ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

លេខ​ទំព័រ:close

external-link copy
56 : 25

وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِیْرًا ۟

நற்செய்தி கூறுபவராக இன்னும் எச்சரிப்பவராகவே தவிர (உம்மை கண்காணிப்பாளராக) நாம் அனுப்பவில்லை. info
التفاسير: |

external-link copy
57 : 25

قُلْ مَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ اِلَّا مَنْ شَآءَ اَنْ یَّتَّخِذَ اِلٰی رَبِّهٖ سَبِیْلًا ۟

(நபியே!) கூறுவீராக! நான் இதற்காக உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. எனினும் யார் தன் இறைவனிடம் தனக்கு ஒரு பாதையை எடுத்துக்கொள்ள நாடினானோ அவன் தன் இறைவனுடைய வழியில் (தன் செல்வத்தை செலவு செய்து இறைவனின் அருளை அடைந்து கொள்ளட்டும்). info
التفاسير: |

external-link copy
58 : 25

وَتَوَكَّلْ عَلَی الْحَیِّ الَّذِیْ لَا یَمُوْتُ وَسَبِّحْ بِحَمْدِهٖ ؕ— وَكَفٰی بِهٖ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِیْرَا ۟

(நபியே!) மரணிக்காத என்றும் உயிருள்ளவன் மீது நம்பிக்கை வைப்பீராக! அவனைப் புகழ்ந்து துதிப்பீராக! தன் அடியார்களின் பாவங்களை ஆழ்ந்தறிபவனாக அவனே போதுமானவன்! info
التفاسير: |

external-link copy
59 : 25

١لَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ۛۚ— اَلرَّحْمٰنُ فَسْـَٔلْ بِهٖ خَبِیْرًا ۟

அவன்தான் வானங்களையும் பூமியையும் அவற்றுக்கு இடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது உயர்ந்து விட்டான். அவன் பேரருளாளன். அவனை (-ரஹ்மானை) அறிந்தவனிடம் கேட்பீராக! (நான்தான் அறிந்தவன். நான் அவனை (-ரஹ்மானை)ப் பற்றி அறிவித்தால் அது நான் அறிவித்தது போன்றே.) info
التفاسير: |

external-link copy
60 : 25

وَاِذَا قِیْلَ لَهُمُ اسْجُدُوْا لِلرَّحْمٰنِ ۚ— قَالُوْا وَمَا الرَّحْمٰنُ ۗ— اَنَسْجُدُ لِمَا تَاْمُرُنَا وَزَادَهُمْ نُفُوْرًا ۟

ரஹ்மானுக்கு (அந்த பேரருளாளனுக்கு) சிரம் பணியுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால் அவர்கள் கூறுகின்றனர்: “ரஹ்மான் யார்? நீர் ஏவக்கூடியவனுக்கு நாங்கள் சிரம் பணிய வேண்டுமா?” அது (-ரஹ்மானாகிய அந்த உண்மை இறைவனுக்கு மட்டும் சிரம் பணியுங்கள் என்று சொல்வது) அவர்களுக்கு வெறுப்பை அதிகப்படுத்தியது. info
التفاسير: |

external-link copy
61 : 25

تَبٰرَكَ الَّذِیْ جَعَلَ فِی السَّمَآءِ بُرُوْجًا وَّجَعَلَ فِیْهَا سِرٰجًا وَّقَمَرًا مُّنِیْرًا ۟

வானங்களில் பெரும் கோட்டைகளை அமைத்தவன் மிக்க அருள் நிறைந்தவன். அவன்தான் அதில் சூரியனையும் ஒளிரும் சந்திரனையும் அமைத்தான். info
التفاسير: |

external-link copy
62 : 25

وَهُوَ الَّذِیْ جَعَلَ الَّیْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ اَرَادَ اَنْ یَّذَّكَّرَ اَوْ اَرَادَ شُكُوْرًا ۟

அவன்தான் இரவையும் பகலையும் (ஒன்றுக்கு ஒன்று) பகரமாக அமைத்தான், நல்லறிவு பெற நாடுபவருக்கு அல்லது நன்றி செய்ய நாடுபவருக்கு. info
التفاسير: |

external-link copy
63 : 25

وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِیْنَ یَمْشُوْنَ عَلَی الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا ۟

ரஹ்மானுடைய அடியார்கள் பூமியில் மென்மையாக (அடக்கமாக, பணிவாக, பெருமையின்றி, அக்கிரமம் செய்யாமல்) நடப்பார்கள். அவர்களிடம் அறிவீனர்கள் பேசினால் ஸலாம் கூறி(விலகி)விடுவார்கள். info
التفاسير: |

external-link copy
64 : 25

وَالَّذِیْنَ یَبِیْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِیَامًا ۟

தங்கள் இறைவனுக்கு சிரம் பணிந்தவர்களாகவும் நின்றவர்களாகவும் இரவு கழிப்பார்கள். info
التفاسير: |

external-link copy
65 : 25

وَالَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖۗ— اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ۟ۗۖ

அவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா! எங்களை விட்டு ஜஹன்னமுடைய தண்டனையை திருப்பி விடு. நிச்சயமாக அதனுடைய தண்டனை நீங்காத ஒன்றாக இருக்கிறது. info
التفاسير: |

external-link copy
66 : 25

اِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا ۟

நிச்சயமாக அது நிரந்தரமான தங்குமிடத்தாலும் தற்காலிகமான தங்குமிடத்தாலும் மிக கெட்டது. (அதில் நிரந்தரமாகவும் தங்கமுடியாது. தற்காலிகமாகவும் தங்கமுடியாது, மிக கெட்ட இருப்பிடமாகும்). info
التفاسير: |

external-link copy
67 : 25

وَالَّذِیْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ یُسْرِفُوْا وَلَمْ یَقْتُرُوْا وَكَانَ بَیْنَ ذٰلِكَ قَوَامًا ۟

அவர்கள் செலவு செய்தால் வரம்பு மீறமாட்டார்கள், கருமித்தனமும் காட்ட மாட்டார்கள். அதற்கு மத்தியில் நடுநிலையாக இருக்கும் (அவர்கள் செலவழிப்பது). info
التفاسير: |