ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

លេខ​ទំព័រ:close

external-link copy
33 : 25

وَلَا یَاْتُوْنَكَ بِمَثَلٍ اِلَّا جِئْنٰكَ بِالْحَقِّ وَاَحْسَنَ تَفْسِیْرًا ۟ؕ

(நபியே!) அவர்கள் உமக்கு எந்த ஒரு தன்மையையும் கூறமாட்டார்கள் (அதை முறிப்பதற்கு) சத்தியத்தையும் மிக அழகான விளக்கத்தையும் உமக்கு நாம் கூறியே தவிர. info
التفاسير: |

external-link copy
34 : 25

اَلَّذِیْنَ یُحْشَرُوْنَ عَلٰی وُجُوْهِهِمْ اِلٰی جَهَنَّمَ ۙ— اُولٰٓىِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ سَبِیْلًا ۟۠

எவர்கள் தங்கள் முகங்களின் மீது நரகத்தின் பக்கம் எழுப்பப்படுகிறார்களோ அவர்கள்தான் தங்குமிடத்தால் மிக கெட்டவர்கள், பாதையால் மிக வழிதவறியவர்கள். info
التفاسير: |

external-link copy
35 : 25

وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَجَعَلْنَا مَعَهٗۤ اَخَاهُ هٰرُوْنَ وَزِیْرًا ۟ۚۖ

திட்டவட்டமாக மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். அவருடன் அவரது சகோதரர் ஹாரூனை உதவியாளராக ஆக்கினோம். info
التفاسير: |

external-link copy
36 : 25

فَقُلْنَا اذْهَبَاۤ اِلَی الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ— فَدَمَّرْنٰهُمْ تَدْمِیْرًا ۟ؕ

நாம் கூறினோம்: “நீங்கள் இருவரும் நமது அத்தாட்சிகளை பொய்ப்பித்த மக்களிடம் செல்லுங்கள்” (அம்மக்கள் அவ்விருவரையும் நிராகரித்துவிட்டனர்) ஆகவே, நாம் அவர்களை முற்றிலும் தரை மட்டமாக அழித்து விட்டோம். info
التفاسير: |

external-link copy
37 : 25

وَقَوْمَ نُوْحٍ لَّمَّا كَذَّبُوا الرُّسُلَ اَغْرَقْنٰهُمْ وَجَعَلْنٰهُمْ لِلنَّاسِ اٰیَةً ؕ— وَاَعْتَدْنَا لِلظّٰلِمِیْنَ عَذَابًا اَلِیْمًا ۟ۚۙ

இன்னும் நூஹ் உடைய மக்களையும் அவர்கள் தூதர்களை பொய்ப்பித்த போது அவர்களை மூழ்கடித்தோம். அவர்களை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். இன்னும் அநியாயக்காரர்களுக்கு வலி தரும் தண்டனையை நாம் தயார்படுத்தியுள்ளோம். info
التفاسير: |

external-link copy
38 : 25

وَّعَادًا وَّثَمُوْدَاۡ وَاَصْحٰبَ الرَّسِّ وَقُرُوْنًا بَیْنَ ذٰلِكَ كَثِیْرًا ۟

ஆது, ஸமூது, கிணறு (அல்லது குழி) வாசிகள், இன்னும் இவர்களுக்கிடையில் பல தலைமுறையினரை (நாம் தரைமட்டமாக அழித்துள்ளோம்). info
التفاسير: |

external-link copy
39 : 25

وَكُلًّا ضَرَبْنَا لَهُ الْاَمْثَالَ ؗ— وَكُلًّا تَبَّرْنَا تَتْبِیْرًا ۟

எல்லோருக்கும் நாம் பல உதாரணங்களை விவரித்தோம். (அவர்கள் மறுக்கவே, மறுத்த) எல்லோரையும் நாம் அடியோடு அழித்துவிட்டோம். info
التفاسير: |

external-link copy
40 : 25

وَلَقَدْ اَتَوْا عَلَی الْقَرْیَةِ الَّتِیْۤ اُمْطِرَتْ مَطَرَ السَّوْءِ ؕ— اَفَلَمْ یَكُوْنُوْا یَرَوْنَهَا ۚ— بَلْ كَانُوْا لَا یَرْجُوْنَ نُشُوْرًا ۟

திட்டவட்டமாக மிக மோசமான மழை பொழியப்பட்ட ஊரின் அருகில் அவர்கள் வந்திருக்கின்றனர். அதை (அந்த ஊரை) அவர்கள் பார்த்திருக்கவில்லையா? மாறாக, அவர்கள் (மறுமையில்) எழுப்பப்படுவதை ஆதரவு வைக்காதவர்களாக (-நம்பாதவர்களாக) இருந்தனர். info
التفاسير: |

external-link copy
41 : 25

وَاِذَا رَاَوْكَ اِنْ یَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ— اَهٰذَا الَّذِیْ بَعَثَ اللّٰهُ رَسُوْلًا ۟

அவர்கள் உம்மைப் பார்த்தால் “இவரையா அல்லாஹ் தூதராக அனுப்பினான்?” என்று உம்மை கேலியாகவே தவிர எடுத்துக்கொள்ள மாட்டார்கள். info
التفاسير: |

external-link copy
42 : 25

اِنْ كَادَ لَیُضِلُّنَا عَنْ اٰلِهَتِنَا لَوْلَاۤ اَنْ صَبَرْنَا عَلَیْهَا ؕ— وَسَوْفَ یَعْلَمُوْنَ حِیْنَ یَرَوْنَ الْعَذَابَ مَنْ اَضَلُّ سَبِیْلًا ۟

இவர் நமது தெய்வங்களை விட்டு நம்மை நிச்சயமாக வழி கெடுத்திருப்பார், நாம் அவற்றின் மீது உறுதியாக இருந்திருக்கவில்லையென்றால். அவர்கள் தண்டனையை பார்க்கும் போது “யார் பாதையால் மிக வழிகெட்டவர்” (வழிகெட்ட பாதையில் சென்றவர்) என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள். info
التفاسير: |

external-link copy
43 : 25

اَرَءَیْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُ ؕ— اَفَاَنْتَ تَكُوْنُ عَلَیْهِ وَكِیْلًا ۟ۙ

தனது கடவுளாக தனது மனஇச்சையை எடுத்துக் கொண்டவனை நீர் பார்த்தீரா? அவனுக்கு நீர் பொறுப்பாளராக ஆகுவீரா? info
التفاسير: |