Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
119 : 6

وَمَا لَكُمْ اَلَّا تَاْكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَیْهِ وَقَدْ فَصَّلَ لَكُمْ مَّا حَرَّمَ عَلَیْكُمْ اِلَّا مَا اضْطُرِرْتُمْ اِلَیْهِ ؕ— وَاِنَّ كَثِیْرًا لَّیُضِلُّوْنَ بِاَهْوَآىِٕهِمْ بِغَیْرِ عِلْمٍ ؕ— اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِالْمُعْتَدِیْنَ ۟

(அறுக்கும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதிலிருந்து நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன ஏற்பட்டது? அவன் உங்களுக்கு தடுத்தவற்றை உங்களுக்கு விவரித்துவிட்டான் (ஆனால் தடுக்கப்பட்ட) அதன் பக்கம் நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டால் தவிர (அப்போது அது ஆகுமாகிவிடும்). நிச்சயமாக அதிகமானோர் கல்வியின்றி தங்கள் ஆசைகளைக் கொண்டு (மக்களை) வழி கெடுக்கின்றனர். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன் வரம்பு மீறிகளை மிக அறிபவன். info
التفاسير:

external-link copy
120 : 6

وَذَرُوْا ظَاهِرَ الْاِثْمِ وَبَاطِنَهٗ ؕ— اِنَّ الَّذِیْنَ یَكْسِبُوْنَ الْاِثْمَ سَیُجْزَوْنَ بِمَا كَانُوْا یَقْتَرِفُوْنَ ۟

(நம்பிக்கையாளர்களே!) பாவத்தில் வெளிப்படையானதையும் அதில் மறைவானதையும் (விட்டு)விடுங்கள். நிச்சயமாக பாவத்தை சம்பாதிப்பவர்கள் அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலி கொடுக்கப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
121 : 6

وَلَا تَاْكُلُوْا مِمَّا لَمْ یُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَیْهِ وَاِنَّهٗ لَفِسْقٌ ؕ— وَاِنَّ الشَّیٰطِیْنَ لَیُوْحُوْنَ اِلٰۤی اَوْلِیٰٓـِٕهِمْ لِیُجَادِلُوْكُمْ ۚ— وَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ ۟۠

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றிலிருந்து புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பாவம்தான். உங்களுடன் அவர்கள் தர்க்கிப்பதற்காக நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களுக்கு அறிவிக்கின்றனர். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நிச்சயமாக நீங்கள் இணை வைப்பவர்கள்தான்! info
التفاسير:

external-link copy
122 : 6

اَوَمَنْ كَانَ مَیْتًا فَاَحْیَیْنٰهُ وَجَعَلْنَا لَهٗ نُوْرًا یَّمْشِیْ بِهٖ فِی النَّاسِ كَمَنْ مَّثَلُهٗ فِی الظُّلُمٰتِ لَیْسَ بِخَارِجٍ مِّنْهَا ؕ— كَذٰلِكَ زُیِّنَ لِلْكٰفِرِیْنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

எவர் மரணித்தவராக இருந்து, அவரை நாம் உயிர்ப்பித்து, மக்களுக்கு மத்தியில் அவர் நடமாடுவதற்கு அவருக்கு ஓர் ஒளியையும் நாம் ஏற்படுத்தினோமோ அவர் - எவர் இருள்களில் இருந்து கொண்டு, அவற்றிலிருந்து வெளியேறமுடியாதவராக இருக்கிறாரோ அவரைப் போல் ஆவாரா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை அழகாக்கப்பட்டன. info
التفاسير:

external-link copy
123 : 6

وَكَذٰلِكَ جَعَلْنَا فِیْ كُلِّ قَرْیَةٍ اَكٰبِرَ مُجْرِمِیْهَا لِیَمْكُرُوْا فِیْهَا ؕ— وَمَا یَمْكُرُوْنَ اِلَّا بِاَنْفُسِهِمْ وَمَا یَشْعُرُوْنَ ۟

இவ்வாறே எல்லா ஊர்களிலும் அதிலுள்ள பெரிய பாவிகளை அவற்றில் சதி செய்வதற்காக ஏற்படுத்தினோம். தங்களுக்கே தவிர (மற்றவர்களுக்கு) அவர்கள் சதி செய்யமாட்டார்கள். (இதை அவர்கள்) உணர மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
124 : 6

وَاِذَا جَآءَتْهُمْ اٰیَةٌ قَالُوْا لَنْ نُّؤْمِنَ حَتّٰی نُؤْتٰی مِثْلَ مَاۤ اُوْتِیَ رُسُلُ اللّٰهِ ؔۘؕ— اَللّٰهُ اَعْلَمُ حَیْثُ یَجْعَلُ رِسَالَتَهٗ ؕ— سَیُصِیْبُ الَّذِیْنَ اَجْرَمُوْا صَغَارٌ عِنْدَ اللّٰهِ وَعَذَابٌ شَدِیْدٌۢ بِمَا كَانُوْا یَمْكُرُوْنَ ۟

அவர்களிடம் ஒரு வசனம் வந்தால் "அல்லாஹ்வுடைய தூதர்கள் கொடுக்கப்பட்டது போன்று நாங்களும் கொடுக்கப்படும் வரை (நாங்கள்) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறுகின்றனர். தன் தூதுத்துவத்தை எங்கு ஏற்படுத்துவது என்பதை அல்லாஹ் மிகஅறிந்தவன். குற்றம் புரிந்தவர்களை அவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்த காரணத்தால் அல்லாஹ்விடம் இருந்து (அவர்களுக்கு கேவலமும்) சிறுமையும் கடுமையான வேதனையும் அடையும். info
التفاسير: