ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

លេខ​ទំព័រ:close

external-link copy
270 : 2

وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ نَّفَقَةٍ اَوْ نَذَرْتُمْ مِّنْ نَّذْرٍ فَاِنَّ اللّٰهَ یَعْلَمُهٗ ؕ— وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟

தர்மத்தில் எதை நீங்கள் தர்மம் புரிந்தாலும் அல்லது நேர்ச்சையில் எதை நேர்ந்து கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் ஒருவருமே இல்லை. info
التفاسير:

external-link copy
271 : 2

اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِیَ ۚ— وَاِنْ تُخْفُوْهَا وَتُؤْتُوْهَا الْفُقَرَآءَ فَهُوَ خَیْرٌ لَّكُمْ ؕ— وَیُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَیِّاٰتِكُمْ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟

தர்மங்களை நீங்கள் வெளிப்படுத்தினால் அவை நன்றே. அவற்றை நீங்கள் மறைத்து, அவற்றை ஏழைகளுக்குத் தருவது அதுவும் உங்களுக்குச் சிறந்ததுதான். உங்கள் பாவங்களில் சிலவற்றை உங்களை விட்டு அது அகற்றி விடும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன். info
التفاسير:

external-link copy
272 : 2

لَیْسَ عَلَیْكَ هُدٰىهُمْ وَلٰكِنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ— وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَلِاَنْفُسِكُمْ ؕ— وَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَآءَ وَجْهِ اللّٰهِ ؕ— وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ یُّوَفَّ اِلَیْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ۟

(நபியே) அவர்களை நேர்வழி செலுத்துவது உம் மீது (பொறுப்பு) அல்ல. என்றாலும் அல்லாஹ், தான் நாடியவரை நேர்வழி செலுத்துகிறான். செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும் (அது) உங்களுக்கே (நன்மை). அல்லாஹ்வின் முகத்தை நாடியே தவிர, (புகழுக்காக) நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். (புகழை நாடாமல்) செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும் அது உங்களுக்கு முழு (நன்)மையாக நிறைவேற்றப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். info
التفاسير:

external-link copy
273 : 2

لِلْفُقَرَآءِ الَّذِیْنَ اُحْصِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ لَا یَسْتَطِیْعُوْنَ ضَرْبًا فِی الْاَرْضِ ؗ— یَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِیَآءَ مِنَ التَّعَفُّفِ ۚ— تَعْرِفُهُمْ بِسِیْمٰىهُمْ ۚ— لَا یَسْـَٔلُوْنَ النَّاسَ اِلْحَافًا ؕ— وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟۠

அல்லாஹ்வின் பாதையில் தடுக்கப்பட்ட ஏழைகளுக்கு (தர்மம் கொடுப்பது ஏற்றமானது). அவர்கள் (செல்வத்தைத் தேடி) பூமியில் பயணிக்க இயல மாட்டார்கள். அறியாதவர் (அவர்களின்) ஒழுக்கத்தால் (கையேந்தாமையால்) அவர்களைச் செல்வந்தர்கள் என நினைக்கிறார். (ஆனால்) அவர்களின் அடையாளத்தால் நீர் அவர்களை (தேவையுடையோர் என)ப் புரியலாம். அவர்கள் மக்களிடம் வலியுறுத்தி யாசிக்க மாட்டார்கள். நீங்கள் செல்வத்திலிருந்து எதை தர்மம் புரிந்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
274 : 2

اَلَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ سِرًّا وَّعَلَانِیَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ؔ

தங்கள் செல்வங்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தர்மம் புரிபவர்கள், அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு; அவர்கள் மீது பயமில்லை; அவர்கள் துக்கப்பட மாட்டார்கள். info
التفاسير: