Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
47 : 22

وَیَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ وَلَنْ یُّخْلِفَ اللّٰهُ وَعْدَهٗ ؕ— وَاِنَّ یَوْمًا عِنْدَ رَبِّكَ كَاَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ ۟

(நபியே!) அவர்கள் உம்மிடம் வேதனையை அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை அறவே மாற்ற மாட்டான். நிச்சயமாக உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் எண்ணக்கூடியவற்றிலிருந்து (உங்கள் நாட்களிலிருந்து) ஆயிரம் ஆண்டுகளைப் போன்றதாகும். info
التفاسير:

external-link copy
48 : 22

وَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ اَمْلَیْتُ لَهَا وَهِیَ ظَالِمَةٌ ثُمَّ اَخَذْتُهَا ۚ— وَاِلَیَّ الْمَصِیْرُ ۟۠

எத்தனையோ ஊர்கள் அவை அநியாயம் (-பாவம்) செய்பவையாக இருக்க நான் அவற்றுக்கு அவகாசம் அளித்தேன். பிறகு அவற்றை (வேதனையைக் கொண்டு) நான் பிடித்தேன். என் பக்கமே மீளுதல் இருக்கிறது. info
التفاسير:

external-link copy
49 : 22

قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّمَاۤ اَنَا لَكُمْ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۚ

(நபியே!) கூறுவீராக! மக்களே! நிச்சயமாக நான் எல்லாம் உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர்தான். info
التفاسير:

external-link copy
50 : 22

فَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟

ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு பாவமன்னிப்பும் (சொர்க்கத்தில்) கண்ணியமான உணவும் உண்டு. info
التفاسير:

external-link copy
51 : 22

وَالَّذِیْنَ سَعَوْا فِیْۤ اٰیٰتِنَا مُعٰجِزِیْنَ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟

எவர்கள் (நம்மை) மிகைத்துவிட முயற்சித்தவர்களாக நமது வசனங்களில் (அவற்றைப் பொய்ப்பிக்க) முயற்சித்தார்களோ அவர்கள்தான் நரகவாசிகள். info
التفاسير:

external-link copy
52 : 22

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ وَّلَا نَبِیٍّ اِلَّاۤ اِذَا تَمَنّٰۤی اَلْقَی الشَّیْطٰنُ فِیْۤ اُمْنِیَّتِهٖ ۚ— فَیَنْسَخُ اللّٰهُ مَا یُلْقِی الشَّیْطٰنُ ثُمَّ یُحْكِمُ اللّٰهُ اٰیٰتِهٖ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟ۙ

உமக்கு முன்னர் எந்த ஒரு ரசூலையும் நபியையும் நாம் அனுப்பவில்லை, அவர் ஓதும்போது ஷைத்தான் அவர் ஓதுவதில் (தனது கூற்றை) கூறியே தவிர. பின்னர், ஷைத்தான் கூறுவதை அல்லாஹ் போக்கி விடுவான். பிறகு அல்லாஹ் தனது வசனங்களை உறுதிப்படுத்துவான். (வேதத்திலிருந்து ஷைத்தான் கூறியதை நீக்கி வேதத்தை சுத்தப்படுத்தி விடுவான்.) அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான். info
التفاسير:

external-link copy
53 : 22

لِّیَجْعَلَ مَا یُلْقِی الشَّیْطٰنُ فِتْنَةً لِّلَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْقَاسِیَةِ قُلُوْبُهُمْ ؕ— وَاِنَّ الظّٰلِمِیْنَ لَفِیْ شِقَاقٍ بَعِیْدٍ ۟ۙ

(முடிவில்,) ஷைத்தான் கூறுவதை உள்ளங்களில் நோய் உள்ளவர்களுக்கும் உள்ளங்கள் இறுகியவர்களுக்கும் சோதனையாக ஆக்குவான். நிச்சயமாக அநியாயக்காரர்கள் (உண்மையை விட்டு) மிக தூரமான முரண்பாட்டில்தான் இருக்கின்றனர். info
التفاسير:

external-link copy
54 : 22

وَّلِیَعْلَمَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَیُؤْمِنُوْا بِهٖ فَتُخْبِتَ لَهٗ قُلُوْبُهُمْ ؕ— وَاِنَّ اللّٰهَ لَهَادِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

(முடிவில், அல்லாஹ்வின் மார்க்க) அறிவு கொடுக்கப்பட்டவர்கள் நிச்சயமாக இது (-அல்லாஹ் இறக்கிய வேதமும் ஷைத்தான் கூறியதை நீக்கி வேத வசனங்களை சுத்தப்படுத்தி உறுதிப்படுத்தியதும்) உமது இறைவன் புறத்திலிருந்து நிகழ்ந்த உண்மைதான் என்று அறிந்து அதை நம்பிக்கை கொண்டு அவர்களுடைய உள்ளங்கள் அதற்கு (-அந்த குர்ஆனுக்கு) பணிந்து விடும். நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை நேரான பாதைக்கு வழிகாட்டக்கூடியவன் ஆவான். info
التفاسير:

external-link copy
55 : 22

وَلَا یَزَالُ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ مِرْیَةٍ مِّنْهُ حَتّٰی تَاْتِیَهُمُ السَّاعَةُ بَغْتَةً اَوْ یَاْتِیَهُمْ عَذَابُ یَوْمٍ عَقِیْمٍ ۟

நிராகரித்தவர்கள், அவர்களிடம் மறுமை திடீரென வருகின்றவரை அல்லது ஒரு மலட்டு நாளின் (-பத்ரு போரின்) வேதனை அவர்களிடம் வருகின்ற வரை இதில் (இந்த குர்ஆனில்) சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருக்கின்றனர். info
التفاسير: