Check out the new design

แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) * - สารบัญ​คำแปล


แปลความหมาย​ สูเราะฮ์: Ash-Shūra   อายะฮ์:
ذٰلِكَ الَّذِیْ یُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ— قُلْ لَّاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِی الْقُرْبٰی ؕ— وَمَنْ یَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِیْهَا حُسْنًا ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ ۟
42.23. தன்மீதும் தன் தூதர் மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரியும் அடியார்களுக்கு தன் தூதரின் மூலமாக அல்லாஹ் மகத்தான இந்த நற்செய்தியை அளிக்கின்றான். -தூதரே!- நீர் கூறுவீராக: “நான் எடுத்துரைக்கும் இந்த சத்தியத்திற்கு உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. ஆனால் ஒரேயொரு நன்மையை எதிர்பார்க்கிறேன். அதனால் ஏற்படும் நன்மையும் உங்களையே சாரும். அது, நான் உங்களின் உறவினராக இருப்பதால் நீங்கள் என்னை நேசிக்க வேண்டும் என்பதே அதுவாகும். யார் ஒரு நன்மையைச் சம்பாதிப்பாரோ நாம் அவருக்கு அதனை பன்மடங்காக்கித் தருவோம். ஒரு நலவுக்கு அதைப்போன்ற பத்து மடங்கு நன்மையுண்டு. நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் தன் திருப்தியை நாடி அவர்கள் செய்யும் நற்செயல்களுக்கு நன்றி பாராட்டுபவனாகவும் இருக்கின்றான்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا ۚ— فَاِنْ یَّشَاِ اللّٰهُ یَخْتِمْ عَلٰی قَلْبِكَ ؕ— وَیَمْحُ اللّٰهُ الْبَاطِلَ وَیُحِقُّ الْحَقَّ بِكَلِمٰتِهٖ ؕ— اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
42.24. முஹம்மது இந்த குர்ஆனைப் புனைந்து விட்டு அதனைத் தனது இறைவன் கூறியதாகக் கூறுகின்றார் என்பது இணைவைப்பாளர்களின் எண்ணமாகும். அவர்களுக்கு மறுப்பாக அல்லாஹ் கூறுகிறான்: ஒரு பொய்யைப் புனைய உனது மனம் விரும்பினால் உமது உள்ளத்தின் மீது முத்திரையிட்டு புனையப்பட்ட அசத்தியத்தை அழித்துவிடுவேன். சத்தியத்தை நிலைநிறுத்துவேன். அவ்வாறு எந்த விடயமும் நடைபெறாமை அல்லாஹ்விடமிருந்து தனக்கு வஹி அறிவிக்கப்படுள்ளது என் நபியவர்களின் நம்பகத் தன்மைக்கான சான்றாகும். அவர் . நிச்சயமாக அவன் தன் அடியார்களின் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَهُوَ الَّذِیْ یَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَیَعْفُوْا عَنِ السَّیِّاٰتِ وَیَعْلَمُ مَا تَفْعَلُوْنَ ۟ۙ
42.25. அவனே தன் அடியார்கள் நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவற்றிலிருந்து பாவமன்னிப்புக் கோரினால் அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான். அவர்கள் செய்த பாவங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறான். நீங்கள் செய்யும் அனைத்தையும் அவன் அறிகிறான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَیَسْتَجِیْبُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَیَزِیْدُهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ— وَالْكٰفِرُوْنَ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ۟
42.26. அவன் தன் மீதும் தன் தூதர்கள் மீதும் நம்பிக்கைகொண்டு நன்மைசெய்தோரின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்கிறான். தன் அருளிலிருந்து அவர்கள் கேட்காதவற்றையும் இன்னும் அதிகமாக வழங்குகிறான். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரிப்பவர்களுக்கு மறுமை நாளில் கடுமையான வேதனை காத்திருக்கின்றது.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَلَوْ بَسَطَ اللّٰهُ الرِّزْقَ لِعِبَادِهٖ لَبَغَوْا فِی الْاَرْضِ وَلٰكِنْ یُّنَزِّلُ بِقَدَرٍ مَّا یَشَآءُ ؕ— اِنَّهٗ بِعِبَادِهٖ خَبِیْرٌ بَصِیْرٌ ۟
42.27. அல்லாஹ் தன் அடியார்கள் அனைவருக்கும் தாராளமாக வாழ்வாதாரம் வழங்கியிருந்தால் அவர்கள் பூமியில் அநியாயமாக வரம்புமீறியிருப்பார்கள். ஆயினும் அல்லாஹ் தான் நாடிய ஒரு அளவோடு விசாலமாகவும் நெருக்கடியாகவும் அதனை இறக்கிவைக்கிறான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் நிலைகளை நன்கறிந்தவன். அவற்றைப் பார்க்கக்கூடியவன். அவன் வழங்குவதும் வழங்காமலிருப்பதும் ஒரு நோக்கத்திற்காகவேயாகும்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَهُوَ الَّذِیْ یُنَزِّلُ الْغَیْثَ مِنْ بَعْدِ مَا قَنَطُوْا وَیَنْشُرُ رَحْمَتَهٗ ؕ— وَهُوَ الْوَلِیُّ الْحَمِیْدُ ۟
42.28. அவனே தன் அடியார்கள் மழை இறங்காது என்று நம்பிக்கையிழந்தபிறகு அவர்களின் மீது மழை பொழியச் செய்கிறான். இந்த மழையைப் பரவச் செய்கிறான். பூமியில் தாவரங்கள் முளைக்கின்றன. அவன் தன் அடியார்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கக்கூடியவன். எல்லா நிலையிலும் புகழுக்குரியவன்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَمِنْ اٰیٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَثَّ فِیْهِمَا مِنْ دَآبَّةٍ ؕ— وَهُوَ عَلٰی جَمْعِهِمْ اِذَا یَشَآءُ قَدِیْرٌ ۟۠
42.29. அவன் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகளில் உள்ளவைதான், வானங்கள் மற்றும் பூமியைப் படைத்து அவையிரண்டிலும் அவன் பரவச் செய்துள்ள வியப்பூட்டும் படைப்புகளாகும். அவன் தான் நாடிய சமயத்தில் அவர்களை ஒன்றுதிரட்டுவதற்கும் கூலி வழங்குவதற்கும் ஆற்றலுடையவன். அவர்களை முதல் தடவை படைப்பது எவ்வாறு அவனால் முடியுமோ அது போன்றே இதுவும் முடியாததல்ல.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَمَاۤ اَصَابَكُمْ مِّنْ مُّصِیْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَیْدِیْكُمْ وَیَعْفُوْا عَنْ كَثِیْرٍ ۟ؕ
42.30. -மனிதர்களே!- உங்கள் உயிர்களிலோ, செல்வங்களிலோ உங்களுக்கு ஏற்படும் எந்த துன்பமானாலும் அது நீங்கள் சம்பாதித்த பாவங்களின் விளைவேயாகும். அவன் உங்களின் அநேகமான பாவங்களை கண்டும்காணாமல் விட்டுவிடுகிறான். அவற்றிற்காக உங்களைத் தண்டிப்பதில்லை.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ فِی الْاَرْضِ ۖۚ— وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
42.31. உங்களின் இறைவன் உங்களைத் தண்டிக்க நாடினால் நீங்கள் அவனிடமிருந்து விரண்டோடி தப்பிச் செல்ல சக்திபெற முடியாது. உங்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கும் பொறுப்பார்களோ அல்லாஹ் தண்டிக்க நாடினால் அதிலிருந்து உங்களைக் காப்பாற்றும் உதவியாளர்களோ அவனை விடுத்து யாரும் உங்களுக்கு இருக்க மாட்டார்கள்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
ประโยชน์​ที่​ได้รับ​:
• الداعي إلى الله لا يبتغي الأجر عند الناس.
1. அல்லாஹ்வின்பால் அழைக்கும் அழைப்பாளன் மக்களிடம் கூலியை எதிர்பார்க்க மாட்டான்.

• التوسيع في الرزق والتضييق فيه خاضع لحكمة إلهية قد تخفى على كثير من الناس.
2. வாழ்வாதாரம் தாராளமாக வழங்கப்படுவதும் அதில் நெருக்கடி ஏற்படுத்தப்படுவதும் இறைநோக்கத்தின்படியே ஆகும். மக்களில் அதிகமானோர் இதனை அறிந்துகொள்வதில்லை.

• الذنوب والمعاصي من أسباب المصائب.
3. பாவங்கள் துன்பங்களுக்குக் காரணமாக இருக்கின்றன.

 
แปลความหมาย​ สูเราะฮ์: Ash-Shūra
สารบัญสูเราะฮ์ หมายเลข​หน้า​
 
แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) - สารบัญ​คำแปล

โดย ศูนย์ตัฟซีรเพื่อการศึกษาอัลกุรอาน

ปิด