Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് വിവർത്തനം - അബ്ദുൽ ഹമീദ് ബാഖവി * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

XML CSV Excel API
Please review the Terms and Policies

പരിഭാഷ അദ്ധ്യായം: അൻആം   ആയത്ത്:
وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ لِاَبِیْهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصْنَامًا اٰلِهَةً ۚ— اِنِّیْۤ اَرٰىكَ وَقَوْمَكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
74. இப்றாஹீம் தன் தந்தையாகிய ஆஜரை நோக்கி, ‘‘நீர் சிலைகளைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டீரா?'' என்று கேட்டு, ‘‘நிச்சயமாக நீரும் உமது மக்களும் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கின்றன்'' என்று கூறினார்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَكَذٰلِكَ نُرِیْۤ اِبْرٰهِیْمَ مَلَكُوْتَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلِیَكُوْنَ مِنَ الْمُوْقِنِیْنَ ۟
75. இப்றாஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَلَمَّا جَنَّ عَلَیْهِ الَّیْلُ رَاٰ كَوْكَبًا ۚ— قَالَ هٰذَا رَبِّیْ ۚ— فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَاۤ اُحِبُّ الْاٰفِلِیْنَ ۟
76. (ஒரு நாள்) இருள் சூழ்ந்த இரவில் அவர் (மின்னிக் கொண்டிருந்த) ஒரு நட்சத்திரத்தைக் கண்டு, ‘‘இது என் இறைவன் (ஆகுமா?)'' என (தம் மக்களைக்) கேட்டு, அது மறையவே, ‘‘மறையக்கூடியவற்றை (இறைவனாக எடுத்துக் கொள்ள) நான் விரும்பமாட்டேன்'' எனக் கூறிவிட்டார்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَلَمَّا رَاَ الْقَمَرَ بَازِغًا قَالَ هٰذَا رَبِّیْ ۚ— فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَىِٕنْ لَّمْ یَهْدِنِیْ رَبِّیْ لَاَكُوْنَنَّ مِنَ الْقَوْمِ الضَّآلِّیْنَ ۟
77. பின்னர், உதயமான சந்திரனைக் காணவே ‘‘இது என் இறைவன் (ஆகுமா?)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே (அதையும் நிராகரித்துவிட்டு), ‘‘எனது இறைவன் எனக்கு நேரான வழியை அறிவிக்காவிட்டால் வழி தவறிய மக்களில் நிச்சயமாக நானும் ஒருவனாகிவிடுவேன்'' என்று கூறினார்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَلَمَّا رَاَ الشَّمْسَ بَازِغَةً قَالَ هٰذَا رَبِّیْ هٰذَاۤ اَكْبَرُ ۚ— فَلَمَّاۤ اَفَلَتْ قَالَ یٰقَوْمِ اِنِّیْ بَرِیْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ۟
78. பின்னர், உதயமான (பளிச்சென்று நன்கு ஒளிரும்) சூரியனைக் கண்டபொழுது ‘‘இது மிகப்பெரியதாயிருக்கிறது. இது என் இறைவன் (ஆகுமா?)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே, அவர் (தம் மக்களை நோக்கி), ‘‘என் மக்களே! நீங்கள் (இறைவனுக்கு) இணையாக்கும் (இவை) ஒவ்வொன்றிலிருந்தும் நிச்சயமாக நான் வெறுத்து விலகிக்கொண்டேன்'' என்று கூறிவிட்டு,
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنِّیْ وَجَّهْتُ وَجْهِیَ لِلَّذِیْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ حَنِیْفًا وَّمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۚ
79. ‘‘வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அ(ந்த ஒரு)வனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகின்றன். நான் (அவனுக்கு எதையும்) இணைவைப்பவன் அல்ல'' (என்று கூறினார்.)
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَحَآجَّهٗ قَوْمُهٗ ؕ— قَالَ اَتُحَآجُّوْٓنِّیْ فِی اللّٰهِ وَقَدْ هَدٰىنِ ؕ— وَلَاۤ اَخَافُ مَا تُشْرِكُوْنَ بِهٖۤ اِلَّاۤ اَنْ یَّشَآءَ رَبِّیْ شَیْـًٔا ؕ— وَسِعَ رَبِّیْ كُلَّ شَیْءٍ عِلْمًا ؕ— اَفَلَا تَتَذَكَّرُوْنَ ۟
80. (இதைப் பற்றி) அவருடன் அவருடைய மக்கள் தர்க்கித்தார்கள். அதற்கு (அம்மக்களை நோக்கி) அவர் கூறினார்: ‘‘நீங்கள், (படைப்பவனாகிய) அல்லாஹ்வைப் பற்றியா என்னுடன் தர்க்கிக்கிறீர்கள்? நிச்சயமாக அவன் எனக்கு நேரான வழியை அறிவித்துவிட்டான். என் இறைவன் எதையும் விரும்பினாலன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவை(கள் எனக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. ஆகவே, அவை)களுக்கு நான் பயப்படமாட்டேன். என் இறைவன் அனைவரையும்விட கல்வியில் மிக்க விசாலமானவன். (இவ்வளவுகூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَكَیْفَ اَخَافُ مَاۤ اَشْرَكْتُمْ وَلَا تَخَافُوْنَ اَنَّكُمْ اَشْرَكْتُمْ بِاللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ عَلَیْكُمْ سُلْطٰنًا ؕ— فَاَیُّ الْفَرِیْقَیْنِ اَحَقُّ بِالْاَمْنِ ۚ— اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟ۘ
81. உங்களுக்கு அல்லாஹ் எதற்கு அத்தாட்சியை இறக்கவில்லையோ அதை நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கியதைப் பற்றி ஒரு சிறிதும் நீங்கள் பயப்படாதிருக்க, நீங்கள் இணைவைத்தவற்றை நான் எவ்வாறு பயப்படுவேன். அச்சமற்றிருக்க நம்மிரு பிரிவினரில் மிகத் தகுதியுடையவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (கூறுங்கள்).
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
 
പരിഭാഷ അദ്ധ്യായം: അൻആം
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് വിവർത്തനം - അബ്ദുൽ ഹമീദ് ബാഖവി - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

വിവർത്തനം : അബ്ദുൽ ഹമീദ് ബാഖവി

അടക്കുക