Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
84 : 18

اِنَّا مَكَّنَّا لَهٗ فِی الْاَرْضِ وَاٰتَیْنٰهُ مِنْ كُلِّ شَیْءٍ سَبَبًا ۟ۙ

நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆதிக்கத்தைக் கொடுத்தோம். இன்னும், ஒவ்வொரு பொருளைப் பற்றி (-அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற) அறிவை அவருக்குக் கொடுத்தோம். info
التفاسير:

external-link copy
85 : 18

فَاَتْبَعَ سَبَبًا ۟

ஆக, அவர் (பூமியில்) ஒரு வழியைப் பின்தொடர்ந்(து அதில் ஓர் எல்லையை அடைந்)தார். info
التفاسير:

external-link copy
86 : 18

حَتّٰۤی اِذَا بَلَغَ مَغْرِبَ الشَّمْسِ وَجَدَهَا تَغْرُبُ فِیْ عَیْنٍ حَمِئَةٍ وَّوَجَدَ عِنْدَهَا قَوْمًا ؕ۬— قُلْنَا یٰذَا الْقَرْنَیْنِ اِمَّاۤ اَنْ تُعَذِّبَ وَاِمَّاۤ اَنْ تَتَّخِذَ فِیْهِمْ حُسْنًا ۟

இறுதியாக, சூரியன் மறையும் இடத்தை (மேற்குத் திசையை) அவர் அடைந்தபோது சேற்றுக் கடலில் மறைவதாக அதைக் கண்டார். அதனிடத்தில் (ஒருவகையான) சில மக்களைக் கண்டார். (நாம் அவரை நோக்கி) “துல்கர்னைனே! ஒன்று, (இவர்களைத் தண்டித்து) வேதனை செய்வீர், அல்லது, அவர்களில் ஓர் அழகிய (நடத்)தை(யை) கடைப்பிடி(த்து மன்னி)ப்பீர். (இரண்டும் உமக்கு அனுமதிக்கப்பட்டதே!)” என்று கூறினோம். info
التفاسير:

external-link copy
87 : 18

قَالَ اَمَّا مَنْ ظَلَمَ فَسَوْفَ نُعَذِّبُهٗ ثُمَّ یُرَدُّ اِلٰی رَبِّهٖ فَیُعَذِّبُهٗ عَذَابًا نُّكْرًا ۟

(துல் கர்னைன்) கூறினார்: ஆகவே, எவன் (இணைவைத்தும் என் கட்டளையை மீறியும்) அநியாயம் செய்தானோ அவனை வேதனை செய்வோம். பிறகு, அவன் தன் இறைவனிடம் திருப்பப்படுவான். அவன் அவனை கொடிய வேதனையில் வேதனை செய்வான். info
التفاسير:

external-link copy
88 : 18

وَاَمَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهٗ جَزَآءَ ١لْحُسْنٰی ۚ— وَسَنَقُوْلُ لَهٗ مِنْ اَمْرِنَا یُسْرًا ۟ؕ

ஆகவே, எவர் நம்பிக்கை கொண்டு (நாம் கூறுகிறபடி) நற்செயலை செய்தாரோ அவருக்கு (இறைவனிடத்தில்) அழகிய (தங்குமிடம்-சொர்க்கம்) கூலியாக இருக்கிறது. நாமும் நம் காரியத்தில் இலகுவானதை அவருக்குக் கூறுவோம். info
التفاسير:

external-link copy
89 : 18

ثُمَّ اَتْبَعَ سَبَبًا ۟

பிறகு, அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்தொடர்ந்(து அதில் ஓர் எல்லையை அடைந்)தார். info
التفاسير:

external-link copy
90 : 18

حَتّٰۤی اِذَا بَلَغَ مَطْلِعَ الشَّمْسِ وَجَدَهَا تَطْلُعُ عَلٰی قَوْمٍ لَّمْ نَجْعَلْ لَّهُمْ مِّنْ دُوْنِهَا سِتْرًا ۟ۙ

இறுதியாக, அவர் சூரியன் உதிக்குமிடத்தை (கிழக்குத் திசையை) அடைந்தபோது ஒரு சமுதாயத்தின் மீது உதிப்பதாக அதைக் கண்டார். அதற்கு முன்னாலிருந்து (அதன் வெப்பத் திலிருந்து அவர்களை காப்பாற்றும் நிழல் தரும் மலை, மரம், வீடு போன்ற) ஒரு தடுப்பை அவர்களுக்கு நாம் ஆக்கவில்லை. info
التفاسير:

external-link copy
91 : 18

كَذٰلِكَ ؕ— وَقَدْ اَحَطْنَا بِمَا لَدَیْهِ خُبْرًا ۟

(அவர்களுடைய நிலைமை) அப்படித்தான் (இருந்தது). மேலும், திட்டமாக அதனிடத்தில் இருந்தவற்றை நாம் ஆழமாக சூழ்ந்தறிந்தோம். info
التفاسير:

external-link copy
92 : 18

ثُمَّ اَتْبَعَ سَبَبًا ۟

பிறகு, அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்தொடர்ந்(து அதில் ஓர் எல்லையை அடைந்)தார். info
التفاسير:

external-link copy
93 : 18

حَتّٰۤی اِذَا بَلَغَ بَیْنَ السَّدَّیْنِ وَجَدَ مِنْ دُوْنِهِمَا قَوْمًا ۙ— لَّا یَكَادُوْنَ یَفْقَهُوْنَ قَوْلًا ۟

இறுதியாக, (அங்கிருந்த) இரு மலைகளுக்கு இடையில் (உள்ள ஓர் இடத்தை) அவர் அடைந்தபோது அவ்விரண்டிற்கும் முன்னால் (பிறருடைய) பேச்சை எளிதில் விளங்க முடியாத ஒரு சமுதாயத்தைக் கண்டார் info
التفاسير:

external-link copy
94 : 18

قَالُوْا یٰذَا الْقَرْنَیْنِ اِنَّ یَاْجُوْجَ وَمَاْجُوْجَ مُفْسِدُوْنَ فِی الْاَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلٰۤی اَنْ تَجْعَلَ بَیْنَنَا وَبَیْنَهُمْ سَدًّا ۟

அவர்கள் (சைகையாக) “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்பவர்கள் எங்கள்) பூமியில் (நுழைந்து) விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் ஒரு தடையை ஏற்படுத்துவதற்காக (செலவாகும்) ஒரு தொகையை நாங்கள் உமக்கு ஆக்கட்டுமா?” என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
95 : 18

قَالَ مَا مَكَّنِّیْ فِیْهِ رَبِّیْ خَیْرٌ فَاَعِیْنُوْنِیْ بِقُوَّةٍ اَجْعَلْ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ رَدْمًا ۟ۙ

கூறினார்: “என் இறைவன் எதில் எனக்கு ஆற்றல் அளித்துள்ளானோ அதுவே (போதுமானதும்) மிக்க மேலானது(ம் ஆகும்). ஆகவே, (உங்கள் உழைப்பு எனும்) வலிமையைக்கொண்டு எனக்கு உதவுங்கள். உங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் பலமான ஒரு தடுப்பை ஏற்படுத்துவேன்” info
التفاسير:

external-link copy
96 : 18

اٰتُوْنِیْ زُبَرَ الْحَدِیْدِ ؕ— حَتّٰۤی اِذَا سَاوٰی بَیْنَ الصَّدَفَیْنِ قَالَ انْفُخُوْا ؕ— حَتّٰۤی اِذَا جَعَلَهٗ نَارًا ۙ— قَالَ اٰتُوْنِیْۤ اُفْرِغْ عَلَیْهِ قِطْرًا ۟ؕ

“(தேவையான) இரும்பு பாலங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்.” இறுதியாக, இரு மலைகளின் உச்சிகளுக்கு அவை சமமாகினால், (அதில் நெருப்பை மூட்ட) ஊதுங்கள் என்று கூறினார். இறுதியாக, (ஊதி) அவற்றை (பழுத்த) நெருப்பாக ஆக்கினால் “என்னிடம் (செம்பைக்) கொண்டு வாருங்கள். (அந்த) செம்பை (உருக்கி) அதன் மீது ஊற்றுவேன்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
97 : 18

فَمَا اسْطَاعُوْۤا اَنْ یَّظْهَرُوْهُ وَمَا اسْتَطَاعُوْا لَهٗ نَقْبًا ۟

“ஆகவே, அதன் மீது ஏறுவதற்கு அவர்கள் இயலவில்லை. அதைத் துளையிடவும் அவர்கள் இயலவில்லை.” info
التفاسير: