Check out the new design

ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය * - පරිවර්තන පටුන


අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් අන්ආම්   වාක්‍යය:
ذٰلِكَ اَنْ لَّمْ یَكُنْ رَّبُّكَ مُهْلِكَ الْقُرٰی بِظُلْمٍ وَّاَهْلُهَا غٰفِلُوْنَ ۟
6.131. நாம் மனித, ஜின் இனத்திற்கு தூதர்களை அனுப்பியதன் காரணம், தூதர் அனுப்பப்படாமல் அல்லது அழைப்புக் கிடைக்காமல் யாரும் தாம் செய்தவற்றுக்குத் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்குத்தான். ஏனெனில், எந்த சமூகத்தையும் அவர்களுக்கு தூதர்களை அனுப்பாமல் நாம் தண்டிப்பதில்லை.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْا ؕ— وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا یَعْمَلُوْنَ ۟
6.132. ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப படித்தரங்கள் உண்டு. குறைவான அளவில் தீமை செய்தோரும் அதிகமான அளவில் தீமை செய்தோரும் சமமாக மாட்டார்கள். மேலும் பின்பற்றியவர்களும் பின்பற்றப்பட்டவர்களும் சமமாக மாட்டார்கள். அதே போன்று நன்மை செய்வோரின் நன்மைகளும் சமமாக மாட்டா. அவர்கள் செய்துகொண்டிருப்பவற்றை உம் இறைவன் கவனிக்காமல் இல்லை. மாறாக அவற்றை அவன் அறிந்திருக்கிறான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَرَبُّكَ الْغَنِیُّ ذُو الرَّحْمَةِ ؕ— اِنْ یَّشَاْ یُذْهِبْكُمْ وَیَسْتَخْلِفْ مِنْ بَعْدِكُمْ مَّا یَشَآءُ كَمَاۤ اَنْشَاَكُمْ مِّنْ ذُرِّیَّةِ قَوْمٍ اٰخَرِیْنَ ۟ؕ
6.133. தூதரே! தன் அடியார்களை விட்டும் தேவையற்றவனே உம் இறைவன். அவர்களின் பக்கமோ அவர்களின் வணக்கத்தின் பக்கமோ அவனுக்கு எத்தேவையுமில்லை. அவர்களது நிராகரிப்பு அவனுக்கு எந்த இழப்பையும் ஏற்படுத்தி விடப்போவதில்லை. அவன் தன் அடியார்களைவிட்டும் தேவையற்றவனாக இருந்தும்கூட அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். பாவம் புரியும் அடியார்களே! அவன் உங்களை அழிக்க நாடினால் வேதனையைக் கொண்டு உங்கள் அனைவரையும் பூண்டோடு அழித்துவிட்டு அதன் பின் தன் மீது நம்பிக்கைகொள்ளும், தனக்குக் கட்டுப்படும் மக்களை ஏற்படுத்துவான், உங்களுக்கு முன்னர் வாழ்ந்த வேறொரு சமூகத்தின் வழித்தோன்றலிலிருந்து உங்களைப் படைத்தது போன்று.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اِنَّ مَا تُوْعَدُوْنَ لَاٰتٍ ۙ— وَّمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ ۟
6.134. நிராகரிப்பாளர்களே! மீண்டும் உயிர்த்தெழச் செய்தல், ஒன்று சேர்த்தல், கணக்கு தீர்த்தல், தண்டனையளித்தல் ஆகிய உங்களுக்கு எச்சரிக்கப்படுபவை சந்தேகமின்றி வந்தே தீரும். உங்கள் இறைவனை விட்டும் நீங்கள் எங்கும் ஓடித் தப்ப முடியாது. அவன் உங்கள் நெற்றி முடிகளைப் பிடித்துள்ளான். அவன் உங்களைத் தண்டிக்கக்கூடியவன்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قُلْ یٰقَوْمِ اعْمَلُوْا عَلٰی مَكَانَتِكُمْ اِنِّیْ عَامِلٌ ۚ— فَسَوْفَ تَعْلَمُوْنَ ۙ— مَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِ ؕ— اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟
6.135. தூதரே! நீர் கூறுவீராக: “என் சமூகமே! உங்களின் வழிகேட்டிலும் நிராகரிப்பிலுமே நீங்கள் நிலைத்திருங்கள். தெளிவாக எடுத்துரைப்பதன் மூலம் உங்களுக்கு எதிரான ஆதாரங்களைக் நான் நிலைநாட்டிவிட்டேன். இனி உங்களின் நிராகரிப்பையும் வழிகேட்டையும் நான் பொருட்படுத்தப் போவதில்லை. மாறாக சத்தியத்தில் நான் நிலைத்திருப்பேன். இவ்வுலகில் யாருக்கு வெற்றி கிடைக்கும்? இப்பூமியை ஆட்சி செய்வது யார்? யார் மறுமையின் வீட்டைப் பெறுவார்கள்? என்பதை நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள். இணைவைப்பாளர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றிபெற மாட்டார்கள். இவ்வுலகில் அனுபவித்தாலும் அவர்களது இறுதி முடிவு இழப்பைச் சந்திப்பதிப்பதே.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَجَعَلُوْا لِلّٰهِ مِمَّا ذَرَاَ مِنَ الْحَرْثِ وَالْاَنْعَامِ نَصِیْبًا فَقَالُوْا هٰذَا لِلّٰهِ بِزَعْمِهِمْ وَهٰذَا لِشُرَكَآىِٕنَا ۚ— فَمَا كَانَ لِشُرَكَآىِٕهِمْ فَلَا یَصِلُ اِلَی اللّٰهِ ۚ— وَمَا كَانَ لِلّٰهِ فَهُوَ یَصِلُ اِلٰی شُرَكَآىِٕهِمْ ؕ— سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟
6.136. அல்லாஹ் படைத்த பயிர்களிலும் கால்நடைகளிலும் அல்லாஹ்வுக்கு ஒரு பங்கை ஒதுக்கி, அவை அல்லாஹ்வுக்கு உரியவை என்றும் இன்னுமொரு பங்கை தங்கள் சிலைகளுக்கும் நினைவுச் சின்னங்களுக்கும் உரியவை என்றும் இணைவைப்பாளர்கள் புது வழிமுறையை உருவாக்கினார்கள். தாம் இணைவைப்போருக்கு ஒதுக்கியது அல்லாஹ் செலவளிக்குமாறு கூறிய ஏழைகளுக்கோ வறியவர்களுக்கோ சென்றடையாதாம். அல்லாஹ்வுக்காக ஒதுக்கியது தங்களின் சிலைகளைச் சென்றடையுமாம். அவைகளின் நலன்களுக்கு செலவளிக்கப்படுகின்றன. அவர்களின் தீர்ப்பும் பங்கீடும் எத்துணை மோசமானது!
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَكَذٰلِكَ زَیَّنَ لِكَثِیْرٍ مِّنَ الْمُشْرِكِیْنَ قَتْلَ اَوْلَادِهِمْ شُرَكَآؤُهُمْ لِیُرْدُوْهُمْ وَلِیَلْبِسُوْا عَلَیْهِمْ دِیْنَهُمْ ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ مَا فَعَلُوْهُ فَذَرْهُمْ وَمَا یَفْتَرُوْنَ ۟
6.137. அநியாயமான இந்த பங்கீட்டை ஷைத்தான் இணைவைப்பாளர்களுக்கு அலங்கரித்துக் காட்டியது போன்று வறுமைக்குப் பயந்து தங்களின் குழந்தைகளைக் கொலை செய்வதையும் அவர்கள் இணையாகக் கருதிய ஷைத்தான் அவர்களில் அதிகமானோருக்கு அலங்கரித்துக் காட்டினான். அல்லாஹ் தடைசெய்த ஓர் உயிரை அநியாயமாகக் கொலை செய்ய வைத்து அவர்களை அழிவுக்குள்ளாக்கவும் எது அனுமதிக்கப்பட்டது? எது தடைசெய்யப்பட்டது? என்பதை அறியாதவாறு அவர்களின் மார்க்கத்தைக் குழப்பத்திற்குள்ளாக்கவுமே இவ்வாறு ஷைதான்கள் செய்தனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆயினும் அவன் ஒரு பெரும் நோக்கத்திற்காக இவ்வாறு நாடிவிட்டான். தூதரே! இந்த இணைவைப்பாளர்களையும் அல்லாஹ்வின் மீது அவர்கள் இட்டுக் கட்டியதையும் விட்டுவிடுவீராக. இதனால் உமக்கு எந்த தீங்கும் ஏற்படாது. அவர்களின் விவகாரத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுவீராக.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• تفاوت مراتب الخلق في أعمال المعاصي والطاعات يوجب تفاوت مراتبهم في درجات العقاب والثواب.
1. அடியார்கள் செய்யும் நன்மை, பாவங்களின் ஏற்றத்தாழ்வுக்கேற்ப அவர்களுக்குக் கிடைக்கும் நற்கூலி, தண்டனைகளின் படித்தரங்களிலும் ஏற்றத்தாழ்வு காணப்படும்.

• اتباع الشيطان موجب لانحراف الفطرة حتى تصل لاستحسان القبيح مثل قتل الأولاد ومساواة أصنامهم بالله سبحانه وتعالى.
3. ஷைத்தானைப் பின்பற்றுவது அவலட்சனமானவற்றையும் அழகாகக் கருதும் அளவிற்கு மனித இயல்பை மாற்ற வல்லதாகும். அவற்றுக்கான உதாரணமே பிள்ளைகளைக் கொல்வதும் தமது சிலைகளை அல்லாஹ்வுடன் சமமாக்குவதும்.

 
අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් අන්ආම්
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය - පරිවර්තන පටුන

අල්කුර්ආන් අධ්‍යයන සඳහා වූ තෆ්සීර් මධ්‍යස්ථානය විසින් නිකුත් කරන ලදී.

වසන්න