ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

លេខ​ទំព័រ:close

external-link copy
191 : 2

وَاقْتُلُوْهُمْ حَیْثُ ثَقِفْتُمُوْهُمْ وَاَخْرِجُوْهُمْ مِّنْ حَیْثُ اَخْرَجُوْكُمْ وَالْفِتْنَةُ اَشَدُّ مِنَ الْقَتْلِ ۚ— وَلَا تُقٰتِلُوْهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتّٰی یُقٰتِلُوْكُمْ فِیْهِ ۚ— فَاِنْ قٰتَلُوْكُمْ فَاقْتُلُوْهُمْ ؕ— كَذٰلِكَ جَزَآءُ الْكٰفِرِیْنَ ۟

அவர்களை நீங்கள் பார்த்த இடத்தில் அவர்களைக் கொல்லுங்கள். உங்களை அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள். இணைவைத்தல் கொலையைவிட மிகக் கடுமையானது. அல்மஸ்ஜிதுல் ஹராமின் அருகில் அவர்களிடம் போர் புரியாதீர்கள், அதில் அவர்கள், உங்களிடம் போர்புரியும் வரை. அவர்கள் உங்களிடம் போரிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள். இப்படித்தான் நிராகரிப்பவர்களின் கூலி. info
التفاسير:

external-link copy
192 : 2

فَاِنِ انْتَهَوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

அவர்கள் விலகிக் கொண்டால் (விட்டுவிடுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
193 : 2

وَقٰتِلُوْهُمْ حَتّٰی لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّیَكُوْنَ الدِّیْنُ لِلّٰهِ ؕ— فَاِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ اِلَّا عَلَی الظّٰلِمِیْنَ ۟

இணைவைத்தல் நீங்கி, வழிபாடு அல்லாஹ்விற்கு ஆகும் வரை அவர்களிடம் போர் புரியுங்கள். அவர்கள் விலகிக் கொண்டால் அநியாயக்காரர்கள் மீதே தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்துமீறல் இல்லை. info
التفاسير:

external-link copy
194 : 2

اَلشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمٰتُ قِصَاصٌ ؕ— فَمَنِ اعْتَدٰی عَلَیْكُمْ فَاعْتَدُوْا عَلَیْهِ بِمِثْلِ مَا اعْتَدٰی عَلَیْكُمْ ۪— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟

புனித மாதம் புனித மாதத்திற்கு (பதிலாகும்). புனிதங்கள் (பாழ்படுத்தப் பட்டால்) பழிதீர்க்கப்பட வேண்டும். ஆகவே, யார் உங்கள் மீது வரம்பு மீறினாரோ, அவர் உங்கள் மீது வரம்பு மீறியது போன்றே (நீங்களும்) அவர் மீது வரம்பு மீறுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். info
التفاسير:

external-link copy
195 : 2

وَاَنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَیْدِیْكُمْ اِلَی التَّهْلُكَةِ ۛۚ— وَاَحْسِنُوْا ۛۚ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟

அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் புரியுங்கள்; உங்கள் கரங்களை அழிவில் போடாதீர்கள்; நல்லறம் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிவோரை நேசிக்கிறான். info
التفاسير:

external-link copy
196 : 2

وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ ؕ— فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَیْسَرَ مِنَ الْهَدْیِ ۚ— وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰی یَبْلُغَ الْهَدْیُ مَحِلَّهٗ ؕ— فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِیْضًا اَوْ بِهٖۤ اَذًی مِّنْ رَّاْسِهٖ فَفِدْیَةٌ مِّنْ صِیَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍ ۚ— فَاِذَاۤ اَمِنْتُمْ ۥ— فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَی الْحَجِّ فَمَا اسْتَیْسَرَ مِنَ الْهَدْیِ ۚ— فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ ثَلٰثَةِ اَیَّامٍ فِی الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْ ؕ— تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ؕ— ذٰلِكَ لِمَنْ لَّمْ یَكُنْ اَهْلُهٗ حَاضِرِی الْمَسْجِدِ الْحَرَامِ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟۠

நீங்கள் ஹஜ்ஜையும் உம்றாவையும் அல்லாஹ்வுக்காக முழுமையாக்குங்கள். நீங்கள் தடுக்கப்பட்டால் பலியில் சாத்தியமானது (பரிகாரமாகும்). பலி தன் இடத்தை அடையும் வரை உங்கள் தலைகளை சிரைக்காதீர்கள். உங்களில் எவர், நோயாளியாக இருக்கிறாரோ அல்லது அவருடைய தலையில் அவருக்கு இடையூறு இருக்குமோ ஆகவே, (அவர்) நோன்பு அல்லது தர்மம் அல்லது பலிகளிலிருந்து பரிகாரம் (செய்யவும்). நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் எவர் உம்றாவைக் கொண்டு ஹஜ்ஜு வரை சுகம் அனுபவிப்பாரோ (அவர்) பலியில் சாத்தியமானது (கொடுக்கவும்). எவர் (பலியை) பெறவில்லையோ, அவர் ஹஜ்ஜில் மூன்று நாட்கள் நோன்பும் நீங்கள் திரும்பியபின் ஏழும் (வைக்க வேண்டும்). அவை முழுமையான பத்தாகும். இது எவருடைய குடும்பம் அல் மஸ்ஜிதுல் ஹராமில் வசிப்பவர்களாக இருக்கவில்லையோ அவருக்குத்தான். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். info
التفاسير: