แปล​ความหมาย​อัลกุรอาน​ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - สารบัญ​คำแปล


แปลความหมาย​ อายะฮ์: (8) สูเราะฮ์: Ash-Shūra
وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَهُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ یُّدْخِلُ مَنْ یَّشَآءُ فِیْ رَحْمَتِهٖ ؕ— وَالظّٰلِمُوْنَ مَا لَهُمْ مِّنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
42.8. அல்லாஹ் அவர்களை இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஒரே சமூகமாக ஆக்க நாடியிருந்தால் அவ்வாறு செய்திருப்பான். அவர்கள் அனைவரையும் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்திருப்பான். ஆயினும் அவன் அறிந்த நோக்கத்தின்படி தான் நாடியவர்களை இஸ்லாத்தில் பிரவேசிக்கச் செய்து அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்கிறான். நிராகரித்து, பாவங்கள் புரிந்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களுக்கு அவர்களைப் பொறுப்பேற்கும் பொறுப்பாளர்களோஅல்லாஹ்வின் வேதனையிலிருந்து பாதுகாக்கக்கூடிய உதவியாளர்களோ யாரும் இல்லை.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
ประโยชน์​ที่​ได้รับ​:
• عظمة الله ظاهرة في كل شيء.
1. அல்லாஹ்வின் மகிமை ஒவ்வொரு பொருளிலும் வெளிப்படுகின்றது.

• دعاء الملائكة لأهل الإيمان بالخير.
2. நம்பிக்கையாளர்களின் நலவுக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

• القرآن والسُنَّة مرجعان للمؤمنين في شؤونهم كلها، وبخاصة عند الاختلاف.
3.நம்பிக்கையாளர்களின் அனைத்து விவகாரங்களிலும் குறிப்பாக கருத்து வேற்றுமையின் போது குர்ஆன், சுன்னாவே அவர்களின் அடிப்படைகளாகும்.

• الاقتصار على إنذار أهل مكة ومن حولها؛ لأنهم مقصودون بالرد عليهم لإنكارهم رسالته صلى الله عليه وسلم وهو رسول للناس كافة كما قال تعالى: ﴿وَمَآ أَرسَلنُّكَ إلَّا كافةً لِّلنَّاس...﴾، (سبأ: 28).
4. நபியவர்கள் முழு முனிதர்களுக்கும் தூதராக இருந்தாலும் மக்காவாசிகளுக்கும் அதனைச் சூழ உள்ளோருக்கும் எச்சரிக்கை செய்வதற்கு என்று மாத்திரம் கூறப்பட்டதற்குக் காரணம், அவர்கள் அவரின் தூதை மறுத்ததால் அவர்களுக்குப் பதில் கூறுவதன் மூலம் அவர்களே நாடப்படுகிறார்கள் என்பதனாலாகும். அல்லாஹ் கூறுவது போன்று: (இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை) ஸபஃ அத்தியாயம்

 
แปลความหมาย​ อายะฮ์: (8) สูเราะฮ์: Ash-Shūra
สารบัญสูเราะฮ์ หมายเลข​หน้า​
 
แปล​ความหมาย​อัลกุรอาน​ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - สารบัญ​คำแปล

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

ปิด