Check out the new design

แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) * - สารบัญ​คำแปล


แปลความหมาย​ สูเราะฮ์: Ash-Shūra   อายะฮ์:

அஷ்ஷூரா

วัตถุประสงค์ของสูเราะฮ์:
بيان كمال تشريع الله، ووجوب متابعته، والتحذير من مخالفته.
அல்லாஹ்வின் சட்டதிட்டங்களின் பரிபூரணத்தன்மை, அதனைப் பின்பற்றுவது அவசியம் என்பவற்றைத் தெளிவுபடுத்தலும் அதற்கு மாற்றம் செய்வதை எச்சரித்தலும்

حٰمٓ ۟ۚ
42.1,2. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
عٓسٓقٓ ۟
42.1,2. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
كَذٰلِكَ یُوْحِیْۤ اِلَیْكَ وَاِلَی الَّذِیْنَ مِنْ قَبْلِكَ ۙ— اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
42.3. இந்த வஹியைப் போன்றதை முஹம்மதே உமக்கும் உமக்கு முன்னர் வந்த அல்லாஹ்வின் நபிமார்களுக்கும் அறிவித்தவன் அல்லாஹ்தான். அவன் தன் எதிரிகளைத் தண்டிப்பதில் மிகைத்தவன்; தனது திட்டமிடலிலும் படைப்பிலும் ஞானம் மிக்கவன்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَهُوَ الْعَلِیُّ الْعَظِیْمُ ۟
42.4. வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றைப் படைத்தல், ஆட்சி செய்தல், திட்டமிடல் என்பன அல்லாஹ்வுக்கே உரியன. அவன் உள்ளமையிலும் அந்தஸ்திலும் ஆதிக்கத்திலும் மிக உயர்ந்தவன்; தனது உள்ளமையில் மகத்தானவன்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
تَكَادُ السَّمٰوٰتُ یَتَفَطَّرْنَ مِنْ فَوْقِهِنَّ وَالْمَلٰٓىِٕكَةُ یُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَیَسْتَغْفِرُوْنَ لِمَنْ فِی الْاَرْضِ ؕ— اَلَاۤ اِنَّ اللّٰهَ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
42.5. அவனுடைய வல்லமையில் வெளிப்பாடு: பிரமாண்டமான, உயரமான வானங்கள் பிளந்து பூமியின் மீது விழப் பார்க்கின்றன. வானவர்கள் தங்கள் இறைவனைக் கண்ணியப்படுத்தும்பொருட்டு, அவனுக்கு அடிபணியும் பொருட்டு அவனைப் போற்றிப் புகழ்கிறார்கள். பூமியில் உள்ளவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறார்கள். அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَالَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ اللّٰهُ حَفِیْظٌ عَلَیْهِمْ ۖؗ— وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِوَكِیْلٍ ۟
42.6. அல்லாஹ்வைத் தவிர சிலைகளை பாதுகாவலர்களாகவும் வணங்கும் தெய்வங்களாகவும் ஆக்கிக் கொண்டவர்களை அவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவர்களின் செயல்களை பதிவு செய்கிறான். அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான். -தூதரே!- நீர் அவர்களின் செயல்களைப் பாதுகாக்கும் பொறுப்பாளர் அல்ல. அவர்களின் செயல்களைக் குறித்து நீர் ஒருபோதும் கேட்கப்படமாட்டீர். நிச்சயமாக நீர் எடுத்துரைப்பவர் மட்டுமே.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَكَذٰلِكَ اَوْحَیْنَاۤ اِلَیْكَ قُرْاٰنًا عَرَبِیًّا لِّتُنْذِرَ اُمَّ الْقُرٰی وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ یَوْمَ الْجَمْعِ لَا رَیْبَ فِیْهِ ؕ— فَرِیْقٌ فِی الْجَنَّةِ وَفَرِیْقٌ فِی السَّعِیْرِ ۟
42.7. -தூதரே!- உமக்கு முன் வந்த நபிமார்களுக்கு நாம் வஹி அறிவித்தவாறே உமக்கும் அரபி மொழியில் அமைந்துள்ள இந்த குர்ஆனை வஹியாக அறிவித்துள்ளோம். அது மக்காவாசிகளையும் அதனைச் சுற்றி இருக்கின்ற அரபுக்களையும் பின்னர் மனிதர்கள் அனைவரையும் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காகவும் முன்னோர்களும் பின்னோர்களும் விசாரணைக்காக ஒரே மைதானத்தில் ஒன்றுதிரட்டப்படும் மறுமை நாளைக் குறித்து நீர் மக்களுக்கு அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவும்தான். அந்த நாள் நிகழ்வதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. அந்நாளில் மனிதர்கள் இருபிரிவினராக பிரிந்துவிடுவார்கள். ஒரு பிரிவினர் சுவனத்தில் இருப்பார்கள். அவர்கள் நம்பிக்கையாளர்களாவர். மற்றொரு பிரிவினர் நரகத்தில் இருப்பார்கள் அவர்கள் நிராகரிப்பாளர்களாவர்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَهُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ یُّدْخِلُ مَنْ یَّشَآءُ فِیْ رَحْمَتِهٖ ؕ— وَالظّٰلِمُوْنَ مَا لَهُمْ مِّنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
42.8. அல்லாஹ் அவர்களை இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஒரே சமூகமாக ஆக்க நாடியிருந்தால் அவ்வாறு செய்திருப்பான். அவர்கள் அனைவரையும் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்திருப்பான். ஆயினும் அவன் அறிந்த நோக்கத்தின்படி தான் நாடியவர்களை இஸ்லாத்தில் பிரவேசிக்கச் செய்து அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்கிறான். நிராகரித்து, பாவங்கள் புரிந்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களுக்கு அவர்களைப் பொறுப்பேற்கும் பொறுப்பாளர்களோஅல்லாஹ்வின் வேதனையிலிருந்து பாதுகாக்கக்கூடிய உதவியாளர்களோ யாரும் இல்லை.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ ۚ— فَاللّٰهُ هُوَ الْوَلِیُّ وَهُوَ یُحْیِ الْمَوْتٰی ؗ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
42.9. மாறாக இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைவிடுத்து மற்றவர்களை தாம் நேசிக்கும் நேசர்களாக எடுத்துக்கொண்டார்கள். அல்லாஹ்வே உண்மையான நேசனாவான். அவனைத் தவிர மற்றவர்கள் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ மாட்டார்கள். அவனே விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் இறந்தவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான். அவனால் இயலாதது எதுவும் இல்லை.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَمَا اخْتَلَفْتُمْ فِیْهِ مِنْ شَیْءٍ فَحُكْمُهٗۤ اِلَی اللّٰهِ ؕ— ذٰلِكُمُ اللّٰهُ رَبِّیْ عَلَیْهِ تَوَكَّلْتُ ۖۗ— وَاِلَیْهِ اُنِیْبُ ۟
42.10. -மனிதர்களே!- நீங்கள் கருத்துவேறுபாடு கொண்ட மார்க்கத்தின் அடிப்படையான விஷயங்களின் அல்லது கிளை விஷயங்களின் தீர்ப்பு அல்லாஹ்விடமே உள்ளது. எனவே அதனை அவனது வேதத்திலோ அல்லது அவனது தூதரின் வழிமுறையிலோ தேடவேண்டும். இந்த பண்புகளை உடையவன்தான் என் இறைவன். நான் என்னுடைய அனைத்து விவகாரங்களிலும் அவன்மீதே நம்பிக்கை வைத்தேன். பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே நான் திரும்புகின்றேன்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
ประโยชน์​ที่​ได้รับ​:
• عظمة الله ظاهرة في كل شيء.
1. அல்லாஹ்வின் மகிமை ஒவ்வொரு பொருளிலும் வெளிப்படுகின்றது.

• دعاء الملائكة لأهل الإيمان بالخير.
2. நம்பிக்கையாளர்களின் நலவுக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

• القرآن والسُنَّة مرجعان للمؤمنين في شؤونهم كلها، وبخاصة عند الاختلاف.
3.நம்பிக்கையாளர்களின் அனைத்து விவகாரங்களிலும் குறிப்பாக கருத்து வேற்றுமையின் போது குர்ஆன், சுன்னாவே அவர்களின் அடிப்படைகளாகும்.

• الاقتصار على إنذار أهل مكة ومن حولها؛ لأنهم مقصودون بالرد عليهم لإنكارهم رسالته صلى الله عليه وسلم وهو رسول للناس كافة كما قال تعالى: ﴿وَمَآ أَرسَلنُّكَ إلَّا كافةً لِّلنَّاس...﴾، (سبأ: 28).
4. நபியவர்கள் முழு முனிதர்களுக்கும் தூதராக இருந்தாலும் மக்காவாசிகளுக்கும் அதனைச் சூழ உள்ளோருக்கும் எச்சரிக்கை செய்வதற்கு என்று மாத்திரம் கூறப்பட்டதற்குக் காரணம், அவர்கள் அவரின் தூதை மறுத்ததால் அவர்களுக்குப் பதில் கூறுவதன் மூலம் அவர்களே நாடப்படுகிறார்கள் என்பதனாலாகும். அல்லாஹ் கூறுவது போன்று: (இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை) ஸபஃ அத்தியாயம்

 
แปลความหมาย​ สูเราะฮ์: Ash-Shūra
สารบัญสูเราะฮ์ หมายเลข​หน้า​
 
แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) - สารบัญ​คำแปล

โดย ศูนย์ตัฟซีรเพื่อการศึกษาอัลกุรอาน

ปิด