Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አት-ተውባህ   አንቀጽ:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قَاتِلُوا الَّذِیْنَ یَلُوْنَكُمْ مِّنَ الْكُفَّارِ وَلْیَجِدُوْا فِیْكُمْ غِلْظَةً ؕ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟
9.123. அருகில் இருக்கும் நிராகரிப்பாளர்கள் நம்பிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அவர்களுடன் போரிடும்படி நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அதேபோன்று அவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அவர்களின் தீங்குகளிலிருந்து தப்பிப்பதற்காகவும் பலத்தை அவர்களிடம் வெளிப்படுத்தும்படியும் கட்டளையிடுகிறான். அல்லாஹ் உதவி செய்வதன் மூலம், அவர்களை உறுதிப்படுத்துவதன் மூலம் தன்னை அஞ்சக்கூடிய நம்பிக்கையாளர்களுடன் இருக்கின்றான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ فَمِنْهُمْ مَّنْ یَّقُوْلُ اَیُّكُمْ زَادَتْهُ هٰذِهٖۤ اِیْمَانًا ۚ— فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا فَزَادَتْهُمْ اِیْمَانًا وَّهُمْ یَسْتَبْشِرُوْنَ ۟
9.124. அல்லாஹ் தன் தூதர் மீது ஏதேனும் அத்தியாயத்தை இறக்கினால் நயவஞ்சகர்களில் சிலர் சிலரிடம், “உங்களில் இந்த அத்தியாயம் யாருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தியது” என்று பரிகாசமாகக் கேட்கிறார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரை உண்மைப்படுத்தியவர்களுக்கு இறக்கப்பட்ட அத்தியாயம் அவர்களின் நம்பிக்கையோடு இன்னும் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவர்கள் இறக்கப்பட்ட வஹியால் அதில் அடங்கியுள்ள உலக மற்றும் மறுமை ரீதியான பயன்களால் மகிழ்ச்சியடைகிறார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاَمَّا الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا اِلٰی رِجْسِهِمْ وَمَاتُوْا وَهُمْ كٰفِرُوْنَ ۟
9.125. ஆனால் நயவஞ்சகர்களுக்கோ குர்ஆன் இறங்குவது - அவர்களின் நிராகரிப்பினால் - அவர்களின் நோயையும் உளரீதியான அழுக்குகளையுமே அதிகப்படுத்துகிறது. இறக்கப்பட்ட குர்ஆனின்மூலம் அவர்களின் உள்ளங்களில் இருந்த நோய் இன்னும் அதிமாகிவிட்டது. ஏனெனில் அவர்கள் குர்ஆனிலிருந்து எந்தவொன்று இறங்கினாலும் அதில் சந்தேகம் கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اَوَلَا یَرَوْنَ اَنَّهُمْ یُفْتَنُوْنَ فِیْ كُلِّ عَامٍ مَّرَّةً اَوْ مَرَّتَیْنِ ثُمَّ لَا یَتُوْبُوْنَ وَلَا هُمْ یَذَّكَّرُوْنَ ۟
9.126. ஆண்டிற்கு ஒரு முறையோ இரு முறையோ அல்லாஹ் அவர்களின் நிலமையை அம்பலப்படுத்தி நயவஞ்சகத்தனத்தை வெளிப்படுத்தி அவர்களை சோதனைக்குள்ளாக்குவதைக் கொண்டு அவர்கள் படிப்பினை பெறவில்லையா? அல்லாஹ்தான் இவ்வாறு செய்கிறான் என்பதை அவர்கள் அறிந்திருந்தும் அவர்களின் நிராகரிப்பிலிருந்து மீளாமலும் நயவஞ்சத்திலிருந்து விடுபடாமலும் உள்ளனர்! அவர்களுக்கு இறங்கிய சோதனையையும், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது என்பதையும் அவர்கள் நினைவில் வைத்திருப்பதும் இல்லை!
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ نَّظَرَ بَعْضُهُمْ اِلٰی بَعْضٍ ؕ— هَلْ یَرٰىكُمْ مِّنْ اَحَدٍ ثُمَّ انْصَرَفُوْا ؕ— صَرَفَ اللّٰهُ قُلُوْبَهُمْ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟
9.127. நயவஞ்சகர்களைக் குறித்து கூறப்படும் ஏதேனும் ஒரு அத்தியாயத்தை அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கினால் நயவஞ்சகர்கள், “உங்களை யாராவது பார்க்கிறார்களா?” என்று கூறியவர்களாக அவர்களில் ஒருவரையொருவர் பார்க்கின்றனர். யாரும் அவர்களைப் பார்க்கவில்லையெனில் அவையை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்களின் உள்ளங்களை நேர்வழி மற்றும் நலவை விட்டும் திருப்பி விட்டான், அவர்களைக் கைவிட்டு விட்டான். ஏனெனில் அவர்கள் விளங்கிக் கொள்ளாத மக்களாக இருக்கிறார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
لَقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِیْزٌ عَلَیْهِ مَا عَنِتُّمْ حَرِیْصٌ عَلَیْكُمْ بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟
9.128. அரபுக்களே! உங்கள் இனத்திலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் உங்களைப் போன்ற அரபியாவார். உங்களுக்கு சிரமம் ஏற்படுவது அவருக்கு சிரமமாக இருக்கின்றது. உங்களுக்கு வழிகாட்டுவதிலும் உங்களின் மீது அக்கறை காட்டுவதிலும் அவர் மிகவும் ஆசையுடையவர். குறிப்பாக நம்பிக்கையாளர்களின் மீது பரிவுடையவராகவும் கருணையாளராகவும் அவர் இருக்கின்றார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَاِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِیَ اللّٰهُ ۖؗ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ— عَلَیْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ ۟۠
9.129. -தூதரே!- அவர்கள் உம்மைப் புறக்கணித்து நீர் கொண்டு வந்துள்ளதன் மீது நம்பிக்கை கொள்ளவில்லையெனில் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவனையே நான் சார்ந்துள்ளேன். அவன் மகத்தான அரியணையின் அதிபதியாவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• وجوب ابتداء القتال بالأقرب من الكفار إذا اتسعت رقعة الإسلام، ودعت إليه حاجة.
1. இஸ்லாமிய நாடு பரந்து விரிந்து விட்டால் தேவை ஏற்படின் அருகிலிருக்கும் நிராகரிப்பாளர்களுடன் போரை ஆரம்பிப்பதே கடமையாகும்.

• بيان حال المنافقين حين نزول القرآن عليهم وهي الترقُّب والاضطراب.
2. குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் நயவஞ்சகர்களின் நிலை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்பார்ப்புடனும் பதற்றத்துடனும் காணப்படுவார்கள்.

• بيان رحمة النبي صلى الله عليه وسلم بالمؤمنين وحرصه عليهم.
3. நம்பிக்கையாளர்களின் மீது நபியவர்கள் வைத்துள்ள அன்பும் ஆர்வமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• في الآيات دليل على أن الإيمان يزيد وينقص، وأنه ينبغي للمؤمن أن يتفقد إيمانه ويتعاهده فيجدده وينميه؛ ليكون دائمًا في صعود.
4. ஈமான் அதிகரிக்கும், குறையும். நம்பிக்கையாளன் எப்போதும் உயர்வை நோக்கி செல்வதற்காக தனது ஈமானில் கவனம் செலுத்தி அதனைப் புதுப்பித்து, அதிகரிக்கும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு மேற்கூறிய வசனங்கள் சான்றாக உள்ளன.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አት-ተውባህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት