Check out the new design

แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) * - สารบัญ​คำแปล


แปลความหมาย​ สูเราะฮ์: Ash-Shūra   อายะฮ์:
وَكَذٰلِكَ اَوْحَیْنَاۤ اِلَیْكَ رُوْحًا مِّنْ اَمْرِنَا ؕ— مَا كُنْتَ تَدْرِیْ مَا الْكِتٰبُ وَلَا الْاِیْمَانُ وَلٰكِنْ جَعَلْنٰهُ نُوْرًا نَّهْدِیْ بِهٖ مَنْ نَّشَآءُ مِنْ عِبَادِنَا ؕ— وَاِنَّكَ لَتَهْدِیْۤ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟ۙ
42.52. -தூதரே!- உமக்கு முன்னர் தூதர்களுக்கு வஹி அறிவித்தவாறே உமக்கும் குர்ஆனை நம்மிடமிருந்து வஹியாக அறிவித்துள்ளோம். தூதர்கள் மீது இறக்கப்பட்ட விண்ணுலக வேதங்கள் யாவை? ஈமான் என்றால் என்ன? என்பதை முன்னர் நீர் அறியாதவராக இருந்தீர். ஆயினும் நாம் குர்ஆனை ஒளியாக இறக்கியுள்ளோம். அதனைக் கொண்டு நம் அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர்வழிகாட்டுகின்றோம். நிச்சயமாக நீர் மக்களுக்கு இஸ்லாம் என்னும் நேரான பாதையின்பால் வழிகாட்டுகின்றீர்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
صِرَاطِ اللّٰهِ الَّذِیْ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— اَلَاۤ اِلَی اللّٰهِ تَصِیْرُ الْاُمُوْرُ ۟۠
42.53. அது அல்லாஹ்வின் பாதையாகும். வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் படைப்பிலும் அதிகாரத்திலும் திட்டமிடுவதிலும் அவனுக்கே உரியன. விவகாரங்கள் அனைத்தும் அவற்றின் நிர்ணயம், திட்டமிடல் ஆகியவற்றில் அல்லாஹ்வின் பக்கம் மட்டுமே உறுதியாக திரும்புகின்றன.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
ประโยชน์​ที่​ได้รับ​:
• سمي الوحي روحًا لأهمية الوحي في هداية الناس، فهو بمنزلة الروح للجسد.
1. மக்களுக்கு நேர்வழிகாட்டுவதில் வஹி முக்கியம் என்பதனால்தான் அதனை ஆன்மா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் அதன் அந்தஸ்து உடலில் உள்ள ஆன்மாவை போன்றதாகும்.

• الهداية المسندة إلى الرسول صلى الله عليه وسلم هي هداية الإرشاد لا هداية التوفيق.
2. நபியவர்களின்பால் இணைத்துக் கூறப்பட்ட ‘ஹிதாயத்’ என்ற வார்த்தை நேரான வழியை எடுத்துரைப்பதையே குறிக்கும். நேர்வழியின்பால் பாக்கியம் அளிப்பது அல்ல.

• ما عند المشركين من توحيد الربوبية لا ينفعهم يوم القيامة.
3. இணைவைப்பாளர்களிடம் காணப்படும் அல்லாஹ்வே படைத்துப் பராமரிப்பவன் என்ற ஏகத்துவம் மறுமையில் அவர்களுக்குப் பலனளிக்கமாட்டாது.

 
แปลความหมาย​ สูเราะฮ์: Ash-Shūra
สารบัญสูเราะฮ์ หมายเลข​หน้า​
 
แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) - สารบัญ​คำแปล

โดย ศูนย์ตัฟซีรเพื่อการศึกษาอัลกุรอาน

ปิด