Check out the new design

Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Translations’ Index


Translation of the meanings Surah: Ash-Sharh   Ayah:

அஷ்ஷரஹ்

Purposes of the Surah:
المنة على النبي صلى الله عليه وسلم بتمام النعم المعنوية عليه.
மானசீகமான அருட்கொடைகளை பரிபூரணப்படுத்தி நபி(ஸல்) அவர்கள் மீது அருள்புரிதல்

اَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ۟ۙ
உமது உள்ளத்தைத் உமக்கு விரிவுபடுத்தி, வஹியைப் பெறுவதை உமக்கு விருப்பத்திற்குரியாதாக மாற்றினோம்.
Arabic explanations of the Qur’an:
وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ ۟ۙ
உமது முன்னைய பாவங்களை உமக்கு மன்னித்துவிட்டோம். உம்மீதிருந்த அறியாமைக்கால சுமையை உம்மை விட்டும் இறக்கிவிட்டோம்.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• منزلة النبي صلى الله عليه وسلم عند ربه لا تدانيها منزلة.
1. தனது இறைவனிடம் நபியவர்களுக்குள்ள ஈடு இணையற்ற அந்தஸ்து.

• شكر النعم حقّ لله على عبده.
2. அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவது அல்லாஹ்வுக்கு அடியான் செய்ய வேண்டிய கடமையாகும்.

• وجوب الرحمة بالمستضعفين واللين لهم.
3. பலவீனர்களுக்கு கருணை காட்டுதல் மற்றும் அவர்களுடன் மிருதுவாக நடப்பதன் அவசியம்.

الَّذِیْۤ اَنْقَضَ ظَهْرَكَ ۟ۙ
94.3. உமது முதுகை உடைத்துவிடும் அளவுக்கு அது உம்மை சிரமப்படுத்தியிருந்தது.
Arabic explanations of the Qur’an:
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ۟ؕ
94.4. மேலும் நாம் உம் புகழை உயர்த்தினோம். பாங்கு, இகாமத் மற்றும் இன்னபிறவற்றிலும் நீர் நினைவுகூறப்படுகிறவராக மாறிவிட்டீர்.
Arabic explanations of the Qur’an:
فَاِنَّ مَعَ الْعُسْرِ یُسْرًا ۟ۙ
94.5. ஆகவே நிச்சயமாக நெருக்கடி, கஷ்டத்துடனே விரிவும் இலகுவும் நிவாரணமும் இருக்கிறது.
Arabic explanations of the Qur’an:
اِنَّ مَعَ الْعُسْرِ یُسْرًا ۟ؕ
94.6. நிச்சயமாக நெருக்குதல், கஷ்டத்துடனே விரிவும், இலகுவும், நிவாரணமும் இருக்கிறது. நீர் அதனை அறிந்தால் உம் சமூகம் உமக்கு அளிக்கும் துன்பங்கள், உமக்குப் பெரிதாகத் தெரியாது. அது அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதை விட்டும் உம்மைத் தடுக்கவும் மாட்டாது.
Arabic explanations of the Qur’an:
فَاِذَا فَرَغْتَ فَانْصَبْ ۟ۙ
94.7. நீர் உம் பணிகளிலிருந்து விடுபட்டவுடன் உம் இறைவனை வணங்குவதில் முழு முயற்சி செய்வீராக.
Arabic explanations of the Qur’an:
وَاِلٰی رَبِّكَ فَارْغَبْ ۟۠
94.8. உம் ஆர்வத்தையும் விருப்பத்தையும் அல்லாஹ்வின் பக்கம் மட்டுமே அமைத்துக் கொள்வீராக.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• رضا الله هو المقصد الأسمى.
அல்லாஹ் தனது நபியின் புகழை உயர்த்தியதன் மூலம் அவரை கண்ணிப்படுத்தல்

• أهمية القراءة والكتابة في الإسلام.
1. அல்லாஹ்வின் திருப்தியே உன்னத நோக்கமாகும்.

• خطر الغنى إذا جرّ إلى الكبر والبُعد عن الحق.
2. இஸ்லாத்தில் வாசிப்பு மற்றும் எழுத்து ஆகியவற்றுக்குள்ள முக்கியத்துவம்.

• النهي عن المعروف صفة من صفات الكفر.
3. கர்வம், சத்தியத்தை விட்டும் தூரமாதல் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும் செல்வத்தின் விபரீதம்

• إكرام الله تعالى نبيه صلى الله عليه وسلم بأن رفع له ذكره.
4. நன்மையான செயல்களைவிட்டுத் தடுப்பது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும்.

 
Translation of the meanings Surah: Ash-Sharh
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Translations’ Index

Issued by Tafsir Center for Quranic Studies

close