقَاتِنَا ۚ— فَلَمَّاۤ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِیَّایَ ؕ— اَتُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ— اِنْ هِیَ اِلَّا فِتْنَتُكَ ؕ— تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَتَهْدِیْ مَنْ تَشَآءُ ؕ— اَنْتَ وَلِیُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَیْرُ الْغٰفِرِیْنَ ۟
7.155. தம் சமூகத்தின் மூடர்கள் காளைக் கன்றை வணங்கியதற்கு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கேட்பதற்காக மூஸா அவர்களிலிருந்து சிறந்த எழுபது நபர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவர்கள் வருவதற்காக அல்லாஹ் ஒரு நேரத்தையும் நிர்ணயம் செய்தான். அவர்கள் வந்த போது அல்லாஹ்விடமே துணிந்து அல்லாஹ்வைக் கண்முன்னால் காட்டுமாறு மூஸாவிடம் வேண்டினார்கள். அதன் காரணமாக பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதன் பயங்கரத்தால் மயங்கி விழுந்தார்கள். செத்துமடிந்தார்கள். மூஸா தம் இறைவனிடம் மன்றாடினார்: “என் இறைவா, அவர்களையும் அவர்களுடன் என்னையும் நீ அழிக்க நாடியிருந்தால் அவர்கள் இங்கு வருவதற்கு முன்னரே அழித்திருப்பாய். எங்களில் மூடர்கள் செய்த காரியத்திற்காகவா எங்களை அழித்தாய். என் சமூகம் காளைக் கன்றை வணங்கியது ஒரு சோதனையே. அதன் மூலம் நீ நாடியவர்களை வழிதவறச் செய்கிறாய். நீ நாடியவர்களுக்கு நேர்வழிகாட்டுகின்றாய். எங்களின் விவகாரங்களுக்கு நீயே பொறுப்பாளன். எனவே எங்களின் பாவங்களை மன்னித்துவிடுவாயாக. விசாலமான உனது கருணையின் மூலம் எங்கள் மீது கருணை காட்டுவாயாக. நீயே பாவத்தை மன்னப்போரில் மிகச் சிறந்தவன்.”
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• في الآيات دليل على أن الخطأ في الاجتهاد مع وضوح الأدلة لا يعذر فيه صاحبه عند إجراء الأحكام عليه، وهو ما يسميه الفقهاء بالتأويل البعيد.
1. தெளிவான ஆதாரம் இருந்தும் ஆய்வில் தவறு விடுவது, தீர்ப்பு வழங்கும் போது, தக்க காரணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை மேற்கூறிய வசனங்கள் குறிப்பிடுகின்றன. அதனை சட்டக்கலை அறிஞர்கள் தூரமான வலிந்துரை எனக் குறிப்பிடுவர்.

• من آداب الدعاء البدء بالنفس، حيث بدأ موسى عليه السلام دعاءه فطلب المغفرة لنفسه تأدُّبًا مع الله فيما ظهر عليه من الغضب، ثم طلب المغفرة لأخيه فيما عسى أن يكون قد ظهر منه من تفريط أو تساهل في رَدْع عَبَدة العجل عن ذلك.
2. மனிதன் பிரார்த்தனை செய்யும் போது தன்னைக் கொண்டே முதலில் ஆரம்பிக்க வேண்டும். மூஸா தாம் கோபம் கொண்டதற்கு முதலில் தம்மை மன்னித்துவிடும்படியே அல்லாஹ்விடம் வேண்டினார். பின்னர் காளைக் கன்றை வணங்கியோரைக் கண்டிப்பதில் தன் சகோதரருக்கு பொடுபோக்கு நிகழ்ந்திருக்கலாம் என்ற எண்ணத்தில் அவருக்காக மன்னிப்பு வேண்டினார்.

• التحذير من الغضب وسلطته على عقل الشخص؛ ولذلك نسب الله للغضب فعل السكوت كأنه هو الآمر والناهي.
3. கோபம் மற்றும் மனிதனின் அறிவில் அதன் தாக்கம் ஆகியவற்றை எச்சரித்தல். எனவே ஏவுவதும் தடுப்பதும் கோபம்தான் என்பதைப் போன்று, கோபம் அடங்கியதை வர்ணிக்கும் போது “அது வாய் மூடியது” என்ற வார்த்தைப் பிரயோகத்தை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

• ضرورة التوقي من غضب الله، وخوف بطشه، فانظر إلى مقام موسى عليه السلام عند ربه، وانظر خشيته من غضب ربه.
4.அல்லாஹ்வின் கோபம் மற்றும் தண்டனையை விட்டும் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும். மூஸா அலை அவர்கள் தனது இறைவனிடம் நடந்துகொண்ட விதம் அவனது கோபத்திலிருந்து அஞ்சிய விதத்ததை கவனிக்கவும்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-አዕራፍ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት