Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
102 : 21

لَا یَسْمَعُوْنَ حَسِیْسَهَا ۚ— وَهُمْ فِیْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ ۟ۚ

அவர்கள் அதனுடைய சப்தத்தை செவியுறமாட்டார்கள். அவர்கள் தங்களது உள்ளங்கள் விரும்பியவற்றில் நிரந்தரமாக இருப்பார்கள். info
التفاسير:

external-link copy
103 : 21

لَا یَحْزُنُهُمُ الْفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ؕ— هٰذَا یَوْمُكُمُ الَّذِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ۟

மிகப்பெரிய திடுக்கம் அவர்களை கவலைக்குள்ளாக்காது. வானவர்கள் அவர்களை வரவேற்பார்கள். “நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த உங்கள் நாள் இதுதான்” (என்று வாழ்த்துவார்கள்). info
التفاسير:

external-link copy
104 : 21

یَوْمَ نَطْوِی السَّمَآءَ كَطَیِّ السِّجِلِّ لِلْكُتُبِ ؕ— كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِیْدُهٗ ؕ— وَعْدًا عَلَیْنَا ؕ— اِنَّا كُنَّا فٰعِلِیْنَ ۟

ஏடுகளை புத்தகங்களின் மீது சுருட்டுவதைப் போன்று வானத்தை நாம் சுருட்டுகின்ற நாளில்... (திடுக்கம் அவர்களை கவலைக்குள்ளாக்காது.) படைப்பின் முதலாவதை நாம் தொடங்கியது போன்றே அதை மீண்டும் (பழைய நிலைக்கே -இல்லாமைக்கே) திருப்பி விடுவோம். (அனைத்தையும் அழித்து விடுவோம்.) இது நம்மீது கடமையான வாக்காகும். நிச்சயமாக நாம் (இதை) செய்(து முடிப்)பவர்களாகவே இருக்கிறோம். info
التفاسير:

external-link copy
105 : 21

وَلَقَدْ كَتَبْنَا فِی الزَّبُوْرِ مِنْ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ یَرِثُهَا عِبَادِیَ الصّٰلِحُوْنَ ۟

“லவ்ஹுல் மஹ்ஃபூழ்” (-விதியின் தாய் நூலில்) எழுதப்பட்டதற்குப் பின்னர். (இறைத்தூதர்கள் மீது இறக்கப்பட்ட) வேதங்களில் திட்டவட்டமாக நாம் எழுதினோம். (விதித்தோம்). நிச்சயமாக (சொர்க்கத்தின்) பூமி -அதை எனது நல்லடியார்கள் அனந்தரமாக அடைவார்கள். info
التفاسير:

external-link copy
106 : 21

اِنَّ فِیْ هٰذَا لَبَلٰغًا لِّقَوْمٍ عٰبِدِیْنَ ۟ؕ

நிச்சயமாக இதில் (-இந்த குர்ஆனில்) வணங்குகின்ற மக்களுக்கு போதுமான அறிவுரை இருக்கிறது. info
التفاسير:

external-link copy
107 : 21

وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّلْعٰلَمِیْنَ ۟

(நபியே!) உம்மை அகிலத்தார்களுக்கு ஓர் அருளாகவே தவிர நாம் அனுப்பவில்லை. info
التفاسير:

external-link copy
108 : 21

قُلْ اِنَّمَا یُوْحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ— فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟

(நபியே!) நீர் கூறுவீராக! எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் நிச்சயமாக (வணங்கத் தகுதியான) உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான். நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடப்பீர்களா? (இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களாக ஆகிவிடுங்கள்.) info
التفاسير:

external-link copy
109 : 21

فَاِنْ تَوَلَّوْا فَقُلْ اٰذَنْتُكُمْ عَلٰی سَوَآءٍ ؕ— وَاِنْ اَدْرِیْۤ اَقَرِیْبٌ اَمْ بَعِیْدٌ مَّا تُوْعَدُوْنَ ۟

அவர்கள் விலகிச் சென்றால் நீர் கூறிவிடுவீராக! மிகத் தெளிவாக உங்களுக்கு நான் அறிவித்து விட்டேன், (“நமக்கும் உங்களுக்கும் இடையில் எவ்வித உடன்பாடும் இல்லை என்று”). நீங்கள் வாக்களிக்கப்பட்டது சமீபமாக உள்ளதா அல்லது தூரமாக உள்ளதா என்று நான் அறியமாட்டேன். (என்பதையும் அறிவித்து விடுவீராக!). info
التفاسير:

external-link copy
110 : 21

اِنَّهٗ یَعْلَمُ الْجَهْرَ مِنَ الْقَوْلِ وَیَعْلَمُ مَا تَكْتُمُوْنَ ۟

நிச்சயமாக அவன் பேச்சில் வெளிப்படையானதை அறிவான். நீங்கள் மறைப்பதையும் (உள்ளத்தின் எண்ணங்களையும்) அவன் அறிவான். info
التفاسير:

external-link copy
111 : 21

وَاِنْ اَدْرِیْ لَعَلَّهٗ فِتْنَةٌ لَّكُمْ وَمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟

அது (-தண்டனை அல்லது மறுமை தாமதமாகுவது) உங்களுக்கு சோதனையாகவும் ஒரு நேரம் வரை இன்பமாகவும் இருக்கலாம், நான் (அதை) அறியமாட்டேன். info
التفاسير:

external-link copy
112 : 21

قٰلَ رَبِّ احْكُمْ بِالْحَقِّ ؕ— وَرَبُّنَا الرَّحْمٰنُ الْمُسْتَعَانُ عَلٰی مَا تَصِفُوْنَ ۟۠

(நபி முஹம்மது) கூறினார்: என் இறைவா! சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பாயாக! எங்கள் இறைவனாகிய ரஹ்மானிடம் நீங்கள் (வகை வகையாக பொய்களை) வர்ணிப்பதற்கு எதிராக உதவி தேடப்படுகிறது. info
التفاسير: