លេខ​ទំព័រ:close

external-link copy
216 : 2

كُتِبَ عَلَیْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ ۚ— وَعَسٰۤی اَنْ تَكْرَهُوْا شَیْـًٔا وَّهُوَ خَیْرٌ لَّكُمْ ۚ— وَعَسٰۤی اَنْ تُحِبُّوْا شَیْـًٔا وَّهُوَ شَرٌّ لَّكُمْ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟۠

போர் உங்கள் மீது கடமையாக்கப்பட்டது. அதுவோ உங்களுக்குச் சிரமமானது. நீங்கள் ஒன்றை வெறுக்கலாம்; அதுவோ உங்களுக்குச் சிறந்ததாகும். நீங்கள் ஒன்றை விரும்பலாம்; அதுவோ உங்களுக்கு தீமையாகும். அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். info
التفاسير: |

external-link copy
217 : 2

یَسْـَٔلُوْنَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِیْهِ ؕ— قُلْ قِتَالٌ فِیْهِ كَبِیْرٌ ؕ— وَصَدٌّ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَكُفْرٌ بِهٖ وَالْمَسْجِدِ الْحَرَامِ ۗ— وَاِخْرَاجُ اَهْلِهٖ مِنْهُ اَكْبَرُ عِنْدَ اللّٰهِ ۚ— وَالْفِتْنَةُ اَكْبَرُ مِنَ الْقَتْلِ ؕ— وَلَا یَزَالُوْنَ یُقَاتِلُوْنَكُمْ حَتّٰی یَرُدُّوْكُمْ عَنْ دِیْنِكُمْ اِنِ اسْتَطَاعُوْا ؕ— وَمَنْ یَّرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِیْنِهٖ فَیَمُتْ وَهُوَ كَافِرٌ فَاُولٰٓىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ— وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

(இந்த) புனித மாதம் அதில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "அதில் போர் புரிவது (பாவத்தால்) பெரியதாகும். அல்லாஹ்வுடைய பாதை இன்னும் அல்மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பதும், அவனை (அல்லாஹ்வை) நிராகரிப்பதும், அதில் வசிப்போரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (பாவத்தால் அதைவிட) மிகப்பெரியதாகும்." இணைவைத்தல் (பாவத்தால்) கொலையைவிட மிகப் பெரியதாகும். அவர்கள் சக்தி பெற்றால் உங்களை உங்கள் மார்க்கத்தைவிட்டு அவர்கள் திருப்பிவிடும் வரை உங்களிடம் ஓயாது போர் புரிந்து கொண்டே இருப்பார்கள். உங்களில் எவர்கள் தமது மார்க்கத்தை விட்டு மாறி அவர்கள் நிராகரிப்பாளர்களாகவே இறந்துவிட்டால், அவர்களின் (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள். info
التفاسير: |

external-link copy
218 : 2

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَاجَرُوْا وَجٰهَدُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۙ— اُولٰٓىِٕكَ یَرْجُوْنَ رَحْمَتَ اللّٰهِ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள் இன்னும் ஹிஜ்ரத் செய்து, அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாது செய்தவர்கள் அவர்கள் அல்லாஹ்வுடைய கருணையை ஆதரவு வைக்கிறார்கள். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன். info
التفاسير: |

external-link copy
219 : 2

یَسْـَٔلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَیْسِرِ ؕ— قُلْ فِیْهِمَاۤ اِثْمٌ كَبِیْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ ؗ— وَاِثْمُهُمَاۤ اَكْبَرُ مِنْ نَّفْعِهِمَا ؕ— وَیَسْـَٔلُوْنَكَ مَاذَا یُنْفِقُوْنَ ؕ۬— قُلِ الْعَفْوَؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ ۟ۙ

மது இன்னும் சூதாட்டத்தைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "அவ்விரண்டிலும் பெரும் பாவமும், மக்களுக்கு(ச் சில) பலன்களும் உள்ளன. அவ்விரண்டின் பாவம் அவ்விரண்டின் பலனைவிட மிகப் பெரிது." இன்னும் அவர்கள் எதைத் தர்மம் செய்யவேண்டுமென உம்மிடம் கேட்கிறார்கள். "மீதமுள்ளதை" எனக் கூறுவீராக! நீங்கள் இம்மை, மறுமையி(ன் காரியத்தி)ல் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான். info
التفاسير: |