Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል-አዕራፍ   አንቀጽ:
قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِیْ نَفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ— وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَیْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَیْرِ ۛۚ— وَمَا مَسَّنِیَ السُّوْٓءُ ۛۚ— اِنْ اَنَا اِلَّا نَذِیْرٌ وَّبَشِیْرٌ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠
7.188. முஹம்மதே! நீர் கூறுவீராக: “எனக்கு நான் பலனளிக்கவோ என்னை விட்டும் தீங்கினை அகற்றவோ நான் சக்தி பெறமாட்டேன். ஆயினும் அல்லாஹ் நாடியவற்றைத் தவிர. அவனுக்கே அந்த ஆற்றல் உண்டு. அல்லாஹ் கற்றுத் தந்ததைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது. நான் மறைவானவற்றை அறியமாட்டேன். அதனை நான் அறிந்திருந்தால் எனக்கு நன்மைகளைக் கொண்டு வரும், என்னை விட்டும் தீங்குகளை அகற்றும் விஷயங்களைச் செய்திருப்பேன். ஏனெனில் ஒவ்வொன்றும் நிகழ்வதற்கு முன்னும் அதன் முடிவு பற்றியும் நான் அறிந்ததனால் அவ்வாறு செய்திருப்பேன். நான் அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்ட தூதரே தவிர வேறில்லை. அவனுடைய வேதனையைக் கொண்டு உங்களை எச்சரிக்கை செய்கிறேன். நான் அல்லாஹ்வின் தூதர் என்பதை நம்பிக்கை கொண்டு நான் கொண்டு வந்ததை உண்மைப்படுத்தும் மக்களுக்கு சங்கையான நன்மை உண்டென நற்செய்தி கூறுகிறேன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِیَسْكُنَ اِلَیْهَا ۚ— فَلَمَّا تَغَشّٰىهَا حَمَلَتْ حَمْلًا خَفِیْفًا فَمَرَّتْ بِهٖ ۚ— فَلَمَّاۤ اَثْقَلَتْ دَّعَوَا اللّٰهَ رَبَّهُمَا لَىِٕنْ اٰتَیْتَنَا صَالِحًا لَّنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ ۟
7.189. -ஆண்கள் பெண்களே!- அவன்தான் உங்களை ஆதம் என்ற ஒரு உயிரிலிருந்து படைத்தான். ஆதமிலிருந்து அவருடைய விலா எலும்பிலிருந்து அவருடைய மனைவி ஹவ்வாவை நிம்மதி பெறுவதற்காகப் படைத்தான். கணவன் மனைவியுடன் கூடிய போது அவள் இலேசாக கர்ப்பமுற்றாள். அது ஆரம்ப கட்டத்தில் இருந்ததால் அவளால் அதை உணர முடியவில்லை. இந்த கர்ப்பத்துடன் அவள் தன் தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டே சென்றாள். எவ்வித சுமையையும் அவள் உணரவில்லை. அவளுடைய வயிற்றில் அது பெரிதானபோது அவள் கனத்தை உணர்ந்த போது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து தங்கள் இறைவனிடம் பின்வருமாறு இறைஞ்சினார்கள்: -“எங்கள் இறைவா!- எங்களுக்கு நீ பரிபூரணமான, ஆரோக்கியமான குழந்தையை அளித்தால் நாங்கள் உன் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தக்கூடியவர்களாக ஆகிவிடுவோம்.”
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَلَمَّاۤ اٰتٰىهُمَا صَالِحًا جَعَلَا لَهٗ شُرَكَآءَ فِیْمَاۤ اٰتٰىهُمَا ۚ— فَتَعٰلَی اللّٰهُ عَمَّا یُشْرِكُوْنَ ۟
7.190. அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று அவர்கள் பிரார்த்தனை செய்தது போல் நல்ல குழந்தையை வழங்கிய போது அவன் தங்களுக்கு கொடையாக வழங்கியவற்றில் இணைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமது குழந்தையை அல்லாஹ் அல்லாதவருக்கு அடிமையாக்கி அதற்கு அப்துல் ஹாரிஸ் (விவசாயியின் அடிமை) எனப் பெயரிட்டனர். எல்லா இணைகளை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அவன் மட்டுமே படைத்துப் பராமரிப்பவன்; வணக்கத்திற்குத் தகுதியானவன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اَیُشْرِكُوْنَ مَا لَا یَخْلُقُ شَیْـًٔا وَّهُمْ یُخْلَقُوْنَ ۟ۚ
7.191. வணக்கத்திலே இந்த சிலைகளையும் மற்றவற்றையும் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்குகிறார்களா? இந்த சிலைகள் வணங்கப்படும் தகுதியைப் பெற, நிச்சயமாக அவை எதையும் படைக்கவில்லை. மாறாக அவையே படைக்கப்பட்டவைதாம், என்பதை அவர்கள் அறிந்தேயுள்ளார்கள். பின்னர் எவ்வாறு இவற்றை அல்லாஹ்வுக்கு இணைகளாக ஆக்கிக் கொண்டார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَلَا یَسْتَطِیْعُوْنَ لَهُمْ نَصْرًا وَّلَاۤ اَنْفُسَهُمْ یَنْصُرُوْنَ ۟
7.192. வணங்கப்படும் இவைகள் தங்களை வணங்கியவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெறாது. ஏன் அவற்றால் தமக்குத் தாமே கூட உதவி செய்துகொள்ள முடியாது. எனவே எவ்வாறு அதனை அவர்கள் வணங்குகின்றனர்!?
