Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
141 : 3

وَلِیُمَحِّصَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَیَمْحَقَ الْكٰفِرِیْنَ ۟

நம்பிக்கையாளர்களை சோதி(த்து சுத்த)ப்ப(டுத்துவ)தற்காகவும், நிராகரிப்பாளர்களை அழிப்பதற்காகவும் (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). info
التفاسير:

external-link copy
142 : 3

اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا یَعْلَمِ اللّٰهُ الَّذِیْنَ جٰهَدُوْا مِنْكُمْ وَیَعْلَمَ الصّٰبِرِیْنَ ۟

பொறுமையாளர்களை அறிவதுடன், உங்களில் (‘ஜிஹாது‘) போர் புரிந்தவர்களை அல்லாஹ் (வெளிப்படையாக) அறியாமல், நீங்கள் சொர்க்கத்தில் நுழைய நினைத்தீர்களா? info
التفاسير:

external-link copy
143 : 3

وَلَقَدْ كُنْتُمْ تَمَنَّوْنَ الْمَوْتَ مِنْ قَبْلِ اَنْ تَلْقَوْهُ ۪— فَقَدْ رَاَیْتُمُوْهُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟۠

திட்டமாக, (ஜிஹாதில்) மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னர் அதை ஆசை வைத்துக் கொண்டிருந்தீர்கள். (இப்போது) அதைப் பார்த்தும் விட்டீர்கள். நீங்களோ (அதை கண்களாலும்) காண்கிறீர்கள். info
التفاسير:

external-link copy
144 : 3

وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ ۚ— قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ؕ— اَفَاۡىِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰۤی اَعْقَابِكُمْ ؕ— وَمَنْ یَّنْقَلِبْ عَلٰی عَقِبَیْهِ فَلَنْ یَّضُرَّ اللّٰهَ شَیْـًٔا ؕ— وَسَیَجْزِی اللّٰهُ الشّٰكِرِیْنَ ۟

முஹம்மது (நபி) ஒரு தூதரே தவிர (இறைவன்) இல்லை. அவருக்கு முன்னர் (பல) தூதர்கள் சென்றுவிட்டனர். அவர் இறந்தால் அல்லது கொல்லப்பட்டால் (மார்க்கத்தை விட்டும்) உங்கள் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவீர்களோ? எவர் தன் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவாரோ (அவர்) அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்குசெய்யமுடியாது. நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் (நற்)கூலி வழங்குவான். info
التفاسير:

external-link copy
145 : 3

وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًا ؕ— وَمَنْ یُّرِدْ ثَوَابَ الدُّنْیَا نُؤْتِهٖ مِنْهَا ۚ— وَمَنْ یُّرِدْ ثَوَابَ الْاٰخِرَةِ نُؤْتِهٖ مِنْهَا ؕ— وَسَنَجْزِی الشّٰكِرِیْنَ ۟

அல்லாஹ்வின் அனுமதியுடன், காலம் குறிக்கப்பட்ட விதிக்கு ஏற்பவே தவிர மரணிப்பது (எந்த) ஓர் ஆத்மாவிற்கு(ம்) சாத்தியம் இல்லை. எவர் உலகத்தின் நன்மையை நாடுவாரோ அவருக்கு அதிலிருந்து கொடுப்போம். எவர் மறுமையின் நன்மையை நாடுவாரோ அவருக்கு அதிலிருந்து கொடுப்போம் நன்றி செலுத்துபவர்களுக்கு (நற்)கூலி வழங்குவோம். info
التفاسير:

external-link copy
146 : 3

وَكَاَیِّنْ مِّنْ نَّبِیٍّ قٰتَلَ ۙ— مَعَهٗ رِبِّیُّوْنَ كَثِیْرٌ ۚ— فَمَا وَهَنُوْا لِمَاۤ اَصَابَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ؕ— وَاللّٰهُ یُحِبُّ الصّٰبِرِیْنَ ۟

எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் (சேர்ந்து எதிரிகளிடம்) அதிகமான நல்லடியார்கள் போர் புரிந்தனர். அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட (கஷ்டத்)தின் காரணமாக (எதிரிகள் முன்) அவர்கள் துணிவிழக்கவில்லை, பலவீனமடையவில்லை, பணியவில்லை. பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கிறான். info
التفاسير:

external-link copy
147 : 3

وَمَا كَانَ قَوْلَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِیْۤ اَمْرِنَا وَثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟

"எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியத்தில் எங்கள் வரம்புமீறலையும் எங்களுக்கு மன்னி! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து! நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவு!" என்று கூறியதைத் தவிர அவர்களுடைய கூற்றாக (வேறொன்றும்) இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
148 : 3

فَاٰتٰىهُمُ اللّٰهُ ثَوَابَ الدُّنْیَا وَحُسْنَ ثَوَابِ الْاٰخِرَةِ ؕ— وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟۠

ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு உலகத்தின் நன்மையையும், மறுமையின் அழகான நன்மையையும் கொடுத்தான். அல்லாஹ் நல்லறம் புரிவோரை நேசிக்கிறான். info
التفاسير: