Check out the new design

ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ * - សន្ទស្សន៍នៃការបកប្រែ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់ហ្ពាក៏រ៉ោះ   អាយ៉ាត់:
اُحِلَّ لَكُمْ لَیْلَةَ الصِّیَامِ الرَّفَثُ اِلٰی نِسَآىِٕكُمْ ؕ— هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَاَنْتُمْ لِبَاسٌ لَّهُنَّ ؕ— عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَكُمْ فَتَابَ عَلَیْكُمْ وَعَفَا عَنْكُمْ ۚ— فَالْـٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا كَتَبَ اللّٰهُ لَكُمْ ۪— وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰی یَتَبَیَّنَ لَكُمُ الْخَیْطُ الْاَبْیَضُ مِنَ الْخَیْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ ۪— ثُمَّ اَتِمُّوا الصِّیَامَ اِلَی الَّیْلِ ۚ— وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْتُمْ عٰكِفُوْنَ فِی الْمَسٰجِدِ ؕ— تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ اٰیٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟
நோன்புடைய இரவில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் உடலுறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை ஆவர். நீங்கள் அவர்களுக்கு ஆடை ஆவீர்கள். நிச்சயமாக நீங்கள் உங்களை ஏமாற்றுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் தவ்பாவை அவன் அங்கீகரித்தான். இன்னும், உங்களை விட்டும் முற்றிலும் தவறை போக்கி (மன்னித்து) விட்டான். ஆகவே, இப்போது நீங்கள் அதிகாலையில் கருப்பு நூலிலிருந்து வெள்ளை நூல் உங்களுக்குத் தெளிவாகும் வரை அவர்களுடன் உடலுறவு வைக்கலாம்; அல்லாஹ் உங்களுக்கு விதித்த (குழந்தை பாக்கியத்)தை நீங்கள் தேடலாம்; உண்ணலாம்; பருகலாம். (அதன்) பிறகு, இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள். நீங்கள் மஸ்ஜிதுகளில் (இஃதிகாஃப்) தங்கி இருக்கும்போது அவர்களுடன் (-மனைவிகளுடன்) உடலுறவு வைக்காதீர்கள். இவை அல்லாஹ்வுடைய சட்டங்களாகும். ஆகவே, அவற்றை நெருங்காதீர்கள். அல்லாஹ் மனிதர்களுக்கு - அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக - தன் வசனங்களை இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَلَا تَاْكُلُوْۤا اَمْوَالَكُمْ بَیْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَاۤ اِلَی الْحُكَّامِ لِتَاْكُلُوْا فَرِیْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟۠
இன்னும், உங்களுக்கு மத்தியில் உங்கள் செல்வங்களைத் தவறாக (பாவமாக) உண்ணாதீர்கள் (அனுபவிக்காதீர்கள்). நீங்கள் (செய்வது பாவம் என்று) அறிந்திருந்தும் மக்களுடைய செல்வங்களில் ஒரு பகுதியை தவறாக நீங்கள் உண்பதற்காக (-அனுபவிப்பதற்காக) அவற்றை அதிகாரிகளிடம் (லஞ்சமாக) கொடுக்காதீர்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ؕ— قُلْ هِیَ مَوَاقِیْتُ لِلنَّاسِ وَالْحَجِّ ؕ— وَلَیْسَ الْبِرُّ بِاَنْ تَاْتُوا الْبُیُوْتَ مِنْ ظُهُوْرِهَا وَلٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقٰی ۚ— وَاْتُوا الْبُیُوْتَ مِنْ اَبْوَابِهَا ۪— وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
(நபியே!) அவர்கள் பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அவை மக்களு(டைய கொடுக்கல் வாங்கலு)க்கும் ஹஜ்ஜுக்கும் காலங்களை அறிவிக்கக்கூடியவை ஆகும். இன்னும், நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் பின்வாசல்கள் வழியாக வருவது நன்மை இல்லை. எனினும், நன்மை என்பது யார் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறாரோ அதுதான். ஆகவே, நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்கள் வழியாக வாருங்கள். இன்னும் நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்!”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَقَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ الَّذِیْنَ یُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟
இன்னும் (மக்காவாசிகளில்) உங்களிடம் போர் புரிவோரிடம் அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் போர் புரியுங்கள். ஆனால், வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់ហ្ពាក៏រ៉ោះ
សន្ទស្សន៍នៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ - សន្ទស្សន៍នៃការបកប្រែ

ដោយលោកអូម៉ើ ស្ហើរុីហ្វ ពិន អាប់ឌុស្សាឡាម

បិទ