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِنْ تَدْعُوْهُمْ اِلَی الْهُدٰی لَا یَتَّبِعُوْكُمْ ؕ— سَوَآءٌ عَلَیْكُمْ اَدَعَوْتُمُوْهُمْ اَمْ اَنْتُمْ صَامِتُوْنَ ۟
7.193. இணைவைப்பாளர்களே! அல்லாஹ்வை விடுத்து நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட சிலைகளை நேர்வழியின் பக்கம் அழைத்தால் அவற்றால் உங்களுக்குப் பதிலளிக்கவோ உங்களைப் பின்பற்றவோ முடியாது. நீங்கள் அவற்றை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் ஒன்றுதான். ஏனெனில் அவை புரிந்துகொள்ளவோ செவியேற்கவோ பேசவோ முடியாத வெறும் திண்மப் பொருள்கள்தாம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُكُمْ فَادْعُوْهُمْ فَلْیَسْتَجِیْبُوْا لَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
7.194. இணைவைப்பாளர்களே! அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கக்கூடியவை அல்லாஹ்வின் படைப்புகள்தாம்; அவனுக்குக் கட்டுப்பட்டவைதாம். இந்த விஷயத்தில் அவர்கள் உங்களைப் போன்றவர்கள். அவர்களை விட நீங்கள் சிறந்தவர்கள். ஏனெனில் நீங்கள் உயிருள்ளவர்கள். பேசுகிறீர்கள், நடக்கிறீர்கள், கேட்கிறீர்கள், பார்க்கிறீர்கள். உங்களின் சிலைகளோ இவ்வாறுகூட இல்லை. அவர்களுக்கு தெய்வீகத் தன்மை இருப்பதாக நீங்கள் கூறும் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழையுங்கள். அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اَلَهُمْ اَرْجُلٌ یَّمْشُوْنَ بِهَاۤ ؗ— اَمْ لَهُمْ اَیْدٍ یَّبْطِشُوْنَ بِهَاۤ ؗ— اَمْ لَهُمْ اَعْیُنٌ یُّبْصِرُوْنَ بِهَاۤ ؗ— اَمْ لَهُمْ اٰذَانٌ یَّسْمَعُوْنَ بِهَا ؕ— قُلِ ادْعُوْا شُرَكَآءَكُمْ ثُمَّ كِیْدُوْنِ فَلَا تُنْظِرُوْنِ ۟
7.195. நீங்கள் தெய்வங்களாக ஆக்கிக் கொண்ட இந்த சிலைகளுக்கு உங்களுடைய தேவைகளுக்காக நடந்து செல்லத்தக்க கால்கள் இருக்கின்றனவா? அல்லது உங்களை விட்டும் தீங்கைத் வலிமையிடன் தடுக்கும் கைகள் இருக்கின்றனவா? அல்லது உங்களால் பார்க்க முடியாதவற்றைப் பார்த்து உங்களுக்கு அறிவிக்கத்தக்க கண்கள் இருக்கின்றனவா? அல்லது உங்களுக்கு மறைவானவற்றைக் கேட்டு அதனை உங்களுக்கு எத்திவைக்கத்தக்க காதுகள் இருக்கின்றனவா? இவற்றில் எதையும் அவை பெறவில்லையெனில், எவ்வாறு அவற்றை நன்மையளித்து தீமையை அகற்றுவதற்காக வணங்குகிறீர்கள்? தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வுக்கு நீங்கள் இணையாக்கியவற்றை அழையுங்கள். பின்னர் நீங்களும் அவர்களும் சேர்ந்து எனக்குக் கேடு விளைவிக்க திட்டம் தீட்டுங்கள். எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• في الآيات بيان جهل من يقصد النبي صلى الله عليه وسلم ويدعوه لحصول نفع أو دفع ضر؛ لأن النفع إنما يحصل من قِبَلِ ما أرسل به من البشارة والنذارة.
1. நபியவர்களை நாடிச்சென்று, பலன் ஏற்படவோ தீங்கினை தடுக்கவோ அவர்களிடம் பிரார்த்தனை புரிவோரின் மடமையை மேற்கூறிய வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஏனெனில் அவருக்கு வழங்கப்பட்ட நற்செய்தி மற்றும் எச்சரிக்கையின் மூலமே பலன் உண்டாகும்.

• جعل الله بمنَّته من نوع الرجل زوجه؛ ليألفها ولا يجفو قربها ويأنس بها؛ لتتحقق الحكمة الإلهية في التناسل.
2. மனைவி கணவனுடன் இணைந்துகொள்வதற்காக, அவளது நெருக்கத்தை வெறுக்காமலிருப்பதற்காகவும் அல்லாஹ் தனது அருளினால் ஆணிலிருந்தே அவனது மனைவியைப் படைத்துள்ளான். ஏனெனில் அதன் மூலமே இனப்பெருக்கத்தில் அல்லாஹ்வின் நோக்கம் நிறைவேறும்.

• لا يليق بالأفضل الأكمل الأشرف من المخلوقات وهو الإنسان أن يشتغل بعبادة الأخس والأرذل من الحجارة والخشب وغيرها من الآلهة الباطلة.
3. பரிபூரணமான, மிகச் சிறந்த படைப்பான மனிதன் தன்னைவிட இழிந்த படைப்புகளான கல்லையும் கட்டையையும் ஏனைய பொய்யான தெய்வங்களையும் வணங்குவது அவனுக்கு உகந்ததல்ல.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-አዕራፍ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት