Check out the new design

ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ * - សន្ទស្សន៍នៃការបកប្រែ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់ហ្ពាក៏រ៉ោះ   អាយ៉ាត់:
وَقَالُوْا كُوْنُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی تَهْتَدُوْا ؕ— قُلْ بَلْ مِلَّةَ اِبْرٰهٖمَ حَنِیْفًا ؕ— وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
(முஸ்லிம்களை நோக்கி), “நீங்கள் யூதர்களாக அல்லது கிறித்தவர்களாக ஆகிவிடுங்கள், நேர்வழி பெறுவீர்கள்” என அவர்கள் கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக: “மாறாக, இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவரான இப்ராஹீமின் மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை.”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
قُوْلُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَمَاۤ اُوْتِیَ النَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۚ— لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ— وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
(நம்பிக்கையாளர்களே!) கூறுங்கள்: “அல்லாஹ்வையும் எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இன்னும் (இவர்களுடைய) சந்ததிகளுக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவு(க்கு)ம், ஈஸாவு(க்கு)ம் கொடுக்கப்பட்டதையும், (மற்ற) நபிமார்களுக்கு அவர்களது இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். அவர்களில் ஒருவருக்கு மத்தியிலும் (அவர் நபியல்ல என்று) பிரி(த்துக் கூறி அவரை நிராகரி)க்க மாட்டோம். நாங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்த முஸ்லிம்களாக இருப்போம்.”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَاۤ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ۚ— وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِیْ شِقَاقٍ ۚ— فَسَیَكْفِیْكَهُمُ اللّٰهُ ۚ— وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟ؕ
ஆக, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் எப்படி நம்பிக்கை கொண்டீர்களோ அது போன்றே அவர்கள் நம்பிக்கை கொண்டால் திட்டமாக அவர்கள் நேர்வழி பெறுவார்கள். அவர்கள் புறக்கணித்தால் அவர்களெல்லாம் வீண் முரண்பாட்டில்தான் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களிடமிருந்து அல்லாஹ் உம்மை பாதுகாப்பான். அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
صِبْغَةَ اللّٰهِ ۚ— وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ صِبْغَةً ؗ— وَّنَحْنُ لَهٗ عٰبِدُوْنَ ۟
(நீங்கள் கூறுவீராக:) “அல்லாஹ்வுடைய மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வை விட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? நாங்கள் அவனையே வணங்கக் கூடியவர்கள் ஆவோம்.”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
قُلْ اَتُحَآجُّوْنَنَا فِی اللّٰهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ ۚ— وَلَنَاۤ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ۚ— وَنَحْنُ لَهٗ مُخْلِصُوْنَ ۟ۙ
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனோ எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான்! எங்கள் செயல்கள் (உடைய பலன்) எங்களுக்கு கிடைக்கும். இன்னும் உங்கள் செயல்கள் (உடைய பலன்) உங்களுக்கு கிடைக்கும். நாங்கள் வணக்க வழிபாடுகளை (கலப்பின்றி) அவனுக்கு மட்டும் தூய்மையாக செய்வோம்.”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی ؕ— قُلْ ءَاَنْتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ ؕ— وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
“நிச்சயமாக இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் (ஆகிய இவர்கள்) இன்னும் (இவர்களுடைய) சந்ததிகள் யூதர்களாக அல்லது கிறித்தவர்களாக இருந்தார்கள்” என நீங்கள் கூறுகிறீர்களா? (நபியே!) நீர் கூறுவீராக: “(இதை) நீங்கள் மிக அறிந்தவர்களா? அல்லது அல்லாஹ்வா? (இதைப் பற்றி) தன்னிடத்திலிருக்கும் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைத்தவரை விட மகா அநியாயக்காரர் யார்? நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ ۚ— لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَّا كَسَبْتُمْ ۚ— وَلَا تُسْـَٔلُوْنَ عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟۠
அவர்கள் சென்றுவிட்ட சமுதாயம் ஆவார்கள். இன்னும், அவர்கள் செய்த (செயல்களின் கூலியான)து அவர்களுக்கு கிடைக்கும். இன்னும், நீங்கள் செய்த (செயல்களின் கூலியான)து உங்களுக்கு கிடைக்கும். இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் விசாரிக்கப்படமாட்டீர்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់ហ្ពាក៏រ៉ោះ
សន្ទស្សន៍នៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ - សន្ទស្សន៍នៃការបកប្រែ

ដោយលោកអូម៉ើ ស្ហើរុីហ្វ ពិន អាប់ឌុស្សាឡាម

បិទ