Check out the new design

Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil - 'Abdul Hamid Baqawi * - Mục lục các bản dịch

XML CSV Excel API
Please review the Terms and Policies

Ý nghĩa nội dung Chương: Al-An-'am   Câu:
هَلْ یَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ تَاْتِیَهُمُ الْمَلٰٓىِٕكَةُ اَوْ یَاْتِیَ رَبُّكَ اَوْ یَاْتِیَ بَعْضُ اٰیٰتِ رَبِّكَ ؕ— یَوْمَ یَاْتِیْ بَعْضُ اٰیٰتِ رَبِّكَ لَا یَنْفَعُ نَفْسًا اِیْمَانُهَا لَمْ تَكُنْ اٰمَنَتْ مِنْ قَبْلُ اَوْ كَسَبَتْ فِیْۤ اِیْمَانِهَا خَیْرًا ؕ— قُلِ انْتَظِرُوْۤا اِنَّا مُنْتَظِرُوْنَ ۟
158. வானவர்கள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உங்கள் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி வருவதையோ தவிர, (வேறெதனையும்) அவர்கள் எதிர் பார்க்கின்றனரா? உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி(யாகிய இறுதி நாள்) வருவதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதிருந்து அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் ஒரு நற்செயலும் செய்யாதிருந்துவிட்டு அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை ஒரு பலனையும் அளிக்காது. ஆகவே, (அவர்களை நோக்கி ‘‘அப்பெரிய அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாமும் எதிர்பார்த்திருக்கிறோம்'' என்று (நபியே!) கூறுவீராக.
Các Tafsir tiếng Ả-rập:
اِنَّ الَّذِیْنَ فَرَّقُوْا دِیْنَهُمْ وَكَانُوْا شِیَعًا لَّسْتَ مِنْهُمْ فِیْ شَیْءٍ ؕ— اِنَّمَاۤ اَمْرُهُمْ اِلَی اللّٰهِ ثُمَّ یُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟
159. எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தங்கள் இஷ்டப்படி பலவாறாக)ப் பிரித்து (அவர்களும்) பல பிரிவினராகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உங்களுக்கு ஒரு சம்பந்தமும் இல்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே இருக்கிறது. அவர்கள் செய்து கொண்டிருந்த (இத்தீய)வற்றைப் பற்றி பின்னர் அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான்.
Các Tafsir tiếng Ả-rập:
مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا ۚ— وَمَنْ جَآءَ بِالسَّیِّئَةِ فَلَا یُجْزٰۤی اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
160. எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றதே அன்றி (அதிகமாக) அவருக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது. (குற்றத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்தோ அல்லது நன்மைக்குரிய கூலியைக் குறைத்தோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
Các Tafsir tiếng Ả-rập:
قُلْ اِنَّنِیْ هَدٰىنِیْ رَبِّیْۤ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۚ۬— دِیْنًا قِیَمًا مِّلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ۚ— وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
161. ‘‘நிச்சயமாக என் இறைவன் எனக்கு நேரான பாதையை அறிவித்து விட்டான். (அது) மிக்க உறுதியான மார்க்கமாகும், இப்ராஹீமுடைய நேரான மார்க்கமாகும். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவில்லை'' என்று (நபியே!) கூறுவீராக.
Các Tafsir tiếng Ả-rập:
قُلْ اِنَّ صَلَاتِیْ وَنُسُكِیْ وَمَحْیَایَ وَمَمَاتِیْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
162. நீங்கள் கூறுங்கள்: ‘‘நிச்சயமாக என் தொழுகையும், என் (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை.
Các Tafsir tiếng Ả-rập:
لَا شَرِیْكَ لَهٗ ۚ— وَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا اَوَّلُ الْمُسْلِمِیْنَ ۟
163. அவனுக்கு ஒரு இணையுமில்லை; (துணையுமில்லை.) இவ்வாறே, நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே, அவனுக்கு பணிந்து வழிப்பட்டவர்களில் நான் முதன்மையானவன்'' (என்றும் கூறுவீராக.)
Các Tafsir tiếng Ả-rập:
قُلْ اَغَیْرَ اللّٰهِ اَبْغِیْ رَبًّا وَّهُوَ رَبُّ كُلِّ شَیْءٍ ؕ— وَلَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ اِلَّا عَلَیْهَا ۚ— وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ۚ— ثُمَّ اِلٰی رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟
164. ‘‘அல்லாஹ்வே அனைவரையும் படைத்து பரிபாலிக்க அவனையன்றி மற்றெவரையும் எனக்கு இறைவனாக நான்எடுத்துக் கொள்வேனா? பாவம் செய்யும் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது. ஆகவே, ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. (இறந்த) பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடமே செல்வீர்கள். நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்ததைப் பற்றி (அவற்றில் எது தவறு, எது சரி என்பதை அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
Các Tafsir tiếng Ả-rập:
وَهُوَ الَّذِیْ جَعَلَكُمْ خَلٰٓىِٕفَ الْاَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّیَبْلُوَكُمْ فِیْ مَاۤ اٰتٰىكُمْ ؕ— اِنَّ رَبَّكَ سَرِیْعُ الْعِقَابِ ۖؗۗ— وَاِنَّهٗ لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
165. அவன்தான் உங்களை பூமியில் முன் சென்றவர்களின் இடத்தில் வைத்தான். உங்களில் சிலரை மற்றவர்களைவிட அந்தஸ்தில் உயர்த்தியும் இருக்கிறான். (இதன் மூலம்) உங்களுக்குக் கொடுத்தவற்றில் (நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று) உங்களைச் சோதிக்கிறான். நிச்சயமாக உமது இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். ஆயினும், நிச்சயமாக அவன் மிக்க பிழை பொறுப்பவன், பெரும் கருணையுடையவன் ஆவான்.
Các Tafsir tiếng Ả-rập:
 
Ý nghĩa nội dung Chương: Al-An-'am
Mục lục các chương Kinh Số trang
 
Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil - 'Abdul Hamid Baqawi - Mục lục các bản dịch

Người dịch Sheikh 'Abdul Hamid Al-Baqawi.

Đóng lại