Check out the new design

ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය * - පරිවර්තන පටුන


අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් අන්ආම්   වාක්‍යය:
اَلَّذِیْنَ اٰمَنُوْا وَلَمْ یَلْبِسُوْۤا اِیْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰٓىِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ ۟۠
6.82. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றி தங்களின் நம்பிக்கையுடன் இணைவைப்பைக் கலக்காதவர்களுக்கு மட்டுமே அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். அவர்கள் நேர்வழி பெற்றவர்கள் அவர்களுக்கு அல்லாஹ் நேரான பாதையின்பால் வழிகாட்டியுள்ளான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَتِلْكَ حُجَّتُنَاۤ اٰتَیْنٰهَاۤ اِبْرٰهِیْمَ عَلٰی قَوْمِهٖ ؕ— نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ ؕ— اِنَّ رَبَّكَ حَكِیْمٌ عَلِیْمٌ ۟
6.83. ”இரு அணிகளில் எது அச்சமற்றிருப்பதற்குத் தகுதியானது” என்ற வாதத்தின் மூலம் இப்ராஹீம் தனது சமூகத்தை மிகைத்தது மட்டுமின்றி அவர்களது வாதம் தோற்றும்விட்டது. அவரது சமூகத்துடன் விவாதிப்பதற்காக நாமே இவ்வாதத்தை அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். நம் அடியார்களில் நாம் நாடியவர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் உயர்ந்த அந்தஸ்தை வழங்குகிறோம். தூதரே! உம் இறைவன் தன் படைப்பிலும் நிர்வகிப்பதிலும் ஞானம்மிக்கவன். அவன் தன் அடியார்களைக் குறித்து நன்கறிந்தவன்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ— كُلًّا هَدَیْنَا ۚ— وَنُوْحًا هَدَیْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّیَّتِهٖ دَاوٗدَ وَسُلَیْمٰنَ وَاَیُّوْبَ وَیُوْسُفَ وَمُوْسٰی وَهٰرُوْنَ ؕ— وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟ۙ
6.84. நாம் இப்ராஹீமுக்கு அவருடைய மகன் இஸ்ஹாக்கையும் பேரன் யஃகூபையும் வழங்கினோம். அவர்களில் ஒவ்வொருவருக்கும் நேரான வழியைக் காட்டினோம். அவர்களுக்கு முன்னர் நூஹிற்கு வழிகாட்டினோம். நூஹின் வழித்தோன்றல்களான தாவூத், சுலைமான், அய்யூப், யூசுஃப், மூஸா, அவரது சகோதரன் ஹாரூன் ஆகியோருக்கும் சத்தியப்பாதைக்கு வழிகாட்டினோம். நாம் தூதர்களுக்கு வழங்கிய இந்த கூலியைப் போலவே நன்மை செய்யும் ஏனையோருக்கும் வழங்குவோம்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَزَكَرِیَّا وَیَحْیٰی وَعِیْسٰی وَاِلْیَاسَ ؕ— كُلٌّ مِّنَ الصّٰلِحِیْنَ ۟ۙ
6.85. இவ்வாறே ஸகரிய்யா, யஹ்யா, மர்யமின் மகன் ஈஸா, இஸ்யாஸ் ஆகியோருக்கும் வழிகாட்டினோம். நல்லவர்களான இந்த அனைத்து நபிமார்களையும் அல்லாஹ் தூதர்களாகத் தேர்ந்தெடுத்தான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَاِسْمٰعِیْلَ وَالْیَسَعَ وَیُوْنُسَ وَلُوْطًا ؕ— وَكُلًّا فَضَّلْنَا عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ
6.86. இவ்வாறே இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் வழிகாட்டினோம். இந்த தூதர்கள் அனைவரையும் - இவர்களில் முதன்மையானவராக முஹம்மதை - நாம் உலகிலுள்ள அனைவரையும் விட சிறப்பித்துள்ளோம்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَمِنْ اٰبَآىِٕهِمْ وَذُرِّیّٰتِهِمْ وَاِخْوَانِهِمْ ۚ— وَاجْتَبَیْنٰهُمْ وَهَدَیْنٰهُمْ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
6.87. அவர்களின் தந்தையர், பிள்ளைகள், சகோதரர்கள் ஆகியோரில் நாம் நாடிய சிலருக்கு வழிகாட்டினோம். நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம். ஓரிறைக்கொள்கை மற்றும் இறைக்கட்டுப்பாடு என்னும் நேரான பாதையின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டினோம்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
ذٰلِكَ هُدَی اللّٰهِ یَهْدِیْ بِهٖ مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ— وَلَوْ اَشْرَكُوْا لَحَبِطَ عَنْهُمْ مَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
6.88. அவர்களுக்குக் கிடைத்த இந்த பாக்கியம் அல்லாஹ் வழங்கியதாகும். அவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு அதனை வழங்குகிறான். அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கினால் அவர்களின் செயல்கள் அனைத்தும் அழிந்து விடும். ஏனெனில் ஷிர்க் நற்செயல்களை அழித்து விடும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ۚ— فَاِنْ یَّكْفُرْ بِهَا هٰۤؤُلَآءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّیْسُوْا بِهَا بِكٰفِرِیْنَ ۟
6.89. மேற்கூறப்பட்ட இந்த தூதர்களுக்குத்தான் நாம் வேதங்களையும் ஞானத்தையும் தூதுத்துவத்தையும் வழங்கினோம். நாம் அவர்களுக்கு வழங்கிய இம்மூன்று விஷயங்களையும் உமது சமூகம் நிராகரித்தால் அவற்றை நிராகரிக்காத வேறு மக்களை நாம் அவற்றிற்காக தயார்படுத்தி வைத்துள்ளோம். அவர்கள் அவற்றை நம்பிக்கைகொண்டவர்களாக, உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்பவர்கள். அவர்கள்தாம் முஹாஜிர்களும் அன்சாரிகளும் மறுமை நாள் வரை அவர்களை சிறந்த முறையில் பின்பற்றியவர்களுமாவர்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ هَدَی اللّٰهُ فَبِهُدٰىهُمُ اقْتَدِهْ ؕ— قُلْ لَّاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ اَجْرًا ؕ— اِنْ هُوَ اِلَّا ذِكْرٰی لِلْعٰلَمِیْنَ ۟۠
6.90. இந்த தூதர்களும் அவர்களுடன் இணைத்துக் கூறப்பட்ட அவர்களது மூதாதையர்கள், சந்ததிகள், சகோதரர்கள் ஆகியோர்தான் உண்மையில் நேர்வழி பெற்றவர்கள். எனவே அவர்களை நீர் பின்பற்றுவீராக. முன்மாதிரயாக எடுத்துக்கொள்வீராக. தூதரே! உம் சமூகத்தினரிடம் கூறுவீராக: இந்த குர்ஆனை எடுத்துரைப்பதற்கு நான் உங்களிடம் எந்த கூலியையும் வேண்டவில்லை. இது உலகிலுள்ள மனிதர்கள், ஜின்கள் அனைவருக்கும் ஓர் அறிவுரையேயாகும். இதன் மூலம் நேரான வழியை அவர்கள் அடைந்துகொள்ளலாம்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• من فضائل التوحيد أنه يضمن الأمن للعبد، خاصة في الآخرة حين يفزع الناس.
1. ஓரிறைக் கொள்கையின் சிறப்புக்களில் ஒன்றுதான், அடியானுக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாகும். குறிப்பாக மனிதர்கள் பதற்றமடைந்திருக்கும் மறுமை நாளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றது.

