Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
54 : 18

وَلَقَدْ صَرَّفْنَا فِیْ هٰذَا الْقُرْاٰنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ ؕ— وَكَانَ الْاِنْسَانُ اَكْثَرَ شَیْءٍ جَدَلًا ۟

இந்த குர்ஆனில் மக்களுக்கு எல்லா உதாரணங்களையும் விவரித்து விட்டோம். (இருந்தும்) மனிதன் மிக அதிகம் வாதிப்பவனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
55 : 18

وَمَا مَنَعَ النَّاسَ اَنْ یُّؤْمِنُوْۤا اِذْ جَآءَهُمُ الْهُدٰی وَیَسْتَغْفِرُوْا رَبَّهُمْ اِلَّاۤ اَنْ تَاْتِیَهُمْ سُنَّةُ الْاَوَّلِیْنَ اَوْ یَاْتِیَهُمُ الْعَذَابُ قُبُلًا ۟

மக்களுக்கு நேர்வழி வந்தபோது (அதை ஏற்று) அவர்கள் நம்பிக்கை கொண்டு, அவர்களுடைய இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதை விட்டு அவர்களைத் தடுக்கவில்லை. முன்னோரின் நடைமுறை அவர்களுக்கு வருவதை அல்லது கண்முன் (வெளிப்படையாக, திடீரென) வேதனை அவர்களுக்கு வருவதை (அவர்கள் எதிர்பார்த்தே) தவிர. info
التفاسير:

external-link copy
56 : 18

وَمَا نُرْسِلُ الْمُرْسَلِیْنَ اِلَّا مُبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ ۚ— وَیُجَادِلُ الَّذِیْنَ كَفَرُوْا بِالْبَاطِلِ لِیُدْحِضُوْا بِهِ الْحَقَّ وَاتَّخَذُوْۤا اٰیٰتِیْ وَمَاۤ اُنْذِرُوْا هُزُوًا ۟

நற்செய்தி கூறுபவர்களாகவும் எச்சரிப்பவர்களாகவுமே தவிர தூதர்களை அனுப்பமாட்டோம். அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தை அழிப்பதற்காக நிராகரித்தவர்கள் அந்த அசத்தியத்தைக் கொண்டு வாதிடுகிறார்கள். இன்னும் என் வசனங்களையும் அவர்கள் எச்சரிக்கப்பட்டவற்றையும் கேலியாக எடுத்துக் கொண்டனர். info
التفاسير:

external-link copy
57 : 18

وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰیٰتِ رَبِّهٖ فَاَعْرَضَ عَنْهَا وَنَسِیَ مَا قَدَّمَتْ یَدٰهُ ؕ— اِنَّا جَعَلْنَا عَلٰی قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ یَّفْقَهُوْهُ وَفِیْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ— وَاِنْ تَدْعُهُمْ اِلَی الْهُدٰی فَلَنْ یَّهْتَدُوْۤا اِذًا اَبَدًا ۟

தன் இறைவனின் வசனங்களைக் கொண்டு தனக்கு அறிவுரை கூறப்பட அவற்றைப் புறக்கணித்து, தன் இரு கரங்களும் முற்படுத்திய(கெட்ட)வற்றை மறந்தவனை விட மகா தீயவன் யார்? அ(ந்த சத்தியத்)தை அவர்கள் புரிவதை தடுக்கும் மூடிகளை அவர்களின் உள்ளங்கள் மீதும், அவர்களுடைய காதுகள் மீது கனத்தையும் (மந்தத்தையும்) ஆக்கினோம். நீர் அவர்களை நேர் வழிக்கு அழைத்தாலும் அப்போது அவர்கள் ஒருபோதும் நேர்வழி பெறவேமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
58 : 18

وَرَبُّكَ الْغَفُوْرُ ذُو الرَّحْمَةِ ؕ— لَوْ یُؤَاخِذُهُمْ بِمَا كَسَبُوْا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَ ؕ— بَلْ لَّهُمْ مَّوْعِدٌ لَّنْ یَّجِدُوْا مِنْ دُوْنِهٖ مَوْىِٕلًا ۟

உம் இறைவன் மகா மன்னிப்பாளன், கருணையுடையவன். அவர்கள் செய்தவற்றுக்காக அவன் அவர்களை (தண்டனையைக் கொண்டு) பிடித்தால் வேதனையை அவர்களுக்கு தீவிரப்படுத்தியிருப்பான். மாறாக, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. அதிலிருந்து (தப்பிக்க) ஒதுங்குமிடத்தை (அவர்கள்) பெறவே மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
59 : 18

وَتِلْكَ الْقُرٰۤی اَهْلَكْنٰهُمْ لَمَّا ظَلَمُوْا وَجَعَلْنَا لِمَهْلِكِهِمْ مَّوْعِدًا ۟۠

அந்த ஊர்(வாசி)கள், அவர்கள் தீங்கிழைத்தபோது அவர்களை அழித்தோம். அவர்கள் அழிவதற்கு (வாக்களிக்கப்பட்ட) ஒரு தவணையை ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
60 : 18

وَاِذْ قَالَ مُوْسٰی لِفَتٰىهُ لَاۤ اَبْرَحُ حَتّٰۤی اَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَیْنِ اَوْ اَمْضِیَ حُقُبًا ۟

மூஸா தன்(னுடன் இருந்த) வாலிபரை நோக்கி “இரு கடல்களும் இணைகின்ற இடத்தை நான் அடையும் வரை சென்று கொண்டே இருப்பேன். அல்லது நீண்டதொரு காலம் நடந்துகொண்டே இருப்பேன்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! info
التفاسير:

external-link copy
61 : 18

فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَیْنِهِمَا نَسِیَا حُوْتَهُمَا فَاتَّخَذَ سَبِیْلَهٗ فِی الْبَحْرِ سَرَبًا ۟

அவ்விருவரும் அவ்விரண்டு (கடல்களு)ம் இணையும் இடத்தை அடைந்தபோது இருவரும் தங்கள் மீனை மறந்தனர். அது கடலில் தன் வழியைச் சுரங்கம் போல் ஆக்கிக் கொண்டது. info
التفاسير: