Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് വിവർത്തനം - അബ്ദുൽ ഹമീദ് ബാഖവി * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

XML CSV Excel API
Please review the Terms and Policies

പരിഭാഷ അദ്ധ്യായം: അൻആം   ആയത്ത്:
قُلْ اَیُّ شَیْءٍ اَكْبَرُ شَهَادَةً ؕ— قُلِ اللّٰهُ ۫— شَهِیْدٌۢ بَیْنِیْ وَبَیْنَكُمْ ۫— وَاُوْحِیَ اِلَیَّ هٰذَا الْقُرْاٰنُ لِاُنْذِرَكُمْ بِهٖ وَمَنْ بَلَغَ ؕ— اَىِٕنَّكُمْ لَتَشْهَدُوْنَ اَنَّ مَعَ اللّٰهِ اٰلِهَةً اُخْرٰی ؕ— قُلْ لَّاۤ اَشْهَدُ ۚ— قُلْ اِنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ وَّاِنَّنِیْ بَرِیْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ۟ۘ
19. (நபியே!) ‘‘சாட்சிகளில் மிகப் பெரியது எது?'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (அவர் களால் என்ன கூறமுடியும்? நீரே அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வே! (பெரியவன். அவனே) எனக்கும் உங்களுக்கும் இடையில் சாட்சியாக(வும்) இருக்கிறான். இந்தக் குர்ஆனைக் கொண்டு உங்களுக்கும், (அது) எட்டியவர்களுக்கும் நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே இது எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி, நிச்சயமாக வணக்கத்திற்குரிய மற்றெவரும் அல்லாஹ்வுடன் இருப்பதாக, (உண்மையாகவே) நீங்கள் சாட்சி கூறுவீர்களா?'' (என்றும் அவர்களை) நீர் கேட்பீராக. (இதற்கவர்கள் பதில் கூறுவதென்ன! ‘‘அவ்வாறு) நான் சாட்சி கூறமாட்டேன்!'' என்று நீர் கூறிவிட்டு, ‘‘நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவன்தான்; (அவனுக்கு) நீங்கள் இணைவைப்பதை விட்டு மெய்யாகவே நான் வெறுத்து விலகுகின்றன்'' என்றும் கூறுவீராக.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَعْرِفُوْنَهٗ كَمَا یَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْ ۘ— اَلَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟۠
20. எவரும் தங்கள் குழந்தைகளை(ச் சந்தேகமற) அறிவதைப்போல, வேதம் கொடுக்கப் பட்டவர்கள் (நம் தூதராகிய) இவரை (இவர் இறைவனுடைய தூதர்தான் என்று) நன்கறிவார்கள். (எனினும், அவர்களில்) எவர்கள் (இதை மறைத்து) தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டனரோ அவர்கள்தான் (நம் தூதராகிய இவரை இறைவனுடைய தூதரென்று) நம்பமாட்டார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ— اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟
21. அல்லாஹ்வைப் பற்றிக் கற்பனையாகப் பொய் கூறியவனை விடவோ, அவனுடைய வசனங்களைப் பொய்யாக்கியவனை விடவோ பெரும் அநியாயக்காரன் யார்? நிச்சயமாக (இந்த) அநியாயக்காரர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَیَوْمَ نَحْشُرُهُمْ جَمِیْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِیْنَ اَشْرَكُوْۤا اَیْنَ شُرَكَآؤُكُمُ الَّذِیْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟
22. நாம் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் (இவர்களில்) இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி, ‘‘(அல்லாஹ்விற்கு) இணையானவை என நீங்கள் எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவை எங்கே?'' என்று நாம் கேட்போம்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ثُمَّ لَمْ تَكُنْ فِتْنَتُهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا وَاللّٰهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِیْنَ ۟
23. (அது சமயம்) அவர்கள், ‘‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான். நாங்கள் (அவனுக்கு எதையும்) இணைவைக்க வில்லையே!'' என்று (பொய்) கூறுவதைத் தவிர அவர்களது குழப்பம் வேறொன்றும் இருக்காது.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اُنْظُرْ كَیْفَ كَذَبُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
24. தங்களைப் பற்றியே அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை (நபியே!) கவனிப்பீராக. (அல்லாஹ்விற்கு இணையானவை என்று) அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்தவை அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُ اِلَیْكَ ۚ— وَجَعَلْنَا عَلٰی قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ یَّفْقَهُوْهُ وَفِیْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ— وَاِنْ یَّرَوْا كُلَّ اٰیَةٍ لَّا یُؤْمِنُوْا بِهَا ؕ— حَتّٰۤی اِذَا جَآءُوْكَ یُجَادِلُوْنَكَ یَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
25. (நபியே! உமக்கு கட்டுப்படுகிறவர்களைப் போல பாவனை செய்து நீர் கூறுவதைக் கேட்க) உமக்கு செவி சாய்ப்பவர்களும் அவர்களில் உண்டு. எனினும், அவர்கள் (தம் தீயச் செயல்களின் காரணமாக) அதை விளங்கிக் கொள்ளாதிருக்கும்படி அவர்களுடைய உள்ளங்களில் திரையையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் நாம் ஏற்படுத்திவிட்டோம். ஆகவே, (இவர்கள் சத்தியத்திற்குரிய) அத்தாட்சிகள் அனைத்தையும் (தெளிவாகக்) கண்டபோதிலும் அவற்றை அவர்கள் (ஒரு சிறிதும்) நம்பவே மாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மிடம் வந்த போதிலும், உம்முடன் தர்க்கித்து, ‘‘இவை பழங்காலத்தில் உள்ளவர்களின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை'' என்றே இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَهُمْ یَنْهَوْنَ عَنْهُ وَیَنْـَٔوْنَ عَنْهُ ۚ— وَاِنْ یُّهْلِكُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟
26. அவர்கள் (மற்றவர்களையும்) இ(தைக்கேட்ப)தில் இருந்து தடுத்துத் தாங்களும் இதைவிட்டு வெருண்டோடுவார்கள். (இதனால்) அவர்கள் தங்களையே நாசமாக்கிக் கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவே மாட்டார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَلَوْ تَرٰۤی اِذْ وُقِفُوْا عَلَی النَّارِ فَقَالُوْا یٰلَیْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِاٰیٰتِ رَبِّنَا وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
27. (நரக) நெருப்பின் முன் அவர்கள் நிறுத்தப்படும் பொழுது, (நபியே!) நீர் (அவர்களைப்) பார்த்தால், ‘‘நாங்கள் (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப்பட வேண்டுமே! (அவ்வாறாயின்) எங்கள் இறைவனின் வசனங்களை நாங்கள் பொய்யாக்காமல், நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்'' என்று அவர்கள் புலம்புவார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
 
പരിഭാഷ അദ്ധ്യായം: അൻആം
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് വിവർത്തനം - അബ്ദുൽ ഹമീദ് ബാഖവി - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

വിവർത്തനം : അബ്ദുൽ ഹമീദ് ബാഖവി

അടക്കുക