• تُقَرِّر الآيات أن جميع من سبق من الأنبياء إنما بَلَّغوا دعوتهم بتوفيق الله تعالى لا بقدرتهم.
2. முந்தைய தூதர்கள் அனைவரும் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டே தங்களின் தூதை எடுத்துரைத்துனர் தமது ஆற்றலைக் கொண்டல்ல, என்பதை மேற்கூறிய வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

• الأنبياء يشتركون جميعًا في الدعوة إلى توحيد الله تعالى مع اختلاف بينهم في تفاصيل التشريع.
3. தூதர்களுக்கு மத்தியில் சட்டதிட்ட விபரங்களில் வேறுபாடு இருந்தாலும் ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைப்பதில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளார்கள்.

• الاقتداء بالأنبياء سنة محمودة، وخاصة في أصول التوحيد.
4. குறிப்பாக ஓரிறைக் கொள்கையின் அடிப்படைகளில், இறைத்தூதர்களைப் பின்பற்றுவது விரும்பத்தக்க வழிமுறையாகும்.

 
අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් අන්ආම්
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය - පරිවර්තන පටුන

අල්කුර්ආන් අධ්‍යයන සඳහා වූ තෆ්සීර් මධ්‍යස්ථානය විසින් නිකුත් කරන ලදී.

වසන්න