Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
75 : 18

قَالَ اَلَمْ اَقُلْ لَّكَ اِنَّكَ لَنْ تَسْتَطِیْعَ مَعِیَ صَبْرًا ۟

(மூஸாவை நோக்கி) “என்னுடன் பொறு(மையாக இரு)ப்பதற்கு நிச்சயமாக நீர் இயலவே மாட்டீர்” என்று நான் உமக்கு கூறவில்லையா? என்று கூறினார். info
التفاسير:

external-link copy
76 : 18

قَالَ اِنْ سَاَلْتُكَ عَنْ شَیْ بَعْدَهَا فَلَا تُصٰحِبْنِیْ ۚ— قَدْ بَلَغْتَ مِنْ لَّدُنِّیْ عُذْرًا ۟

(மூஸா) “இதன் பின்னர் நான் (ஏதாவது) ஒரு விஷயத்தைப் பற்றி உம்மிடம் கேட்டால் என்னை சேர்க்காதீர். (என்னை விடுவதற்குரிய) ஒரு காரணத்தை என்னிடம் திட்டமாக அடைந்தீர்” என்று (அவரிடம் மூஸா) கூறினார். info
التفاسير:

external-link copy
77 : 18

فَانْطَلَقَا ۫— حَتّٰۤی اِذَاۤ اَتَیَاۤ اَهْلَ قَرْیَةِ ١سْتَطْعَمَاۤ اَهْلَهَا فَاَبَوْا اَنْ یُّضَیِّفُوْهُمَا فَوَجَدَا فِیْهَا جِدَارًا یُّرِیْدُ اَنْ یَّنْقَضَّ فَاَقَامَهٗ ؕ— قَالَ لَوْ شِئْتَ لَتَّخَذْتَ عَلَیْهِ اَجْرًا ۟

ஆக, இருவரும் (மேலும்) சென்றனர். இறுதியாக, அவ்விருவரும் ஓர் ஊராரிடம் வரவே அவ்வூராரிடம் அவ்விருவரும் உணவு கேட்டார்கள். அவர்கள் அவ்விருவருக்கும் விருந்தளிக்க மறுத்தனர். பிறகு, அங்கு விழ இருக்கும் ஒரு சுவற்றை அவ்விருவரும் கண்டனர். ஆகவே, அவர் அதை (செப்பனிட்டு விழாது) நிறுத்தினார். (மூஸா அவரை நோக்கி) “நீர் நாடியிருந்தால் அதற்காக (இவ்வூராரிடம்) ஒரு கூலியை எடுத்திருக்கலாமே” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
78 : 18

قَالَ هٰذَا فِرَاقُ بَیْنِیْ وَبَیْنِكَ ۚ— سَاُنَبِّئُكَ بِتَاْوِیْلِ مَا لَمْ تَسْتَطِعْ عَّلَیْهِ صَبْرًا ۟

அவர், “எனக்கிடையிலும் உமக்கிடையிலும் இதுவே பிரிவினை(க்குரிய நேரம்). நீர் பொறு(த்திரு)க்க இயலாதவற்றின் விளக்கத்தை உமக்கு அறிவிப்பேன்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
79 : 18

اَمَّا السَّفِیْنَةُ فَكَانَتْ لِمَسٰكِیْنَ یَعْمَلُوْنَ فِی الْبَحْرِ فَاَرَدْتُّ اَنْ اَعِیْبَهَا وَكَانَ وَرَآءَهُمْ مَّلِكٌ یَّاْخُذُ كُلَّ سَفِیْنَةٍ غَصْبًا ۟

ஆக, அக்கப்பல் கடலில் (கூலி) வேலை செய்கிற ஏழைகளுக்கு உரியதாக இருக்கிறது. அதை நான் குறைபடுத்த நாடினேன். (ஏனென்றால், அக்கப்பல் செல்லும் வழியில்) அவர்களுக்கு முன் (தான் காணுகின்ற) எல்லா கப்பல்களையும் அபகரித்து எடுத்துக் கொள்கிற ஓர் (அநியாயக்கார) அரசன் இருக்கிறான். (அவனிடமிருந்து காப்பாற்றவே அதை குறைபடுத்தினேன்.) info
التفاسير:

external-link copy
80 : 18

وَاَمَّا الْغُلٰمُ فَكَانَ اَبَوٰهُ مُؤْمِنَیْنِ فَخَشِیْنَاۤ اَنْ یُّرْهِقَهُمَا طُغْیَانًا وَّكُفْرًا ۟ۚ

(கொலை செய்யப்பட்ட) அந்தச் சிறுவன் - அவனுடைய தாயும் தந்தையும் (நல்ல) நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அட்டூழியம் செய்வதற்கும், நிராகரிப்பதற்கும் கட்டாயப்படுத்தி விடுவான் என்று நாம் பயந்(து அப்படி செய்)தோம். info
التفاسير:

external-link copy
81 : 18

فَاَرَدْنَاۤ اَنْ یُّبْدِلَهُمَا رَبُّهُمَا خَیْرًا مِّنْهُ زَكٰوةً وَّاَقْرَبَ رُحْمًا ۟

ஆகவே, அவ்விருவருக்கும் அவ்விருவரின் இறைவன் அவனை விட பரிசுத்தமான சிறந்தவரை, இன்னும் (கொல்லப்பட்டவனை விட தாய் தந்தை மீது) அதிக நெருக்கமான கருணையுடையவரை பகரமாக (பிள்ளையை) கொடுப்பதை நாடினோம். info
التفاسير:

external-link copy
82 : 18

وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَیْنِ یَتِیْمَیْنِ فِی الْمَدِیْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًا ۚ— فَاَرَادَ رَبُّكَ اَنْ یَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَیَسْتَخْرِجَا كَنْزَهُمَا ۖۗ— رَحْمَةً مِّنْ رَّبِّكَ ۚ— وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِیْ ؕ— ذٰلِكَ تَاْوِیْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَیْهِ صَبْرًا ۟ؕ۠

ஆக, (அந்தச்) சுவரோ (அப்)பட்டிணத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியதாக இருந்தது. அதற்குக் கீழ் அவ்விருவருக்குரிய புதையல் ஒன்று இருக்கிறது. அவ்விருவரின் தந்தை (மிக) நல்லவராக இருந்தார். ஆகவே, அவ்விருவரும் தங்கள் வாலிபத்தை அடைந்து, தங்கள் புதையலை வெளியே எடுத்துக் கொள்வதற்கு உம் இறைவன் நாடினான். (எனவே, அதைச் செப்பனிட்டேன். இது,) உம் இறைவனின் அருளினால் (செய்யப்பட்டது). (மேற்படி நிகழ்ந்த) இவற்றை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை. நீர் பொறு(த்திரு)ப்பதற்கு இயலாதவற்றின் விளக்கம் இதுதான்”என்று கூறினார். info
التفاسير:

external-link copy
83 : 18

وَیَسْـَٔلُوْنَكَ عَنْ ذِی الْقَرْنَیْنِ ؕ— قُلْ سَاَتْلُوْا عَلَیْكُمْ مِّنْهُ ذِكْرًا ۟ؕ

(நபியே!) துல்கர்னைனைப் பற்றி (அவர்கள்) உம்மிடம் கேட்கின்றனர். “அவரைப் பற்றிய நல்லுபதேசத்தை உங்களுக்கு ஓதுவேன்” என்று கூறுவீராக. info
التفاسير: