Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አት-ተውባህ   አንቀጽ:
كَالَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ كَانُوْۤا اَشَدَّ مِنْكُمْ قُوَّةً وَّاَكْثَرَ اَمْوَالًا وَّاَوْلَادًا ؕ— فَاسْتَمْتَعُوْا بِخَلَاقِهِمْ فَاسْتَمْتَعْتُمْ بِخَلَاقِكُمْ كَمَا اسْتَمْتَعَ الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ بِخَلَاقِهِمْ وَخُضْتُمْ كَالَّذِیْ خَاضُوْا ؕ— اُولٰٓىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
9.69. நயவஞ்சகர்களே! நிராகரிப்பிலும் பரிகாசம் செய்வதிலும் நீங்கள் உங்களுக்கு முன்னர் நிராகரித்த சமூகங்களைப் போன்றவர்கள்தாம். அவர்கள் உங்களைவிட அதிக பலமும் பணமும் பிள்ளைகளும் உடையவர்களாக இருந்தார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட உலக இன்பங்களையும் ஆசாபாசங்களையும் அவர்கள் அனுபவித்தார்கள். -நயவஞ்சகர்களே!- நிராகரித்த உங்களுக்கு முந்தைய சமூகங்கள் தமது பங்கை அனுபவித்ததைப் போலவே நீங்களும் உங்களுக்கு விதிக்கப்பட்ட பங்கை அனுபவியுங்கள். அவர்கள் சத்தியத்தை நிராகரித்து தங்களின் தூதர்களைக் குறை கூறியதைப் போலவே நீங்களும் சத்தியத்தை நிராகரித்து தூதரைக் குறை கூறியுள்ளீர்கள். இழிவான இந்த பண்புகளை உடையவர்களின் செயல்கள் நிராகரிப்பினால் அல்லாஹ்விடத்தில் வீணாகிவிட்டதனால் அவைகள் பயனற்றுவிட்டன. இவர்கள் தாம் தங்களை அழிவில் ஆழ்த்தி தமக்குத் தாமே இழப்பை ஏற்படுத்திக் கொண்ட நஷ்டவாளிகளாவர்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اَلَمْ یَاْتِهِمْ نَبَاُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۙ۬— وَقَوْمِ اِبْرٰهِیْمَ وَاَصْحٰبِ مَدْیَنَ وَالْمُؤْتَفِكٰتِ ؕ— اَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ— فَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
9.70. நிராகரித்த சமூகங்களான நூஹ், ஹூத், ஸாலிஹ், இப்ராஹீம் ஆகியோரின் சமுதாயங்களும் மத்யன்வாசிகளும், லூத்தின் சமூகமும் செய்தவை, அவர்களுக்குக் கிடைத்த தண்டனை பற்றிய தகவல் இந்த நயவஞ்சகர்களை அடையவில்லையா? அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. அவனது தூதர்கள் அவர்களை எச்சரித்திருந்தனர். ஆயினும் அவர்கள் அல்லாஹ்வையும் அவன் அனுப்பிய தூதர்களையும் நிராகரித்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைப்பவர்களாக இருந்தனர்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ۘ— یَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَیُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَیُطِیْعُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ— اُولٰٓىِٕكَ سَیَرْحَمُهُمُ اللّٰهُ ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
9.71. நம்பிக்கைகொண்ட ஆண்களும் பெண்களும் அவர்களை ஒன்றிணைக்கும் நம்பிக்கையின் காரணமாக ஒருவருக்கொருவர் உதவியாளர்களாக இருக்கின்றார்கள். அல்லாஹ்வுக்கு விருப்பமான ஏகத்துவம் தொழுகை போன்ற பல்வேறு நற்காரியங்களையும் செய்யத் தூண்டுகிறார்கள்; நிராகரிப்பு, வட்டி போன்ற அல்லாஹ் வெறுக்கும் அனைத்துவிதமான தீயகாரியங்களை விட்டும் தடுக்கிறார்கள். தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுகிறார்கள். சிறப்பிற்குரிய இந்த பண்புகளை உடையவர்களை அல்லாஹ் தன் அருளில் பிரவேசிக்கச் செய்வான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பில், தன் திட்டமிடலில், தான் வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَعَدَ اللّٰهُ الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا وَمَسٰكِنَ طَیِّبَةً فِیْ جَنّٰتِ عَدْنٍ ؕ— وَرِضْوَانٌ مِّنَ اللّٰهِ اَكْبَرُ ؕ— ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟۠
9.72. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் மறுமை நாளில் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வதாக அல்லாஹ் வாக்களிக்கிறான். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு மரணம் என்பதே கிடையாது. அவர்களது இன்பங்கள் முடிவடையாது. நிலையான சுவனங்களில் உள்ள அழகிய வசிப்பிடங்களில் அவன் அவர்களை பிரவேசிக்கச் செய்வதாக வாக்களித்துவிட்டான். அவைகள் அனைத்தையும் விட சிறந்தது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் இறைதிருப்தியாகும். மேற்கூறப்பட்ட இந்த வெகுமதிதான் மகத்தான வெற்றியாகும். வேறு எந்த வெற்றியும் இதனை நெருங்க முடியாது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• سبب العذاب للكفار والمنافقين واحد في كل العصور، وهو إيثار الدّنيا على الآخرة والاستمتاع بها، وتكذيب الأنبياء والمكر والخديعة والغدر بهم.
1. எல்லா காலகட்டங்களிலும் நிராகரிப்பாளர்களுக்கு நயவஞ்சகர்களுக்கும் வழங்கப்படும் தண்டனைக்கான காரணம் ஒன்றுதான். அது, அவர்கள் மறுமையைவிட இவ்வுலக இன்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்; இறைத் தூதர்களை நிராகரித்து அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதாகும்.

• إهلاك الأمم والأقوام الغابرة بسبب كفرهم وتكذيبهم الأنبياء فيه عظة وعبرة للمعتبر من العقلاء.
2. முந்தைய சமூகங்கள் தங்களின் நிராகரிப்பினாலும் இறைத்தூதர்களை மறுத்ததனாலும் அழிக்கப்பட்டார்கள். இதில் அறிவுடையவர்களுக்கு அறிவுரையும் படிப்பினையும் இருக்கின்றது.

• أهل الإيمان رجالًا ونساء أمة واحدة مترابطة متعاونة متناصرة، قلوبهم متحدة في التوادّ والتحابّ والتعاطف.
3. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி புரிந்துகொள்ளும் பின்னிப்பினைந்த ஒரு சமுதாயமாகும். அன்பு, பாசம் மற்றும் அனுதாபம் ஆகியவற்றில் அவர்களது உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும்.

• رضا رب الأرض والسماوات أكبر من نعيم الجنات؛ لأن السعادة الروحانية أفضل من الجسمانية.
4. பூமி மற்றும் வானங்களின் இறைவனின் திருப்பொருத்தம் சுவன இன்பங்களை விட பெரியதாகும். ஏனெனில் ஆன்மீக மகிழ்ச்சி உடலியல் மகிழ்ச்சியை விட சிறந்ததாகும்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አት-ተውባህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት