Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
109 : 3

وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்குரியவையே! அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் திருப்பப்படும். info
التفاسير:

external-link copy
110 : 3

كُنْتُمْ خَیْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ ؕ— وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَكَانَ خَیْرًا لَّهُمْ ؕ— مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ ۟

(நம்பிக்கையாளர்களே!) மக்களுக்காக வெளியாக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக (நீங்கள்) இருக்கிறீர்கள். நன்மையைக் கொண்டு ஏவுகிறீர்கள்; தீமையை விட்டும் தடுக்கிறீர்கள்; அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதக்காரர்களும் (உங்களைப் போன்று) நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்கு மிகச் சிறந்ததாக ஆகிவிடும். அவர்களில் நம்பிக்கையாளர்களும் உண்டு. அவர்களில் அதிகமானவர்கள் பாவிகள்தான். info
التفاسير:

external-link copy
111 : 3

لَنْ یَّضُرُّوْكُمْ اِلَّاۤ اَذًی ؕ— وَاِنْ یُّقَاتِلُوْكُمْ یُوَلُّوْكُمُ الْاَدْبَارَ ۫— ثُمَّ لَا یُنْصَرُوْنَ ۟

(ஒரு சொற்ப) சிரமத்தைத் தவிர உங்களுக்கு அவர்கள் அறவே தீங்கு செய்யமுடியாது. உங்களிடம் அவர்கள் போரிட்டால் உங்களுக்கு (தங்கள்) பின்புறங்களைத் திருப்புவார்கள். (புறமுதுகிட்டு ஓடுவார்கள்.) பிறகு உதவி செய்யப்படமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
112 : 3

ضُرِبَتْ عَلَیْهِمُ الذِّلَّةُ اَیْنَ مَا ثُقِفُوْۤا اِلَّا بِحَبْلٍ مِّنَ اللّٰهِ وَحَبْلٍ مِّنَ النَّاسِ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَضُرِبَتْ عَلَیْهِمُ الْمَسْكَنَةُ ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا یَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَیَقْتُلُوْنَ الْاَنْۢبِیَآءَ بِغَیْرِ حَقٍّ ؕ— ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟ۗ

அவர்கள் எங்கு பெற்றுக் கொள்ளப்பட்டாலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டது. அல்லாஹ்வின் கயிற்றைக் கொண்டும் மக்களின் கயிற்றைக் கொண்டுமே தவிர (அவர்கள் தப்பமுடியாது). அல்லாஹ்வின் கோபத்திலும் திரும்பிவிட்டார்கள். ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டது. அது, நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்துகொண்டும் இருந்த காரணத்தாலாகும். அது, அவர்கள் மாறுசெய்தார்கள், இன்னும் வரம்புமீறிக் கொண்டிருந்தார்கள் என்ற காரணத்தாலாகும். info
التفاسير:

external-link copy
113 : 3

لَیْسُوْا سَوَآءً ؕ— مِنْ اَهْلِ الْكِتٰبِ اُمَّةٌ قَآىِٕمَةٌ یَّتْلُوْنَ اٰیٰتِ اللّٰهِ اٰنَآءَ الَّیْلِ وَهُمْ یَسْجُدُوْنَ ۟

அவர்கள் சமமானவர்களாக இல்லை. வேதக்காரர்களில் நீதமான ஒரு கூட்டத்தினர் இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள்; அவர்கள் சிரம் பணி(ந்து தொழு)கிறார்கள். (காயிமா: நின்று தொழுபவர்கள், நீதமானவர்கள், மார்க்கத்தை உறுதியாக பின்பற்றுபவர்கள்.) info
التفاسير:

external-link copy
114 : 3

یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَیَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَیُسَارِعُوْنَ فِی الْخَیْرٰتِ ؕ— وَاُولٰٓىِٕكَ مِنَ الصّٰلِحِیْنَ ۟

(அக்கூட்டத்தினர்) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நன்மையைக் கொண்டு ஏவுகிறார்கள்; தீமையை விட்டும் தடுக்கிறார்கள்; நன்மைகளில் விரைகிறார்கள். இவர்கள்தான் நல்லோரில் உள்ளவர்கள். info
التفاسير:

external-link copy
115 : 3

وَمَا یَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَلَنْ یُّكْفَرُوْهُ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالْمُتَّقِیْنَ ۟

(அவர்கள்) எந்த நன்மையில் எதைச் செய்தாலும் அதை அறவே நிராகரிக்கப்படமாட்டார்கள். அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களை நன்கறிந்தவன். info
التفاسير: