Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
39 : 22

اُذِنَ لِلَّذِیْنَ یُقٰتَلُوْنَ بِاَنَّهُمْ ظُلِمُوْا ؕ— وَاِنَّ اللّٰهَ عَلٰی نَصْرِهِمْ لَقَدِیْرُ ۟ۙ

சண்டையிடப்படக் கூடியவர்களுக்கு நிச்சயமாக அவர்கள் அநீதியிழைக்கப்பட்டார்கள் என்பதற்காக (எதிர்த்து போர்புரிய) அனுமதிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவன். info
التفاسير:

external-link copy
40 : 22

١لَّذِیْنَ اُخْرِجُوْا مِنْ دِیَارِهِمْ بِغَیْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ یَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ ؕ— وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِیَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ یُذْكَرُ فِیْهَا اسْمُ اللّٰهِ كَثِیْرًا ؕ— وَلَیَنْصُرَنَّ اللّٰهُ مَنْ یَّنْصُرُهٗ ؕ— اِنَّ اللّٰهَ لَقَوِیٌّ عَزِیْزٌ ۟

அவர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து எவ்வித நியாயமுமின்றி வெளியேற்றப் பட்டார்கள், எங்கள் இறைவன் அல்லாஹ் என்று அவர்கள் கூறுவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும் அவர்கள் வெளியேற்றப்படவில்லை). மக்களை அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு அல்லாஹ் பாதுகாப்பது இல்லை என்றால் துறவிகளின் தங்குமிடங்களும் கிறித்துவ ஆலயங்களும் யூத ஆலயங்களும் அதிகமாக அல்லாஹ்வின் பெயர் நினைவு கூரப்படும் மஸ்ஜிதுகளும் உடைக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக எவர் அவனுக்கு (அல்லாஹ்விற்கு) உதவுவாரோ அவருக்கு அல்லாஹ் உதவுவான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை உள்ளவன், மிகைத்தவன். info
التفاسير:

external-link copy
41 : 22

اَلَّذِیْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِی الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ ؕ— وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ ۟

(அல்லாஹ்வின் பாதையில் போர்புரிகின்ற) அவர்களுக்கு பூமியில் நாம் இடமளித்தால் (-அதிகாரமளித்தால்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்; (தங்களது செல்வங்களுக்கு உரிய) ஸகாத்தைக் கொடுப்பார்கள்; நன்மையை (தவ்ஹீதை) ஏவுவார்கள்; தீமையிலிருந்து (ஷிர்க்கிலிருந்து) தடுப்பார்கள். எல்லாக் காரியங்களின் முடிவும் அல்லாஹ்வின் பக்கமே! info
التفاسير:

external-link copy
42 : 22

وَاِنْ یُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّثَمُوْدُ ۟ۙ

(நபியே!) உம்மை இவர்கள் பொய்ப்பித்தால் (அதற்காக கவலைப்படாதீர்.) இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் ஆது, இன்னும் ஸமூது சமுதாயத்தினரும் பொய்ப்பித்தார்கள். info
التفاسير:

external-link copy
43 : 22

وَقَوْمُ اِبْرٰهِیْمَ وَقَوْمُ لُوْطٍ ۟ۙ

இன்னும், இப்ராஹீமுடைய மக்களும் லூத்துடைய மக்களும் பொய்ப்பித்தனர். info
التفاسير:

external-link copy
44 : 22

وَّاَصْحٰبُ مَدْیَنَ ۚ— وَكُذِّبَ مُوْسٰی فَاَمْلَیْتُ لِلْكٰفِرِیْنَ ثُمَّ اَخَذْتُهُمْ ۚ— فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟

இன்னும், மத்யன் வாசிகளும் (தங்களது தூதர்களை) பொய்ப்பித்தனர். மூஸாவும் (ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமுதாயத்தால்) பொய்ப்பிக்கப்பட்டார். ஆக, (இந்த) நிராகரிப்பாளர்களுக்கு நான் அவகாசம் அளித்தேன். (சிறிது காலத்திற்கு) பிறகு, (தண்டனையைக் கொண்டு) நான் அவர்களைப் பிடித்தேன். ஆகவே, (நான் அவர்களுக்கு கொடுத்த) எனது மறுப்பு (-தண்டனை) எப்படி இருந்தது! info
التفاسير:

external-link copy
45 : 22

فَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ اَهْلَكْنٰهَا وَهِیَ ظَالِمَةٌ فَهِیَ خَاوِیَةٌ عَلٰی عُرُوْشِهَا ؗ— وَبِئْرٍ مُّعَطَّلَةٍ وَّقَصْرٍ مَّشِیْدٍ ۟

எத்தனையோ ஊர்களை அவை அநியாயம் புரிபவையாக இருக்க அவற்றை நாம் அழித்தோம். அவை தமது முகடுகள் மீது வீழ்ந்துள்ளன. இன்னும் (பராமரிப்பு இல்லாமல்) விடப்பட்ட எத்தனையோ கிணறுகளையும், சுண்ணாம்புக் கலவைகளைக் கொண்டு கட்டப்பட்ட (உயரமான, நீளமான) மாளிகைகளையும் அழித்தொழித்தோம். info
التفاسير:

external-link copy
46 : 22

اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَتَكُوْنَ لَهُمْ قُلُوْبٌ یَّعْقِلُوْنَ بِهَاۤ اَوْ اٰذَانٌ یَّسْمَعُوْنَ بِهَا ۚ— فَاِنَّهَا لَا تَعْمَی الْاَبْصَارُ وَلٰكِنْ تَعْمَی الْقُلُوْبُ الَّتِیْ فِی الصُّدُوْرِ ۟

அவர்கள் பூமியில் பயணம் செய்ய வேண்டாமா? (அழிக்கப்பட்டவர்களின் ஊர்களை அவர்கள் சென்று பார்க்க வேண்டாமா? அப்படி அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அவற்றின் மூலம் அவர்கள் சிந்தித்துப் புரிகின்ற உள்ளங்களும் அவற்றின் மூலம் செவிமடுக்கின்ற காதுகளும் அவர்களுக்கு உண்டாகும். ஏனெனில் நிச்சயமாக (கண்) பார்வைகள் குருடாகுவதில்லை. எனினும் நெஞ்சங்களில் உள்ள உள்ளங்கள்தான் குருடாகி விடுகின்றன. info
التفاسير: