Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
149 : 3

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِیْعُوا الَّذِیْنَ كَفَرُوْا یَرُدُّوْكُمْ عَلٰۤی اَعْقَابِكُمْ فَتَنْقَلِبُوْا خٰسِرِیْنَ ۟

நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் உங்கள் குதிங்கால்கள் மீது (மார்க்கத்தை விட்டும்) உங்களைத் திருப்பி விடுவார்கள். ஆகவே, (நீங்கள்) நஷ்டவாளிகளாக திரும்பி விடுவீர்கள். info
التفاسير:

external-link copy
150 : 3

بَلِ اللّٰهُ مَوْلٰىكُمْ ۚ— وَهُوَ خَیْرُ النّٰصِرِیْنَ ۟

மாறாக, அல்லாஹ்தான் உங்கள் எஜமான். உதவியாளர்களில் அவன் (மிகச்)சிறந்தவன். info
التفاسير:

external-link copy
151 : 3

سَنُلْقِیْ فِیْ قُلُوْبِ الَّذِیْنَ كَفَرُوا الرُّعْبَ بِمَاۤ اَشْرَكُوْا بِاللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا ۚ— وَمَاْوٰىهُمُ النَّارُ ؕ— وَبِئْسَ مَثْوَی الظّٰلِمِیْنَ ۟

(அல்லாஹ்) எதற்கு ஓர் ஆதாரத்தை இறக்கவில்லையோ அதை அல்லாஹ்விற்கு அவர்கள் இணைவைத்த காரணத்தால் நிராகரிப்பாளர்களுடைய உள்ளங்களில் திகிலை போடுவோம். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களின் தங்குமிடம் கெட்டுவிட்டது. info
التفاسير:

external-link copy
152 : 3

وَلَقَدْ صَدَقَكُمُ اللّٰهُ وَعْدَهٗۤ اِذْ تَحُسُّوْنَهُمْ بِاِذْنِهٖ ۚ— حَتّٰۤی اِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِی الْاَمْرِ وَعَصَیْتُمْ مِّنْ بَعْدِ مَاۤ اَرٰىكُمْ مَّا تُحِبُّوْنَ ؕ— مِنْكُمْ مَّنْ یُّرِیْدُ الدُّنْیَا وَمِنْكُمْ مَّنْ یُّرِیْدُ الْاٰخِرَةَ ۚ— ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِیَبْتَلِیَكُمْ ۚ— وَلَقَدْ عَفَا عَنْكُمْ ؕ— وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَلَی الْمُؤْمِنِیْنَ ۟

(நம்பிக்கையாளர்களே!) அவனுடைய அனுமதியுடன் நீங்கள் அவர்களை வெட்டி வீழ்த்தும்போது அல்லாஹ் தன் வாக்கை உங்களுக்கு திட்டவட்டமாக உண்மையாக்கினான். நீங்கள் கோழையாகி, (தூதருடைய) கட்டளையில் தர்க்கித்து, நீங்கள் விரும்புவதை அவன் உங்களுக்குக் காண்பித்ததற்கு பின்னர் (தூதருக்கு) மாறுசெய்தபோது (அல்லாஹ் தன் உதவியை நிறுத்தினான்). உங்களில் உலக (செல்வ)த்தை நாடுபவரும் உண்டு. உங்களில் மறுமை(யின் நன்மை)யை நாடுபவரும் உண்டு. பிறகு உங்களைச் சோதிப்பதற்காக அவர்களை விட்டும் உங்களைத் திருப்பினான். திட்டவட்டமாக உங்களை மன்னித்தான். அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது அருளுடையவன் ஆவான். info
التفاسير:

external-link copy
153 : 3

اِذْ تُصْعِدُوْنَ وَلَا تَلْوٗنَ عَلٰۤی اَحَدٍ وَّالرَّسُوْلُ یَدْعُوْكُمْ فِیْۤ اُخْرٰىكُمْ فَاَثَابَكُمْ غَمًّا بِغَمٍّ لِّكَیْلَا تَحْزَنُوْا عَلٰی مَا فَاتَكُمْ وَلَا مَاۤ اَصَابَكُمْ ؕ— وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟

(உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு இறுதியில் இருந்தவாறு உங்களை அழைக்க நீங்கள் ஒருவரையும் எதிர்பார்க்காமல் வேகமாக ஓடிய சமயத்தை நினைவு கூறுங்கள். (தூதருக்கு நீங்கள் கொடுத்த) துயரத்தின் காரணமாக உங்களுக்கு(ம் தோல்வியின்) துயரத்தையே (அல்லாஹ்) கூலியாக்கினான். (காரணம், வெற்றியில்) உங்களுக்கு தவறியதின் மீதும், உங்களுக்கு ஏற்பட்ட (நஷ்டத்)தின் மீதும் நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவே ஆகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிந்தவன். info
التفاسير: