Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል-አዕራፍ   አንቀጽ:
اِنَّ وَلِیِّ اللّٰهُ الَّذِیْ نَزَّلَ الْكِتٰبَ ۖؗ— وَهُوَ یَتَوَلَّی الصّٰلِحِیْنَ ۟
7.196. நிச்சயமாக எனது உதவியாளன் என்னைப் பாதுகாக்கும் அல்லாஹ்வே. அவனைத் தவிர வேறு யாரையும் ஆதரவு வைக்க மாட்டேன். உங்களின் சிலைகளுக்கு நான் அஞ்ச மாட்டேன். அவனே மனிதர்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக என்மீது குர்ஆனை இறக்கினான். அவனே தன் நல்லடியார்களைப் பொறுப்பெடுத்து பாதுகாத்து, உதவி செய்கிறான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَالَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَكُمْ وَلَاۤ اَنْفُسَهُمْ یَنْصُرُوْنَ ۟
7.197. -இணைவைப்பாளர்களே!- நீங்கள் வணங்கும் இந்த சிலைகள் உங்களுக்கு உதவி புரியவோ தமக்குத்தாமே உதவி புரியவோ சக்திபெற மாட்டா. அவை எதற்கும் இயலாதவையாகும். அல்லாஹ்வை விடுத்து எவ்வாறு நீங்கள் அவற்றை வணங்குகிறீர்கள்?
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِنْ تَدْعُوْهُمْ اِلَی الْهُدٰی لَا یَسْمَعُوْا ؕ— وَتَرٰىهُمْ یَنْظُرُوْنَ اِلَیْكَ وَهُمْ لَا یُبْصِرُوْنَ ۟
7.198. -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் சிலைகளை நீங்கள் நேர்வழியின் பக்கம் அழைத்தாலும் உங்களின் அழைப்பை அவை செவியுற மாட்டா. அவை உங்களைப் பார்ப்பது போல் தோன்றும். ஆனால் அவை பார்க்கமுடியாத திண்மப் பொருளாகும். அவர்கள் மனித தோற்றத்தில் அல்லது பிற விலங்குகளின் தோற்றத்தில் சிலைகளைச் செய்பவர்களாக இருந்தனர். அவற்றிற்கு கைகள், கால்கள், கண்கள் இருந்தன. ஆனால் அவை உயிரோ அசைவோ அற்ற திண்மப்பொருளாக இருந்தன.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
خُذِ الْعَفْوَ وَاْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجٰهِلِیْنَ ۟
7.199. -தூதரே!- மக்களிடமிருந்து அவர்கள் மனமுவந்து செய்பவற்றையும் அவர்களுக்கு இயலுமான பண்புகளையும் செயல்களையும் பொருந்திக்கொள்வீராக! அவர்களின் இயல்புக்கு முரணானவற்றை அவர்கள் மீது திணித்துவிடாதீர். அது அவர்களுக்கு வெறுப்பை உண்டாக்கி விடும். அழகிய சொல்லையும் செயலையும் கொண்டு அவர்களுக்குக் கட்டளையிடுவீராக. மூடர்களைப் புறக்கணித்து விடுவீராக. அவர்களின் மூடத்தனத்தால் அவர்களை எதிர்கொண்டு விடாதீர். உமக்குத் தீங்கிழைத்தவருக்கு நீரும் தீங்கிழைக்க வேண்டாம். உமக்குத் வழங்காதவருக்கு நீரும் வழங்காமல் இருக்க வேண்டாம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِمَّا یَنْزَغَنَّكَ مِنَ الشَّیْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ— اِنَّهٗ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
7.200. -தூதரே!- ஷைத்தான் உமக்கு ஏதேனும் ஊசலாட்டத்தை ஏற்படுத்தி விட்டதாக நீர் உணர்ந்தால் அல்லது நன்மையான செயலை விட்டும் உம்மைத் தடுத்தால் அல்லாஹ்வின்பால் அடைக்கலம் பெற்றுக் கொள்வீராக. அவனைப் பற்றிக் கொள்வீராக. ஏனெனில் நீர் கூறுவதை அவன் செவியேற்கக்கூடியவன். அவன் பக்கம் நீர் அடைக்கலம் தேடுவதை அவன் நன்கறிந்தவன். அவன் ஷைத்தானிடமிருந்து உம்மைப் பாதுகாப்பான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّ الَّذِیْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰٓىِٕفٌ مِّنَ الشَّیْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَ ۟ۚ
7.201. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் ஷைத்தானின் ஊசலாட்டத்தால் பாதிக்கப்பட்டு பாவங்கள் புரிந்தால் அல்லாஹ்வின் கண்ணியத்தையும் பாவிகளுக்கு அவன் வழங்கும் தண்டனையையும் கீழ்ப்படிந்தவர்களுக்கு அவன் வழங்கும் நற்கூலியையும் நினைவுகூர்வார்கள். தங்களின் பாவங்களிலிருந்து மன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் திரும்பி விடுவார்கள். எனவே அவர்கள் சத்தியத்தில் நிலைத்து, தாம் செய்தவற்றிலிருந்து விழிப்படைந்து தவிர்ந்து கொள்வார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِخْوَانُهُمْ یَمُدُّوْنَهُمْ فِی الْغَیِّ ثُمَّ لَا یُقْصِرُوْنَ ۟
7.202. ஷைத்தான்களின் சகோதரர்களான பாவிகள் மற்றும் நிராகரிப்பாளர்களை, ஷைத்தான்கள் ஒவ்வொரு பாவம் பாவமாக செய்ய வைத்து மென்மேலும் வழிகெடுத்துக்கொண்டே இருக்கின்றனர். ஷைத்தானும் வழிகெடுப்பதை விட்டு விடுவதில்லை. மனிதர்களில் உள்ள பாவிகளும் ஷைதான்களுக்கு வழிப்பட்டு தீங்கிழைப்பதை விட்டு விடுவதில்லை.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِذَا لَمْ تَاْتِهِمْ بِاٰیَةٍ قَالُوْا لَوْلَا اجْتَبَیْتَهَا ؕ— قُلْ اِنَّمَاۤ اَتَّبِعُ مَا یُوْحٰۤی اِلَیَّ مِنْ رَّبِّیْ ۚ— هٰذَا بَصَآىِٕرُ مِنْ رَّبِّكُمْ وَهُدًی وَّرَحْمَةٌ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
7.203. -தூதரே!- நீர் ஏதேனும் சான்றினைக் கொண்டு வந்தால் உம்மை பொய்யர் என்று கூறி அதனைப் புறக்கணித்து விடுகிறார்கள். நீர் சான்றினைக் கொண்டு வரவில்லையெனில், “உம் புறத்திலிருந்து ஏதேனும் ஒரு சான்றினை புனைந்து கொண்டுவர வேண்டாமா” என்று கேட்கிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் புறத்திலிருந்து சுயமாக என்னால் சான்றினைக் கொண்டுவர முடியாது. அல்லாஹ் எனக்கு வஹியாக அறிவிப்பதையே நான் பின்பற்றுகிறேன். நான் உங்களுக்குப் படித்துக் காட்டும் இந்தக் குர்ஆன் உங்களைப் படைத்து உங்களின் விவகாரங்களை நிர்வகிக்கும் அல்லாஹ்விடமிருந்து சான்றுகளையும் ஆதாரங்களையும் உள்ளடக்கியுள்ளது. அது நம்பிக்கை கொண்ட அடியார்களுக்கு வழிகாட்டியாகவும் கருணையாகவும் இருக்கின்றது. நம்பிக்கை கொள்ளாதவர்களோ வழிகேடர்களாகவும் துர்பாக்கியசாலிகளாகவும் இருக்கின்றார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِذَا قُرِئَ الْقُرْاٰنُ فَاسْتَمِعُوْا لَهٗ وَاَنْصِتُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
7.204. குர்ஆன் படித்துக் காட்டப்பட்டால் படிப்பதை செவிசாய்த்துக் கேளுங்கள். அல்லாஹ் உங்களின் மீது கருணை காட்டும் பொருட்டு படிக்கப்படும் பொழுது பேசவோ வேறு பணிகளில் ஈடுபடவோ செய்யாதீர்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاذْكُرْ رَّبَّكَ فِیْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِیْفَةً وَّدُوْنَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِیْنَ ۟
7.205. -தூதரே!- உம் இறைவனான அல்லாஹ்வை பணிவுடனும் பயத்துடனும் நினைவுகூர்வீராக. உமது பிரார்த்தனையில் உயர்ந்த சப்தமின்றியும் தாழ்ந்த சப்தமின்றியும் நடுநிலையைக் கடைப்பிடிப்பீராக. சிறப்பான இரு நேரங்களான பகலின் ஆரம்பத்திலும் இறுதியிலும் பிரார்த்தனை புரிவீராக. அல்லாஹ்வின் நினைவை விட்டும் அலட்சியமாக இருப்பவர்களில் ஒருவராகிவிடாதீர்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّ الَّذِیْنَ عِنْدَ رَبِّكَ لَا یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَیُسَبِّحُوْنَهٗ وَلَهٗ یَسْجُدُوْنَ ۟
7.206. -தூதரே!- உம் இறைவனிடம் உள்ள வானவர்கள் அவனை வணங்குவதை விட்டும் கர்வம் கொள்வதில்லை. மாறாக சளைக்காமல் அவனுக்கே அடிபணிகிறார்கள். அவர்கள் இரவும் பகலும் அவனுக்குப் பொருத்தமற்ற விஷயங்களை விட்டும் அவனைத் தூய்மைப்படுத்துகிறார்கள். அவனுக்கு மட்டுமே அவர்கள் சிரம்பணிகிறார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• في الآيات بشارة للمسلمين المستقيمين على صراط نبيهم صلى الله عليه وسلم بأن ينصرهم الله كما نصر نبيه وأولياءه.
4. அல்லாஹ்வை வணங்குவதே அறிவாளியின் மீது கடமையாகும். ஏனெனில் அவனே மார்க்கத்தின் முக்கிய விடயங்களை உள்ளடக்கிய வேதங்களை இறக்கி மனிதனுக்கு மார்க்க ரீதியான பயன்களையும் அளிக்கிறான். மேலும் தன் நல்லடியார்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பெடுத்து, அவர்களை எதிர்ப்போரின் விரோதம் அவர்களுக்கு தீங்கிழைக்காதவாறு அவர்களைப் பாதுகாத்து உதவியும் செய்து உலக ரீதியான பயன்களையும் அளிக்கிறான்.

• في الآيات جماع الأخلاق، فعلى العبد أن يعفو عمن ظلمه، ويعطي من حرمه، ويصل من قطعه.
1. நபியவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் அல்லாஹ் உதவி செய்ததுபோல தமது தூதரின் வழியில் நிலைத்திருப்பவர்களுக்கு அவன் உதவி செய்வான் என்ற நற்செய்தி இந்த வசனங்களில் அடங்கியுள்ளது.

• على العبد إذا مَسَّه سوء من الشيطان - فأذنب بفعل محرم، أو ترك واجب - أن يستغفر الله تعالى، ويستدرك ما فرط منه بالتوبة النصوح والحسنات الماحية.
2. வசனங்களில் நற்குணங்களின் தொகுப்பு அடங்கியுள்ளது. அடியான் தனக்கு அநீதி இழைத்தவரை மன்னித்துவிட வேண்டும். தனக்கு வழங்க மறுத்தவனுக்கு அவன் வழங்க வேண்டும். தன்னுடன் தொடர்பை துண்டித்தவர்களுடன் அவன் சேர்ந்து நடக்க வேண்டும்.

• الواجب على العاقل عبادة الله تعالى؛ لأنه هو الذي يحقق له منافع الدين بإنزال الكتاب المشتمل على العلوم العظيمة في الدّين، ومنافع الدنيا بتولّي الصالحين من عباده وحفظه لهم ونصرته إياهم، فلا تضرهم عداوة من عاداهم.
3. அடியான் ஷைத்தானின் ஊசலாட்டத்தின் காரணமாக தடுக்கப்பட்டதை செய்து அல்லது வாஜிபான ஒன்றை விட்டு பாவமிழைத்தால் அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். பாவங்களை அழிக்கக்கூடிய நற்செயல்களைக் கொண்டும் கலப்பற்ற பாவமன்னிப்பைக் கொண்டும் தன்னால் நிகழ்ந்த தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-አዕራፍ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት