Firo maanaaji al-quraan tedduɗo oo - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Tippudi firooji ɗii


Firo maanaaji Simoore: Simoore denndal   Aaya:

ஸூரா அல்ஹஷ்ர்

Ina jeyaa e payndaale simoore ndee:
إظهار قوة الله وعزته في توهين اليهود والمنافقين، وإظهار تفرقهم، في مقابل إظهار تآلف المؤمنين.
யூதர்கள் மற்றும் நயவஞ்சகர்களை பலவீனப்படுத்துவதில் அல்லாஹ்வின் வல்லமையையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்தலும் மற்றும் நம்பிக்கையாளர்களிடையே காணப்படும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தி அதற்கு நேர்மாறாக நிராகரிப்பாளர்களுக்கு மத்தியில் காணப்படும் பிரிவினையை வெளிப்படுத்தலும்.

سَبَّحَ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۚ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
59.1. வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்றவற்றை விட்டும் அவனைத் தூய்மைப்படுத்துகின்றன, கண்ணியப்படுத்துகின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் படைத்த படைப்பில், சட்டமியற்றலில், நிர்ணயத்தில் அவன் ஞானம் மிக்கவன்.
Faccirooji aarabeeji:
هُوَ الَّذِیْۤ اَخْرَجَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ دِیَارِهِمْ لِاَوَّلِ الْحَشْرِ ؔؕ— مَا ظَنَنْتُمْ اَنْ یَّخْرُجُوْا وَظَنُّوْۤا اَنَّهُمْ مَّا نِعَتُهُمْ حُصُوْنُهُمْ مِّنَ اللّٰهِ فَاَتٰىهُمُ اللّٰهُ مِنْ حَیْثُ لَمْ یَحْتَسِبُوْا وَقَذَفَ فِیْ قُلُوْبِهِمُ الرُّعْبَ یُخْرِبُوْنَ بُیُوْتَهُمْ بِاَیْدِیْهِمْ وَاَیْدِی الْمُؤْمِنِیْنَ ۗ— فَاعْتَبِرُوْا یٰۤاُولِی الْاَبْصَارِ ۟
59.2. அவனே தன்னை நிராகரித்து தன் தூதரை பொய்ப்பித்த தவ்ராத் வேதத்தையுடைய யூதர்களான பனூ நளீர் குலத்தார் உடன்படிக்கையை முறித்து இணைவைப்பாளர்களுடன் ஒத்துழைத்தபோது அவர்களை மதீனாவிலுள்ள அவர்களின் வீடுகளிலிருந்து ஷாமுக்கு முதன் முதலாக வெளியேற்றினான். -நம்பிக்கையாளர்களே!- அவர்களிடம் காணப்படும் பலம் மற்றும் பாதுகாப்பினால் தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைத்திருக்கவில்லை. தாங்கள் உறுதியாகக் கட்டிய கோட்டைகள் தங்களை அல்லாஹ்வின் தண்டனை, பிடியிலிருந்து பாதுகாக்கும் என்று அவர்களும் நினைத்தனர். தூதர் அவர்களுடன் போரிடும்படி, அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றும்படி கட்டளையிட்ட போது அவர்கள் நினைத்துப் பார்க்காத புறத்திலிருந்து அல்லாஹ்வின் தண்டனை அவர்களிடம் வந்தது. அவன் அவர்களின் உள்ளங்களில் கடும் பீதியை ஏற்படுத்திவிட்டான். தமது வீடுகள் முஸ்லிம்களுக்கு பயன்படக்கூடாது என்பதற்காக அவர்கள் உட்புறமிருந்து தங்களின் கைகளாலேயே அவற்றைத் தகர்த்தார்கள். வெளிப்புறமிருந்து முஸ்லிம்கள் அவற்றை அழித்தார்கள். அகப்பார்வையுடையோரே! அவர்களின் நிராகரிப்பினால் அவர்கள் மீது இறங்கிய வேதனையைக் கொண்டு படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள். அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் அவர்கள் மீது இறங்கிய அதே வேதனை, கூலி உங்கள் மீதும் இறங்கும்.
Faccirooji aarabeeji:
وَلَوْلَاۤ اَنْ كَتَبَ اللّٰهُ عَلَیْهِمُ الْجَلَآءَ لَعَذَّبَهُمْ فِی الدُّنْیَا ؕ— وَلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابُ النَّارِ ۟
59.3. அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றுவதை அல்லாஹ் அவர்கள்மீது விதித்திருக்காவிட்டால், இவ்வுலகில் கொலை மற்றும் கைதின் மூலம் அவர்களைத் தண்டித்திருப்பான். அவர்களுக்கு மறுமையில் நரக வேதனை காத்திருக்கின்றது. அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• المحبة التي لا تجعل المسلم يتبرأ من دين الكافر ويكرهه، فإنها محرمة، أما المحبة الفطرية؛ كمحبة المسلم لقريبه الكافر، فإنها جائزة.
1. நிராகரிப்பாளனின் மார்க்கத்தில் இருந்து விலகி அதனை வெறுப்பதை விட்டும் முஸ்லிமைத் தடுக்கும் அன்பு நிச்சயமாக தடைசெய்யப்பட்டதாகும். ஆனால் தனது நிராகரிப்பாளனான உறவினரை ஒரு முஸ்லிம் இயல்பான நேசம் வைப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.

• رابطة الإيمان أوثق الروابط بين أهل الإيمان.
2. ஈமானிய உறவே நம்பிக்கையாளர்களுக்கு மத்தியிலுள்ள மிக உறுதியான உறவாகும்.

• قد يعلو أهل الباطل حتى يُظن أنهم لن ينهزموا، فتأتي هزيمتهم من حيث لا يتوقعون.
3. நிச்சயமாக தோல்வியடையவேமாட்டார்கள் என நினைக்கும் அளவுக்கு சில வேளை அசத்தியவாதிகள் ஆதிக்கம் பெறுவார்கள். அப்போது அவர்கள் எதிர்பாராத விதத்தில் தோல்விக்குள்ளாகுவர்.

• من قدر الله في الناس دفع المصائب بوقوع ما دونها من المصائب.
4. சிறிய சோதனைகள் நிகழ்வதன் மூலம் பெரிய சோதனைகளைத் தடுப்பது மனிதர்களின் விடயத்தில் அல்லாஹ்வின் விதியில் உள்ளதாகும்.

ذٰلِكَ بِاَنَّهُمْ شَآقُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ۚ— وَمَنْ یُّشَآقِّ اللّٰهَ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
59.4. அவர்களுக்கு இவ்வாறு நேர்ந்ததற்கான காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து ஒப்பந்தங்களை முறித்து அவர்களுடன் பகைமை பாராட்டியதே. யார் அல்லாஹ்வைப் பகைப்பாரோ அவர் அறிந்துகொள்ளட்டும், நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன். எனவே அவனது கடுமையான தண்டனை அவனுக்கு ஏற்படும்.
Faccirooji aarabeeji:
مَا قَطَعْتُمْ مِّنْ لِّیْنَةٍ اَوْ تَرَكْتُمُوْهَا قَآىِٕمَةً عَلٰۤی اُصُوْلِهَا فَبِاِذْنِ اللّٰهِ وَلِیُخْزِیَ الْفٰسِقِیْنَ ۟
59.5. -நம்பிக்கையாளர்களே!- பனூ நளீர் குலத்தாருடன் போரிடும்போது அல்லாஹ்வின் எதிரிகளை கோபமூட்டுவதற்காக நீங்கள் வெட்டிய பேரீச்சை மரங்களும் அல்லது அதனைக்கொண்டு பயனடைவதற்காக அவற்றின் வேர்களில் நிற்கும்படி அவற்றை விட்டுவிட்டதும் அல்லாஹ்வின் கட்டளையினால்தான். அவர்கள் எண்ணுவது போல இது பூமியில் குழப்பம் விளைவித்தல் ஆகாது. இதன் மூலம் அல்லாஹ் தனக்குக் கட்டுப்படாமல் ஒப்பந்தங்களை முறித்து அதனை நிறைவேற்றும் வழிகளை விட்டுவிட்டு துரோகமிழைக்கும் வழியை தேர்ந்தெடுத்துக் கொண்ட யூதர்களை இழிவுபடுத்துகிறான்.
Faccirooji aarabeeji:
وَمَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰی رَسُوْلِهٖ مِنْهُمْ فَمَاۤ اَوْجَفْتُمْ عَلَیْهِ مِنْ خَیْلٍ وَّلَا رِكَابٍ وَّلٰكِنَّ اللّٰهَ یُسَلِّطُ رُسُلَهٗ عَلٰی مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
59.6. பனூ நளீர் குலத்தாரின் செல்வங்களிலிருந்து அல்லாஹ் தன் தூதருக்கு திருப்பியளித்த செல்வங்களைத் தேடி நீங்கள் குதிரையிலோ, ஒட்டகத்திலோ பயணம் செய்யவில்லை. அதில் உங்களுக்கு எவ்விதச் சிரமமும் ஏற்படவில்லை. ஆயினும் அல்லாஹ் தன் தூதர்களை தான் நாடியோர்மீது ஆதிக்கம் கொள்ளச் செய்கிறான். அவன் தன் தூதரை பனூ நளீர் குலத்தாரின்மீது ஆதிக்கம் கொள்ளச் செய்தான். அவர் அவர்களின் நகரங்களை போரின்றி வெற்றி கொண்டார். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.
Faccirooji aarabeeji:
مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰی رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰی فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ۙ— كَیْ لَا یَكُوْنَ دُوْلَةً بَیْنَ الْاَغْنِیَآءِ مِنْكُمْ ؕ— وَمَاۤ اٰتٰىكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ ۚ— وَمَا نَهٰىكُمْ عَنْهُ فَانْتَهُوْا ۚ— وَاتَّقُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟ۘ
59.7. போர் புரியாமல் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்த ஊர்வாசிகளின் செல்வங்கள் யாவும் அல்லாஹ்வுக்காகும். அவன் அவற்றை தான் நாடியவாறு பங்கிடுவான். தூதருக்கும் அவருடைய குடும்பத்தாரான பனூ ஹாஷிம் மற்றும் பனூ முத்தலிப் குடும்பத்தாருக்கும் உரியவையாகும். ஏனெனில் இது அவர்களுக்கு தர்மம் பெறுவது தடைசெய்யப்பட்டதற்கான பகரமாகும். மேலும் அவை அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழித்துணை சாதனங்களை இழந்துவிட்ட வழிப்போக்கர்களுக்கும் உரியவை. இது ஏழைகள் அல்லாமல் செல்வந்தர்களிடையே செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக்கூடாது என்பதற்காகும். -நம்பிக்கையாளர்களே!- போரின்றி கைப்பற்றப்பட்ட செல்வங்களில் தூதர் உங்களுக்கு அளித்தவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் தடுத்துள்ளவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவன் தண்டிப்பதில் கடுமையானவன். ஆகவே அவனது தண்டனையைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
Faccirooji aarabeeji:
لِلْفُقَرَآءِ الْمُهٰجِرِیْنَ الَّذِیْنَ اُخْرِجُوْا مِنْ دِیَارِهِمْ وَاَمْوَالِهِمْ یَبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا وَّیَنْصُرُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ— اُولٰٓىِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ ۟ۚ
59.8. இந்த செல்வங்களில் ஒரு பகுதி தங்களின் செல்வங்களையும் பிள்ளைகளையும் விட்டுவிட வற்புறுத்தப்பட்ட அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்த ஏழைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். அல்லாஹ் இவ்வுலகில் அவர்களுக்கு வாழ்வாதாரம் அளித்து சிறப்பிக்க வேண்டும் என்றும் மறுமையில் அவர்களின் விஷயத்தில் திருப்தியடைய வேண்டும் என்றும் அவர்கள் ஆதரவு வைக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்கிறார்கள். இந்தப் பண்புகளைப் பெற்றவர்கள்தாம் உண்மையில் நம்பிக்கையில் உறுதியானவர்களாவர்.
Faccirooji aarabeeji:
وَالَّذِیْنَ تَبَوَّءُو الدَّارَ وَالْاِیْمَانَ مِنْ قَبْلِهِمْ یُحِبُّوْنَ مَنْ هَاجَرَ اِلَیْهِمْ وَلَا یَجِدُوْنَ فِیْ صُدُوْرِهِمْ حَاجَةً مِّمَّاۤ اُوْتُوْا وَیُؤْثِرُوْنَ عَلٰۤی اَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۫ؕ— وَمَنْ یُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟ۚ
59.9. முஹாஜிர்கள் - புலம்பெயர்ந்தவர்கள் வருவதற்கு முன்னரே மதீனாவில் வசித்த அன்சாரிகள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்வதை தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். மக்காவிலிருந்து தங்களின்பால் புலம்பெயர்ந்து வந்தவர்களை நேசிக்கிறார்கள். அவர்கள் போரின்றி கிடைத்த செல்வங்களிலிருந்து தங்களுக்கு வழங்கப்படாமல் அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டால் தங்களின் உள்ளங்களில் அவர்களைக் குறித்து குரோதமோ, பொறாமையோ கொள்வதில்லை. அவர்கள் உலக விஷயங்களில் தங்களைவிட புலம்பெயர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்குகிறார்கள். அவர்கள் ஏழைகளாக, தேவையுடையோராக இருந்தாலும் சரியே. யாருடைய உள்ளங்களையெல்லாம் அல்லாஹ் செல்வத்தின்மீதுள்ள மோகத்திலிருந்து பாதுகாத்து அவர்கள் அவனுடைய பாதையில் செலவு செய்கிறார்களோ அவர்கள்தாம் அஞ்சும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்து விரும்பியதைப் பெற்று வெற்றி பெறக்கூடியவர்களாவர்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• فعل ما يُظنُّ أنه مفسدة لتحقيق مصلحة عظمى لا يدخل في باب الفساد في الأرض.
1. பெரும் நலவொன்றை அடைவதற்கு தீயகாரியமெனக் கருதப்படும் ஒரு விடயத்தைச் செய்வது பூமியில் குழப்பம் விளைவிக்கும் விடயங்களில் சேரமாட்டாது.

• من محاسن الإسلام مراعاة ذي الحاجة للمال، فَصَرَفَ الفيء لهم دون الأغنياء المكتفين بما عندهم.
2. பணத் தேவையுள்ளோரைக் கவனத்தில் கொள்வது இஸ்லாத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அதனால்தான் போரின்றி கிடைத்த செல்வங்களை போதுமானளவு சொத்தைப் பெற்றுள்ள பணக்காரர்களுக்கு வழங்காமல் அவர்களுக்கு வழங்கியுள்ளது.

• الإيثار منقبة عظيمة من مناقب الإسلام ظهرت في الأنصار أحسن ظهور.
3. பிறரை முற்படுத்தும் பண்பு இஸ்லாம் சிறப்பித்த பெரும் சிறப்புக்குரிய ஒரு காரியமாகும். அன்சாரிகளிடம் அது மிகத்தெளிவாக அது வெளிப்பட்டது.

وَالَّذِیْنَ جَآءُوْ مِنْ بَعْدِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِاِخْوَانِنَا الَّذِیْنَ سَبَقُوْنَا بِالْاِیْمَانِ وَلَا تَجْعَلْ فِیْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِیْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟۠
59.10. அவர்களுக்குப் பின்வந்து அவர்களை மறுமை நாள்வரை மனத்தூய்மையுடன் பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள்: “எங்கள் இறைவா! எங்களையும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்கள் இஸ்லாமிய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக. எங்களின் உள்ளங்களில் நம்பிக்கையாளர்களில் யாரைக் குறித்தும் குரோதத்தையோ, பொறாமையையோ ஏற்படுத்திவிடாதே. எங்கள் இறைவா! நிச்சயமாக நீ உன் அடியார்களோடு மிகுந்த பரிவுடையவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றாய்.”
Faccirooji aarabeeji:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ نَافَقُوْا یَقُوْلُوْنَ لِاِخْوَانِهِمُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ لَىِٕنْ اُخْرِجْتُمْ لَنَخْرُجَنَّ مَعَكُمْ وَلَا نُطِیْعُ فِیْكُمْ اَحَدًا اَبَدًا ۙ— وَّاِنْ قُوْتِلْتُمْ لَنَنْصُرَنَّكُمْ ؕ— وَاللّٰهُ یَشْهَدُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
59.11. தூதரே! நிராகரிப்பை மறைத்து நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடியவர்களை நீர் பார்க்கவில்லையா? நிராகரிப்பில் தங்களின் சகோதரர்களான திரிக்கப்பட்ட தவ்ராத்தைப் பின்பற்றும் யூதர்களிடம் அவர்கள் கூறுகிறார்கள்: “உங்களின் வீடுகளில் உறுதியாக இருங்கள். நாங்கள் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டோம். முஸ்லிம்கள் உங்களை வெளியேற்றினால் உங்களுக்கு ஆதரவளிப்பதற்காக நாங்களும் வெளியேறுவோம். உங்களுடன் வெளியேறுவதை விட்டும் எங்களைத் தடுக்க நினைக்கும் யாருக்கும் நாங்கள் கீழ்ப்படிய மாட்டோம். அவர்கள் உங்களுடன் போரிட்டால் அவர்களுக்கு எதிராக நாங்கள் உங்களுக்கு உதவி புரிவோம்.” நிச்சயமாக இந்த நயவஞ்சகர்கள் யூதர்கள் வெளியேற்றப்பட்டால் நாமும் வெளியேறுவோம் அவர்கள் உங்களுடன் போரிட்டால் நாங்களும் அவர்களோடு போரிடுவோம் என்று தாங்கள் கூறும் விஷயத்தில் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
Faccirooji aarabeeji:
لَىِٕنْ اُخْرِجُوْا لَا یَخْرُجُوْنَ مَعَهُمْ ۚ— وَلَىِٕنْ قُوْتِلُوْا لَا یَنْصُرُوْنَهُمْ ۚ— وَلَىِٕنْ نَّصَرُوْهُمْ لَیُوَلُّنَّ الْاَدْبَارَ ۫— ثُمَّ لَا یُنْصَرُوْنَ ۟
59.12. முஸ்லிம்கள் அவர்களை வெளியேற்றினால் இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். முஸ்லிம்கள் அவர்களுடன் போரிட்டால் இவர்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள். இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்களைக் கண்டு வெருண்டோடி விடுவார்கள். அதன் பின்னர் நயவஞ்சகர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். மாறாக அல்லாஹ் அவர்களை இழிவுபடுத்தியே தீருவான்.
Faccirooji aarabeeji:
لَاَنْتُمْ اَشَدُّ رَهْبَةً فِیْ صُدُوْرِهِمْ مِّنَ اللّٰهِ ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟
59.13. -நம்பிக்கையாளர்களே!- இந்த நயவஞ்சகர்கள் மற்றும் யூதர்களின் உள்ளங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றிய அச்சமே உள்ளது. அவர்கள் உங்களைக் கண்டு அஞ்சி அல்லாஹ்வை அஞ்சுவதில் பலஹீனர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் புரியாத மக்களாக இருக்கிறார்கள் என்பதேயாகும். அவர்கள் புரிந்திருந்தால் அல்லாஹ்வே அஞ்சுவதற்குத் தகுதியானவன் என்பதை அறிந்திருப்பார்கள். ஏனெனில் அவனே அவர்கள் மீது உங்களை ஆதிக்கம் கொள்ளச் செய்தான்.
Faccirooji aarabeeji:
لَا یُقَاتِلُوْنَكُمْ جَمِیْعًا اِلَّا فِیْ قُرًی مُّحَصَّنَةٍ اَوْ مِنْ وَّرَآءِ جُدُرٍ ؕ— بَاْسُهُمْ بَیْنَهُمْ شَدِیْدٌ ؕ— تَحْسَبُهُمْ جَمِیْعًا وَّقُلُوْبُهُمْ شَتّٰی ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَعْقِلُوْنَ ۟ۚ
59.14. -நம்பிக்கையாளர்களே!- கோட்டைகளில் இருந்துகொண்டோ அல்லது சுவருக்குப் பின்னாலிருந்தோ தவிர யூதர்கள் ஒன்றுசேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள். அவர்களின் கோழைத்தனத்தினால் அவர்களால் உங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாது. அவர்களிடையே காணப்படும் பகையோ மிகக் கடுமையானது. நிச்சயமாக அவர்கள் ஒரே கருத்தில் ஒரணியில் ஒற்றுமையாக இருப்பதுபோல் நீர் எண்ணுவீர். உண்மையில் அவர்களின் உள்ளங்களோ பிளவுபட்டுக் கிடக்கின்றன. அவர்களிடையே காணப்படும் இந்த பகைமைக்கான காரணம், அவர்கள் விளங்கிக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் என்பதேயாகும். அவர்கள் விளங்கியிருந்தால் சத்தியத்தை அறிந்து அதனைப் பின்பற்றியிருப்பார்கள். அதிலே முரண்பட்டிருக்க மாட்டார்கள்.
Faccirooji aarabeeji:
كَمَثَلِ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ قَرِیْبًا ذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْ ۚ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟ۚ
59.15. இந்த யூதர்கள் தங்களின் நிராகரிப்பிலும் அவர்கள் மீது இறங்கிய வேதனையிலும் அண்மையில் வாழ்ந்த மக்காவின் இணைவைப்பாளர்களைப் போன்றவர்களாவர். அவர்கள் நிராகரிப்பின் தீய விளைவை அனுபவித்தார்கள். பத்ருப்போரில் அவர்களில் சிலர் கொல்லப்பட்டார்கள், சிலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு மறுமையில் வேதனைமிக்க தண்டனை உண்டு.
Faccirooji aarabeeji:
كَمَثَلِ الشَّیْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْ ۚ— فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّیْ بَرِیْٓءٌ مِّنْكَ اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِیْنَ ۟
59.16. அவர்கள் நயவஞ்சகர்களிடம் காதுகொடுத்துக் கேட்பதற்கு உதாரணம் ஷைத்தான் மனிதனுக்கு நிராகரிப்பதை அலங்கரித்துக் காட்டி நிராகரித்து விடு என்று கூறியதைப் போன்றதாகும். ஷைத்தானின் அலங்கரிப்பில் மயங்கி மனிதன் நிராகரித்தபோது ஷைத்தான் அவனிடம் கூறினான்: “நான் உன் நிராகரிப்பைவிட்டும் விலகிவிட்டேன். நான் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்.”
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• رابطة الإيمان لا تتأثر بتطاول الزمان وتغير المكان.
1. ஈமானால் ஏற்படும் தொடர்பு காலம் செல்வதாலோ, இடம் மாறுவதாலோ மாற்றமடையாது.

• صداقة المنافقين لليهود وغيرهم صداقة وهمية تتلاشى عند الشدائد.
2. யூதர்கள், ஏனையவர்களுடனான நயவஞ்சகர்களின் நட்பு துன்பங்களின் போது மறைந்துவிடும் போலியான நட்பாகும்.

• اليهود جبناء لا يواجهون في القتال، ولو قاتلوا فإنهم يتحصنون بِقُرَاهم وأسلحتهم.
3. யூதர்கள் போரில் நேருக்கு நேர் மோதமுடியாத கோழைகள். அவர்கள் போரிட்டால் நிச்சயமாக அவர்கள் தமது கோட்டைகள் மற்றும் ஆயதங்களின் மூலம் தம்மை பாதுகாத்துக்கொள்வார்கள்.

فَكَانَ عَاقِبَتَهُمَاۤ اَنَّهُمَا فِی النَّارِ خَالِدَیْنِ فِیْهَا ؕ— وَذٰلِكَ جَزٰٓؤُا الظّٰلِمِیْنَ ۟۠
59.17. ஷைத்தானினதும் அவனுக்குக் கட்டுப்பட்டவனினதும் முடிவு (பின்பற்றப்படக்கூடிய ஷைத்தானும் பின்பற்றிய மனிதனும்) மறுமை நாளில் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பதாகும். இந்தக் கூலிதான் அல்லாஹ்வின் வரம்புகளை மீறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களுக்காக காத்திருக்கும் கூலியாகும்.
Faccirooji aarabeeji:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۚ— وَاتَّقُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟
59.18. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தாம் மறுமை நாளுக்காக சேர்த்து வைத்துள்ள நற்செயல்கள் குறித்து சிந்தித்துப் பார்க்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியதை நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Faccirooji aarabeeji:
وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ نَسُوا اللّٰهَ فَاَنْسٰىهُمْ اَنْفُسَهُمْ ؕ— اُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
59.19. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தாமல் அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகியிருக்காமல் அவனை மறந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். இதனால் அல்லாஹ் அவர்கள் தங்களையே மறக்கும்படிச் செய்துவிட்டான். எனவே அவர்கள் அல்லாஹ்வின் கோபம் மற்றும் தண்டனையிலிருந்து பாதுகாக்கும் செயல்களில் ஈடுபடவில்லை. -அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருக்காத- அவனை மறந்தவர்கள்தாம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாதவர்களாவர்.
Faccirooji aarabeeji:
لَا یَسْتَوِیْۤ اَصْحٰبُ النَّارِ وَاَصْحٰبُ الْجَنَّةِ ؕ— اَصْحٰبُ الْجَنَّةِ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟
59.20. நரகவாசிகளும் சுவனவாசிகளும் சமமாக மாட்டார்கள். மாறாக அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்களுக்கேற்ப வெவ்வேறான கூலிகளைப் பெறுவார்கள். சுவனவாசிகள்தாம் தாங்கள் விரும்பியதைப் பெற்று வெறுக்கும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்து வெற்றி பெறக்கூடியவர்களாவர்.
Faccirooji aarabeeji:
لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰی جَبَلٍ لَّرَاَیْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْیَةِ اللّٰهِ ؕ— وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَفَكَّرُوْنَ ۟
59.21. -தூதரே!- நாம் இந்த குர்ஆனை ஒரு மலையின்மீது இறக்கினால் அதிலுள்ள எச்சரிக்கும் உபதேசங்கள், கடுமையான எச்சரிக்கைகள் ஆகியவற்றினால் அல்லாஹ்வின் மீது ஏற்படும் கடும் அச்சத்தினால் உறுதியான அந்த மலை கீழ்படிந்து பிளந்துவிடும். மக்கள் தமது பகுத்தறிவைப் பயன்படுத்தி அல்குர்ஆன் உள்ளடக்கியிருக்கும் உபதேசங்கள், படிப்பினைகள் என்பவற்றின் மூலம் அறிவுரை பெறும் பொருட்டு இந்த உதாரணங்களை நாம் அவர்களுக்கு எடுத்துரைக்கின்றோம்.
Faccirooji aarabeeji:
هُوَ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ ۚ— هُوَ الرَّحْمٰنُ الرَّحِیْمُ ۟
59.22,23. அவனே அல்லாஹ். அவனைத்தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவன் மறைவானதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. இவ்வுலகிலும் மறுவுலகிலும் அளவிலாக் கருணையாளன், இணையிலாக் கிருபையாளன். அவனது கருணை அகிலத்தார் அனைத்தையும் வியாபித்துள்ளது. அவன் பேரரசன்; அனைத்துக் குறைகளை விட்டும் தூய்மையானவன்; பிரகாசமான சான்றுகளைக் கொண்டு தூதர்களை உண்மைப்படுத்தக்கூடியவன்; தன் அடியார்களின் செயல்களை கண்காணிக்கக்கூடியவன்; யாவற்றையும் மிகைத்தவன்; யாராலும் அவனை மிகைக்க முடியாது. அனைவரையும் தனது ஆற்றலினால் அடக்கியாள்பவன்; பெருமைக்குரியவன்; இணைவைப்பாளர்கள் அவனுக்கு இணையாக்கும் சிலைகள் மற்றும் இன்னபிறவற்றைவிட்டும் அவன் தூய்மையானவன்.
Faccirooji aarabeeji:
هُوَ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَیْمِنُ الْعَزِیْزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ؕ— سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ ۟
59.22,23. அவனே அல்லாஹ். அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவன் மறைவானதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. இவ்வுலகிலும் மறுவுலகிலும் அளவிலாக் கருணையாளன், இணையிலாக் கிருபையாளன். அவனது கருணை படைப்புகள் அனைத்தையும் வியாபித்துள்ளது. அவன் பேரரசன்; அனைத்துக் குறைகளை விட்டும் தூய்மையானவன்; பிரகாசமான சான்றுகளைக் கொண்டு தூதர்களை உண்மைப்படுத்தக்கூடியவன்; தன் அடியார்களின் செயல்களை கண்காணிக்கக்கூடியவன்; யாவற்றையும் மிகைத்தவன்; அனைவரையும் தனது ஆற்றலினால் அடக்கியாள்பவன்; பெருமைக்குரியவன்; இணைவைப்பாளர்கள் அவனுக்கு இணையாக்கும் சிலைகள் மற்றும் இன்னபிறவற்றைவிட்டும் அவன் தூய்மையானவன்.
Faccirooji aarabeeji:
هُوَ اللّٰهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰی ؕ— یُسَبِّحُ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
59.24. அல்லாஹ்வே எல்லா படைப்புகளையும் படைத்தவன்; அனைத்தையும் உருவாக்கியவன்; தன் படைப்புகளுக்கு தான் விரும்பிய வடிவம் அளிப்பவன்; உயர்ந்த பண்புகளை உள்ளடக்கிய அழகிய பெயர்கள் அவனுக்கே உரியன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் குறைகள் அனைத்தையும்விட்டு அவனைத் தூய்மைப்படுத்துகின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன்; யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும் சட்டத்திலும் நிர்ணயத்திலும் ஞானம் மிக்கவன்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• من علامات توفيق الله للمؤمن أنه يحاسب نفسه في الدنيا قبل حسابها يوم القيامة.
1. மறுமை நாளின் கேள்விகணக்குக்கு முன்னரே உலகில் சுய பரிசோதனை செய்துகொள்வது அல்லாஹ் நம்பிக்கையாளனுக்கு செய்யும் உதவின் அடையாளமாகும்.

• في تذكير العباد بشدة أثر القرآن على الجبل العظيم؛ تنبيه على أنهم أحق بهذا التأثر لما فيهم من الضعف.
2.பெரும் மலையில் அல்குர்ஆன் ஏற்படுத்தும் கடும் தாக்கத்தை அடியார்களுக்கு ஞாபகமூட்டுவதன் மூலம் பலவீனமிக்க அவர்களே மிகவும் இந்தத் தாக்கத்தை உணரத் தகுதியானவர்கள் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

• أشارت الأسماء (الخالق، البارئ، المصور) إلى مراحل تكوين المخلوق من التقدير له، ثم إيجاده، ثم جعل له صورة خاصة به، وبذكر أحدها مفردًا فإنه يدل على البقية.
3. (படைப்பவன், உருவாக்குபவன், உருவம் கொடுப்பவன்) ஆகிய திருநாமங்கள் படைப்பினம் உருவாக்கப்படும் கட்டங்களான, நிர்ணயித்தல், பின்பு உருவாக்குதல், பின்பு அதற்கே உரிய பிரத்தியேக தோற்றத்தை வழங்குதல் ஆகியவற்றைக் குறிக்கின்றன. அவற்றில் ஒன்றை மாத்திரம் தனியாகக் குறிப்பிடுவது அது ஏனையவற்றையும் அறிவிக்கும்.

 
Firo maanaaji Simoore: Simoore denndal
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Tippudi firooji ɗii

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Uddude