Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
36 : 21

وَاِذَا رَاٰكَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ یَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ— اَهٰذَا الَّذِیْ یَذْكُرُ اٰلِهَتَكُمْ ۚ— وَهُمْ بِذِكْرِ الرَّحْمٰنِ هُمْ كٰفِرُوْنَ ۟

(நபியே!) நிராகரிப்பாளர்கள் உம்மைப் பார்த்தால், “இவரா உங்களது கடவுள்களை விமர்சிக்கிறார்” என்று கூறி உம்மை பரிகாசமாகவே தவிர எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அவர்களோ ரஹ்மா(ன் அளவற்ற அருளாளன் என்று இறைவ)னின் பெயரைக் கூறுவதையும் மறுக்கின்றனர். info
التفاسير:

external-link copy
37 : 21

خُلِقَ الْاِنْسَانُ مِنْ عَجَلٍ ؕ— سَاُورِیْكُمْ اٰیٰتِیْ فَلَا تَسْتَعْجِلُوْنِ ۟

மனிதன் விரைவாக படைக்கப்பட்டான். எனது (வேதனையின்) அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்போம். என்னிடம் அவசரப்படாதீர்கள். info
التفاسير:

external-link copy
38 : 21

وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

நீங்கள் (-நபியும், நம்பிக்கையாளர்களும்) உண்மையாளர்களாக இருந்தால் (வேதனை வரும் எனும்) இந்த வாக்குறுதி எப்போது (வரும்) என அவர்கள் கூறுகிறார்கள். info
التفاسير:

external-link copy
39 : 21

لَوْ یَعْلَمُ الَّذِیْنَ كَفَرُوْا حِیْنَ لَا یَكُفُّوْنَ عَنْ وُّجُوْهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُوْرِهِمْ وَلَا هُمْ یُنْصَرُوْنَ ۟

தங்களது முகங்களை விட்டும் தங்களது முதுகுகளை விட்டும் நரக நெருப்பை தடுக்கமாட்டார்களே, இன்னும் அவர்கள் உதவிசெய்யப்பட மாட்டார்களே (அந்த) நேரத்தை நிராகரிப்பாளர்கள் அறிந்து கொண்டால்... (நிராகரிப்பிலிருந்து விலகி நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.) info
التفاسير:

external-link copy
40 : 21

بَلْ تَاْتِیْهِمْ بَغْتَةً فَتَبْهَتُهُمْ فَلَا یَسْتَطِیْعُوْنَ رَدَّهَا وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟

மாறாக, அது (-நரக நெருப்பு) அவர்களிடம் திடீரென வரும். அது அவர்களை திடுக்கிடச் செய்யும். அவர்கள் அதை தடுப்பதற்கு இயல மாட்டார்கள். இன்னும் அவர்கள் தாமதிக்கப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
41 : 21

وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِیْنَ سَخِرُوْا مِنْهُمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠

உமக்கு முன்னர் பல தூதர்களை பரிகசிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எதை பரிகசித்துக் கொண்டிருந்தார்களோ அது அவர்களில் ஏளனம் செய்தவர்களை வந்து இறங்கியது. info
التفاسير:

external-link copy
42 : 21

قُلْ مَنْ یَّكْلَؤُكُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ مِنَ الرَّحْمٰنِ ؕ— بَلْ هُمْ عَنْ ذِكْرِ رَبِّهِمْ مُّعْرِضُوْنَ ۟

(நபியே!) கூறுவீராக! ரஹ்மானிடமிருந்து இரவிலும் பகலிலும் உங்களை பாதுகாப்பவர் யார்? மாறாக, அவர்கள் தங்கள் இறைவனின் அறிவுரையை (-குர்ஆனை) புறக்கணிக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
43 : 21

اَمْ لَهُمْ اٰلِهَةٌ تَمْنَعُهُمْ مِّنْ دُوْنِنَا ؕ— لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَ اَنْفُسِهِمْ وَلَا هُمْ مِّنَّا یُصْحَبُوْنَ ۟

அவர்களை (நம்மிடமிருந்து) பாதுகாக்கின்ற கடவுள்கள் நம்மை அன்றி அவர்களுக்கு உண்டா? அவர்கள் (-அந்த கடவுள்கள்) தங்களுக்கு உதவுவதற்கே இயலமாட்டார்கள். இன்னும் அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) நம்மிடமிருந்து பாதுகாக்கப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
44 : 21

بَلْ مَتَّعْنَا هٰۤؤُلَآءِ وَاٰبَآءَهُمْ حَتّٰی طَالَ عَلَیْهِمُ الْعُمُرُ ؕ— اَفَلَا یَرَوْنَ اَنَّا نَاْتِی الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ— اَفَهُمُ الْغٰلِبُوْنَ ۟

மாறாக, இவர்களுக்கும் இவர்களின் மூதாதைகளுக்கும் (இவ்வுலக வாழ்க்கையில்) சுகமளித்தோம். இறுதியாக இவர்களுக்கு வாழ்க்கை நீண்டது. நிச்சயமாக நாம் பூமியை அதன் சுற்றுப்புறங்களிலிருந்து அழித்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஆகவே, இவர்கள் (மட்டும் நமது இத்தூதரை) மிகைத்துவிடுவார்களா? info
التفاسير: