Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
138 : 6

وَقَالُوْا هٰذِهٖۤ اَنْعَامٌ وَّحَرْثٌ حِجْرٌ ۖۗ— لَّا یَطْعَمُهَاۤ اِلَّا مَنْ نَّشَآءُ بِزَعْمِهِمْ وَاَنْعَامٌ حُرِّمَتْ ظُهُوْرُهَا وَاَنْعَامٌ لَّا یَذْكُرُوْنَ اسْمَ اللّٰهِ عَلَیْهَا افْتِرَآءً عَلَیْهِ ؕ— سَیَجْزِیْهِمْ بِمَا كَانُوْا یَفْتَرُوْنَ ۟

இவை தடுக்கப்பட்ட கால்நடைகளும் விவசாயமும் ஆகும். நாங்கள் நாடுபவரைத் தவிர (மற்றவர்) அவற்றைப் புசிக்கமாட்டார் என்று தங்கள் எண்ணப்படி அவர்கள் கூறினர். இன்னும், பல கால்நடைகள் அவற்றின் முதுகுகள் தடுக்கப்பட்டன. (அவற்றின் மீது பயணிப்பதும், சுமையேற்றுவதும் கூடாது.) இன்னும், (பல) கால்நடைகள் (அவற்றை அறுக்கும்போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டார்கள் (இவ்வாறு அல்லாஹ் கூறினான் என்று) அவன் மீது இட்டுக் கட்டுகின்றனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு (தகுந்த) கூலி கொடுப்பான். info
التفاسير:

external-link copy
139 : 6

وَقَالُوْا مَا فِیْ بُطُوْنِ هٰذِهِ الْاَنْعَامِ خَالِصَةٌ لِّذُكُوْرِنَا وَمُحَرَّمٌ عَلٰۤی اَزْوَاجِنَا ۚ— وَاِنْ یَّكُنْ مَّیْتَةً فَهُمْ فِیْهِ شُرَكَآءُ ؕ— سَیَجْزِیْهِمْ وَصْفَهُمْ ؕ— اِنَّهٗ حَكِیْمٌ عَلِیْمٌ ۟

"இந்த கால்நடைகளின் வயிறுகளில் இருப்பது எங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியது. (அதை அவர்கள் புசிக்கலாம். அது) எங்கள் பெண்களுக்கு தடுக்கப்பட்டது. அது செத்ததாக இருந்தால் அதில் அவர்களும் பங்காளிகள்” என்று கூறினர். அவர்களுடைய (இவ்)வர்ணிப்பிற்கு அவன் அவர்களுக்கு(த் தகுந்தக்)கூலி கொடுப்பான். நிச்சயமாக அவன் ஞானவான், நன்கறிந்தவன். info
التفاسير:

external-link copy
140 : 6

قَدْ خَسِرَ الَّذِیْنَ قَتَلُوْۤا اَوْلَادَهُمْ سَفَهًا بِغَیْرِ عِلْمٍ وَّحَرَّمُوْا مَا رَزَقَهُمُ اللّٰهُ افْتِرَآءً عَلَی اللّٰهِ ؕ— قَدْ ضَلُّوْا وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟۠

அறிவின்றி மூடத்தனமாக தங்கள் பிள்ளைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ் (அனுமதி) கொடுத்த (நல்ல)வற்றை (தங்கள் மீது) தடுத்தவர்களும் நஷ்டமடைந்து விட்டனர். (இவ்வாறு) அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுகின்றனர். (அவர்கள்) வழிகெட்டு விட்டனர்; அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
141 : 6

وَهُوَ الَّذِیْۤ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَیْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّیْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَّغَیْرَ مُتَشَابِهٍ ؕ— كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ یَوْمَ حَصَادِهٖ ۖؗ— وَلَا تُسْرِفُوْا ؕ— اِنَّهٗ لَا یُحِبُّ الْمُسْرِفِیْنَ ۟ۙ

கொடிகள் நிறைந்த தோட்டங்கள், கொடிகளற்ற தோட்டங்கள், பேரீத்த மரங்கள் இன்னும் அதன் கனிகள் மாறுபட்ட விளைச்சலையும், ஒலிவத்தையும், ஒன்றுக்கொன்று ஒப்பான இன்னும் ஒப்பாகாத மாதுளையையும் உற்பத்தி செய்தவன் அவன்தான். அவை காய்த்தால் அதன் கனிகளிலிருந்து புசியுங்கள். அவற்றின் அறுவடை நாளில் அதனுடைய கடமையை (ஸகாத்தை) கொடுங்கள். விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்பவர்களை நிச்சயமாக அவன் (அல்லாஹ்) நேசிக்க மாட்டான். info
التفاسير:

external-link copy
142 : 6

وَمِنَ الْاَنْعَامِ حَمُوْلَةً وَّفَرْشًا ؕ— كُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ— اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟ۙ

இன்னும் கால்நடைகளில், சுமக்கத் தகுதியானதையும் சுமக்கத் தகுதியற்றதையும் (உற்பத்தி செய்தவன் அவன்தான்). அல்லாஹ் உங்களுக்கு உணவளித்தவற்றில் இருந்து புசியுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான எதிரியாவான். info
التفاسير: