ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

លេខ​ទំព័រ:close

external-link copy
3 : 25

وَاتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً لَّا یَخْلُقُوْنَ شَیْـًٔا وَّهُمْ یُخْلَقُوْنَ وَلَا یَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ ضَرًّا وَّلَا نَفْعًا وَّلَا یَمْلِكُوْنَ مَوْتًا وَّلَا حَیٰوةً وَّلَا نُشُوْرًا ۟

அவர்கள் அவனை அன்றி (பல) கடவுள்களை எடுத்துக் கொண்டனர். அவர்கள் (-அந்த கடவுள்கள்) எதையும் படைக்க மாட்டார்கள். அவர்கள் படைக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்குத் தாமே தீமை செய்வதற்கும் நன்மை செய்வதற்கும் உரிமைபெற மாட்டார்கள். இன்னும் (பிறரின்) இறப்பிற்கும் வாழ்விற்கும் (அவரை) மீண்டும் உயிர்த்தெழச் செய்வதற்கும் அவர்கள் உரிமை பெற மாட்டார்கள். info
التفاسير: |

external-link copy
4 : 25

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اِفْكُ ١فْتَرٰىهُ وَاَعَانَهٗ عَلَیْهِ قَوْمٌ اٰخَرُوْنَ ۛۚ— فَقَدْ جَآءُوْ ظُلْمًا وَّزُوْرًا ۟ۚۛ

நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர்: “இது (-இந்த குர்ஆன்) இட்டுக்கட்டப்பட்டதே தவிர வேறு இல்லை. இவர் (-இந்த தூதர்) இதை இட்டுக்கட்டினார். இவருக்கு மற்ற மக்கள் இதற்கு உதவினர்.” ஆகவே, திட்டமாக இவர்கள் பெரும் அநியாயத்திற்கும் பொய்யுக்கும் வந்தனர். info
التفاسير: |

external-link copy
5 : 25

وَقَالُوْۤا اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ اكْتَتَبَهَا فَهِیَ تُمْلٰی عَلَیْهِ بُكْرَةً وَّاَصِیْلًا ۟

இன்னும் கூறினர்: (இந்த குர்ஆன்) முன்னோரின் கட்டுக் கதைகள். அவர் இவற்றை எழுதிக்கொண்டார். இவை அவர் மீது காலையிலும் மாலையிலும் எடுத்தியம்பப்படுகிறது. info
التفاسير: |

external-link copy
6 : 25

قُلْ اَنْزَلَهُ الَّذِیْ یَعْلَمُ السِّرَّ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— اِنَّهٗ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟

(நபியே!) கூறுவீராக! வானங்களிலும் பூமியிலும் ரகசியத்தை அறிபவன்தான் இதை இறக்கினான். நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான். info
التفاسير: |

external-link copy
7 : 25

وَقَالُوْا مَالِ هٰذَا الرَّسُوْلِ یَاْكُلُ الطَّعَامَ وَیَمْشِیْ فِی الْاَسْوَاقِ ؕ— لَوْلَاۤ اُنْزِلَ اِلَیْهِ مَلَكٌ فَیَكُوْنَ مَعَهٗ نَذِیْرًا ۟ۙ

அவர்கள் கூறுகின்றனர்: இந்த தூதருக்கு என்ன! இவர் உணவு சாப்பிடுகிறார், கடைத் தெருக்களில் நடக்கிறார். இவர் மீது ஒரு வானவர் இறக்கப்பட்டு அவர் இவருடன் (மக்களை) எச்சரிப்பவராக இருக்க வேண்டாமா? info
التفاسير: |

external-link copy
8 : 25

اَوْ یُلْقٰۤی اِلَیْهِ كَنْزٌ اَوْ تَكُوْنُ لَهٗ جَنَّةٌ یَّاْكُلُ مِنْهَا ؕ— وَقَالَ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا ۟

அல்லது இவருக்கு ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா! அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருக்க வேண்டாமா! இவர் அதிலிருந்து புசிப்பாரே! அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்: “நீங்கள் (உணவு சாப்பிடும்) குடல் உள்ள ஒரு (சாதாரண) மனிதரைத் தவிர (புனிதமான வானவர்களை) நீங்கள் பின்பற்றவில்லை.” info
التفاسير: |

external-link copy
9 : 25

اُنْظُرْ كَیْفَ ضَرَبُوْا لَكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا یَسْتَطِیْعُوْنَ سَبِیْلًا ۟۠

(நபியே!) பார்ப்பீராக! அவர்கள் எப்படி உமக்கு தன்மைகளை விவரிக்கின்றனர். ஆகவே, அவர்கள் வழிகெட்டனர். (சத்தியத்தின் பக்கம் வர) ஒரு பாதைக்கும் அவர்கள் சக்தி பெறமாட்டார்கள். info
التفاسير: |

external-link copy
10 : 25

تَبٰرَكَ الَّذِیْۤ اِنْ شَآءَ جَعَلَ لَكَ خَیْرًا مِّنْ ذٰلِكَ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ— وَیَجْعَلْ لَّكَ قُصُوْرًا ۟

அவன் (-அல்லாஹ்) அருள் நிறைந்தவன். அவன் நாடினால் உமக்கு இவற்றைவிட சிறந்ததை - அவற்றை சுற்றி நதிகள் ஓடும் சொர்க்கங்களை- ஏற்படுத்துவான். இன்னும் உமக்கு (அங்கு) மாளிகைகளை ஏற்படுத்துவான். info
التفاسير: |

external-link copy
11 : 25

بَلْ كَذَّبُوْا بِالسَّاعَةِ وَاَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِیْرًا ۟ۚ

மாறாக, அவர்கள் உலக முடிவை பொய்ப்பித்தனர். உலக முடிவை பொய்ப்பிப்பவருக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார்படுத்தியுள்ளோம். info
التفاسير: |