Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አት-ተውባህ   አንቀጽ:

அத்தவ்பா

ከመዕራፉ ዓላማዎች:
البراءة من المشركين والمنافقين وجهادهم، وفتح باب التوبة للتائبين.
இணைவைப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்களை விட்டு விலகியிருத்தலும் அவர்களுடன் போர்புரிவதும், திருந்துபவர்களுக்கு தவ்பாவின் வாயிலைத் திறந்துவிடுதலும்

بَرَآءَةٌ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۤ اِلَی الَّذِیْنَ عٰهَدْتُّمْ مِّنَ الْمُشْرِكِیْنَ ۟ؕ
9.1. முஸ்லிம்களே! அரேபிய தீபகற்பத்திலே இணைவைப்பாளர்களுடன் நீங்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களிலிருந்து இதோ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக்கொள்கின்றனர். அவை முடிவுற்றதாக அறிவிக்கப்படுகிறது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَسِیْحُوْا فِی الْاَرْضِ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّاعْلَمُوْۤا اَنَّكُمْ غَیْرُ مُعْجِزِی اللّٰهِ ۙ— وَاَنَّ اللّٰهَ مُخْزِی الْكٰفِرِیْنَ ۟
9.2. எனவே இணைவைப்பாளர்களே! இப்பூமியில் நான்கு மாதங்கள் நீங்கள் பாதுகாப்பாக நடமாடலாம். அதற்குப் பின்னர் உங்களுக்கு எந்த ஒப்பந்தமும் பாதுகாப்பும் இல்லை. நீங்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தால் உங்களால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் நிராகரிப்பாளர்களை இவ்வுலகில் கொலை, கைது ஆகியவற்றின் மூலமும் மறுமை நாளில் நரகத்தில் நுழைவிப்பதன் மூலமும் இழிவுபடுத்தியே தீருவான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். இதில் ஒப்பந்தங்களை முறித்தவர்களும், காலம் நிர்ணயிக்காமல் பொதுவாக ஒப்பந்தம் செய்தவர்களும் அடங்குவர். காலம் நிர்ணயித்து ஒப்பந்தம் செய்தவர்களின் ஒப்பந்த காலம் நான்கு மாதத்திற்கு அதிகமாக இருப்பின் அந்த காலம் முடியும் வரை ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاَذَانٌ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۤ اِلَی النَّاسِ یَوْمَ الْحَجِّ الْاَكْبَرِ اَنَّ اللّٰهَ بَرِیْٓءٌ مِّنَ الْمُشْرِكِیْنَ ۙ۬— وَرَسُوْلُهٗ ؕ— فَاِنْ تُبْتُمْ فَهُوَ خَیْرٌ لَّكُمْ ۚ— وَاِنْ تَوَلَّیْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّكُمْ غَیْرُ مُعْجِزِی اللّٰهِ ؕ— وَبَشِّرِ الَّذِیْنَ كَفَرُوْا بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ
9.3. இது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இணைவைப்பாளர்களை விட்டும் விலகிக் கொண்டார்கள் என்று அறுக்கப்படும் ஹஜ்ஜுடைய நாளில் மக்கள் அனைவருக்கும் செய்யப்படும் அறிவிப்பாகும். -இணைவைப்பாளர்களே!- நீங்கள் உங்கள் இணைவைப்பிலிருந்து பாவமன்னிப்புக் கோரினால் அது உங்களுக்குத்தான் நல்லது. நீங்கள் பாவமன்னிப்புக் கோராமல் புறக்கணித்தால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தண்டனையிலிருந்தும் உங்களால் ஒருபோதும் தப்பிவிட முடியாது என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். தூதரே! அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது எனவும் அறிவித்து விடுவீராக.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِلَّا الَّذِیْنَ عٰهَدْتُّمْ مِّنَ الْمُشْرِكِیْنَ ثُمَّ لَمْ یَنْقُصُوْكُمْ شَیْـًٔا وَّلَمْ یُظَاهِرُوْا عَلَیْكُمْ اَحَدًا فَاَتِمُّوْۤا اِلَیْهِمْ عَهْدَهُمْ اِلٰی مُدَّتِهِمْ ؕ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَّقِیْنَ ۟
9.4. ஆயினும் உங்களின் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றிய அதில் எந்தக் குறையும் வைக்காத இணைவைப்பாளர்களுடன் நீங்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுங்கள். அவர்கள் முந்தைய கட்டளையிலிருந்து விதிவிலக்கானவர்கள். ஒப்பந்த காலம் முடியும் வரை அவர்களின் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களை அவன் நேசிக்கிறான். ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுவது அவனது கட்டளையைச் செயல்படுத்துவதில் உள்ளதாகும். துரோகமிழைப்பது அவனது தடுத்தவைகளில் உள்ளதாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَاِذَا انْسَلَخَ الْاَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِیْنَ حَیْثُ وَجَدْتُّمُوْهُمْ وَخُذُوْهُمْ وَاحْصُرُوْهُمْ وَاقْعُدُوْا لَهُمْ كُلَّ مَرْصَدٍ ۚ— فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَخَلُّوْا سَبِیْلَهُمْ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
9.5. நீங்கள் உங்கள் எதிரிகளுக்கு பாதுகாப்பு அளித்த புனிதமான மாதங்கள் கடந்து விட்டால் இணைவைப்பாளர்களை எங்கு கண்டாலும் கொல்லுங்கள். அவர்களை அவர்களது கோட்டைகளுக்குள்ளே முற்றுகையிடுங்கள். அவர்களது பாதைகளில் அவர்களைக் குறிவைத்து காத்திருங்கள். அவர்கள் ஷிர்க்கிலிருந்து நீங்கி தொழுகையைக் கடைப்பிடித்து, தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தையும் வழங்கி விட்டால் அவர்கள் உங்களின் மார்க்க சகோதரர்களாகி விட்டார்கள். எனவே அவர்களுடன் போர் புரிவதை விட்டுவிடுங்கள். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِنْ اَحَدٌ مِّنَ الْمُشْرِكِیْنَ اسْتَجَارَكَ فَاَجِرْهُ حَتّٰی یَسْمَعَ كَلٰمَ اللّٰهِ ثُمَّ اَبْلِغْهُ مَاْمَنَهٗ ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَعْلَمُوْنَ ۟۠
9.6. தூதரே! உயிரும் உடமையும் ஆகுமாக்கப்பட்ட இணைவைப்பாளர்களில் யாரேனும் உம்மிடம் வந்து பாதுகாவல் கோரினால் அவர்கள் குர்ஆனைச் செவியுறும் பொருட்டு அவர்களுக்குப் பாதுகாவல் அளிப்பீராக. பின்னர் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக. ஏனெனில் நிராகரிப்பாளர்கள் இந்த மார்க்கத்தின் உண்மை நிலையை அறியாத மக்களாக இருக்கிறார்கள். அவர்கள் குர்ஆனை செவியேற்பதன் மூலம் இதன் உண்மை நிலையை அறிந்து கொண்டால் சில வேளை நேர்வழியடையலாம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• في الآيات دليل واضح على حرص الإسلام على تسوية العلاقات الخارجية مع الأعداء على أساس من السّلم والأمن والتّفاهم.
1. சமாதானம், பாதுகாப்பு மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் எதிரிகளுடனான வெளியுறவுத் தொடர்புகளை முடிவு செய்து கொள்வதில் இஸ்லாம் ஆர்வம் காட்டுகிறது என்பதற்கு மேற்கூறிய வசனங்கள் தெளிவான ஆதாரமாகும்.

• الإسلام يُقَدِّر العهود، ويوجب الوفاء بها، ويجعل حفظها نابعًا من الإيمان، وملازمًا لتقوى الله تعالى.
2. இஸ்லாம் ஒப்பந்தங்களை மதிக்கிறது. அவற்றை முழுமையாக நிறைவேற்றும்படி கட்டளையிடுகிறது. அதனைப் பேணுவதை ஈமானின் அம்சமாகவும் இறையச்சமாகவும் ஆக்குகிறது.

• أَنَّ إقامة الصّلاة وإيتاء الزّكاة دليل على الإسلام، وأنهما يعصمان الدّم والمال، ويوجبان لمن يؤدّيهما حقوق المسلمين من حفظ دمه وماله إلا بحق الإسلام؛ كارتكاب ما يوجب القتل من قتل النفس البريئة، وزنى الزّاني المُحْصَن، والرّدّة إلى الكفر بعد الإيمان.
3. தொழுகையைக் கடைப்பிடிப்பதும் ஸகாத்தை வழங்குவதும் ஒருவரின் இஸ்லாத்திற்கான அடையாளமாகும். அவை அவரது உயிரையும் உடமையையும் பாதுகாக்கின்றன. அவ்விரண்டையும் நிறைவேற்றுபவருக்கு முஸ்லிம்களுக்குரிய உரிமைகளான உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு உண்டு. இஸ்லாம் கூறும் காரணங்களான குற்றமற்ற ஒருவரைக் கொலை செய்தல், திருமணமான பின் விபச்சாரம் புரிதல், ஈமான்கொண்ட பிறகு நிராகரித்தல் போன்றவற்றுக்கே தவிர.

• مشروعيّة الأمان؛ أي: جواز تأمين الحربي إذا طلبه من المسلمين؛ ليسمع ما يدلّ على صحّة الإسلام، وفي هذا سماحة وتكريم في معاملة الكفار، ودليل على إيثار السِّلم.
4. முஸ்லிம்களை எதிர்த்துப் போரிடும் ஒருவர் அவர்களிடத்தில் பாதுகாப்பு வழங்குமாறு கோரினால் இஸ்லாம் உண்மையானது என்பதற்கான ஆதாரங்களை செவிமடுக்கும் பொருட்டு பாதுகாப்பளிப்பது ஆகுமானதாகும். நிராகரிப்பாளர்களுடன் விட்டுக் கொடுப்பு, கவ்ரவமாக நடந்து கொள்வதும் சமாதானத்தை முற்படுத்துவதற்கான ஆதாரமும் இதில் உள்ளது.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አት-ተውባህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት