Check out the new design

ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ * - សន្ទស្សន៍នៃការបកប្រែ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់ហ្ពាក៏រ៉ោះ   អាយ៉ាត់:
وَاذْكُرُوا اللّٰهَ فِیْۤ اَیَّامٍ مَّعْدُوْدٰتٍ ؕ— فَمَنْ تَعَجَّلَ فِیْ یَوْمَیْنِ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ۚ— وَمَنْ تَاَخَّرَ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ۙ— لِمَنِ اتَّقٰی ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّكُمْ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
இன்னும், எண்ணப்பட்ட (, , ஆகிய) நாள்களில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். ஆக, எவர் இரண்டு நாள்களில் (ஊர் திரும்ப வேண்டும் என்று) அவசரப்பட்டாரோ அவர் மீது அறவே குற்றமில்லை. இன்னும், எவர் (மூன்றாவது நாளும் மினாவில் தங்குவதற்காக) தாமதித்தாரோ அவர் மீதும் அறவே குற்றமில்லை. (அதாவது,) அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு (அவர்கள் இந்த இரண்டில் எதை செய்தாலும் அவர்கள் மீது குற்றமில்லை). அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக நீங்கள் (மறுமையில்) அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَمِنَ النَّاسِ مَنْ یُّعْجِبُكَ قَوْلُهٗ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیُشْهِدُ اللّٰهَ عَلٰی مَا فِیْ قَلْبِهٖ ۙ— وَهُوَ اَلَدُّ الْخِصَامِ ۟
இன்னும், (நபியே!) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி எவனுடைய பேச்சு உம்மை வியக்க வைக்குமோ அ(த்தகைய)வனும் மக்களில் இருக்கிறான். அவன், தன் உள்ளத்தில் உள்ளவற்றிற்கு (பொய்யாக) அல்லாஹ்வை சாட்சியாக்குவான். அவனோ வாதிப்பதில் மிகக் கடுமையான பேச்சாளன் (மிகவும் பொய்யாகவும் முரட்டுத்தனமாகவும் வாதிடுபவன்.)
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَاِذَا تَوَلّٰی سَعٰی فِی الْاَرْضِ لِیُفْسِدَ فِیْهَا وَیُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ الْفَسَادَ ۟
இன்னும், அவன் (உம்மை விட்டு) திரும்பிச் சென்றால் பூமியில் அதில் விஷமம் (கலகம், பாவம்) செய்வதற்கும், விளைநிலம் இன்னும் கால்நடைகளை அழிப்பதற்கும் (பெரும் முயற்சி எடுத்து) வேலை செய்கிறான். அல்லாஹ், விஷமத்தை விரும்பமாட்டான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَاِذَا قِیْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ فَحَسْبُهٗ جَهَنَّمُ ؕ— وَلَبِئْسَ الْمِهَادُ ۟
இன்னும், “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்’’ என அவனுக்குக் கூறப்பட்டால், (அவனது) கர்வம் அவனை (மேலும்) குற்றம் செய்ய தூண்டுகிறது. ஆகவே, அவனுக்கு (தண்டனையால்) நரகமே போதும். அது மிக கெட்ட தங்குமிடமாகும்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَمِنَ النَّاسِ مَنْ یَّشْرِیْ نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ ۟
இன்னும், அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடி, (தன் செல்வத்தைக் கொடுத்து) தன் உயிரை (சொர்க்கத்திற்கு பதிலாக அல்லாஹ்விடம்) விற்பவரும் மக்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள் மீது மிக இரக்கமுடையவன் ஆவான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِی السِّلْمِ كَآفَّةً ۪— وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ— اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟
நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஸ்லாமில் முழுமையாக நுழையுங்கள். இன்னும், ஷைத்தானின் அடிச்சுவடுகளை (-அவன் உங்களை அழைக்கும் அவனது பாதைகளை)ப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரியாவான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
فَاِنْ زَلَلْتُمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْكُمُ الْبَیِّنٰتُ فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
ஆக, தெளிவான சான்றுகள் உங்களிடம் வந்த பின்னர் நீங்கள் (இஸ்லாமை விட்டு விலகி) வழிதவறி (வழிகேட்டில்) சென்றால் (அல்லாஹ்விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
هَلْ یَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ یَّاْتِیَهُمُ اللّٰهُ فِیْ ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلٰٓىِٕكَةُ وَقُضِیَ الْاَمْرُ ؕ— وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠
அல்லாஹ் மேகங்களின் நிழல்களில் அவர்களிடம் வருவதையும் இன்னும் வானவர்கள் வருவதையும் (அவர்களின்) காரியம் முடிக்கப்படுவதையும் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? காரியங்கள் எல்லாம் (முடிவில்) அல்லாஹ்வின் பக்கமே திருப்பப்படும்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់ហ្ពាក៏រ៉ោះ
សន្ទស្សន៍នៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ - សន្ទស្សន៍នៃការបកប្រែ

ដោយលោកអូម៉ើ ស្ហើរុីហ្វ ពិន អាប់ឌុស្សាឡាម

បិទ