Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
52 : 4

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَعَنَهُمُ اللّٰهُ ؕ— وَمَنْ یَّلْعَنِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ نَصِیْرًا ۟ؕ

இவர்களை அல்லாஹ் சபித்தான். எவரை அல்லாஹ் சபிப்பானோ அவருக்கு உதவியாளரை (நீர்) காணவே மாட்டீர். info
التفاسير:

external-link copy
53 : 4

اَمْ لَهُمْ نَصِیْبٌ مِّنَ الْمُلْكِ فَاِذًا لَّا یُؤْتُوْنَ النَّاسَ نَقِیْرًا ۟ۙ

இவர்களுக்கு ஆட்சியில் பங்கு ஏதும் இருக்கிறதா? அவ்வாறிருந்தால் (பேரீத்தங்கொட்டையின் நடுவில் உள்ள ஒரு) கீறல் அளவு(ள்ள பொருளையு)ம் மக்களுக்கு (தானமாக) கொடுக்க மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
54 : 4

اَمْ یَحْسُدُوْنَ النَّاسَ عَلٰی مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۚ— فَقَدْ اٰتَیْنَاۤ اٰلَ اِبْرٰهِیْمَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَیْنٰهُمْ مُّلْكًا عَظِیْمًا ۟

அல்லது மக்களைப் பற்றி அல்லாஹ் அவர்களுக்கு தன் அருளிலிருந்து கொடுத்ததின் மீது பொறாமை கொள்கிறார்களா? திட்டமாக இப்ராஹீமுடைய குடும்பத்தாருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம். பெரிய ஆட்சியையும் அவர்களுக்குக் கொடுத்தோம். info
التفاسير:

external-link copy
55 : 4

فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ ؕ— وَكَفٰی بِجَهَنَّمَ سَعِیْرًا ۟

அவர்களில் அ(வ்வேதத்)தை நம்பிக்கைகொண்டவரும் உண்டு. அவர்களில் அதைவிட்டு (பிறரைத்) தடுத்தவரும் உண்டு. கொழுந்து விட்டெரியும் நெருப்பால் நரகமே போதுமாகும். info
التفاسير:

external-link copy
56 : 4

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِنَا سَوْفَ نُصْلِیْهِمْ نَارًا ؕ— كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَیْرَهَا لِیَذُوْقُوا الْعَذَابَ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَزِیْزًا حَكِیْمًا ۟

நிச்சயமாக, நம் வசனங்களை நிராகரித்தவர்களை நரக நெருப்பில் எரிப்போம். அவர்கள் வேதனையைத் (தொடர்ந்து) சுவைப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கனிந்து விடும்போதெல்லாம் அவர்களுக்கு அவை அல்லாத (வேறு) தோல்களை மாற்றுவோம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாக, ஞானவானாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
57 : 4

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ— لَهُمْ فِیْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ؗ— وَّنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِیْلًا ۟

நம்பிக்கை கொண்டு, நன்மைகள் செய்தவர்களை சொர்க்கங்களில் நுழைப்போம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அதில் என்றும் நிரந்தரமானவர்கள். பரிசுத்தமான மனைவிகளும் அதில் அவர்களுக்கு உண்டு. அடர்ந்த நிழலிலும் அவர்களை நுழைப்போம். info
التفاسير:

external-link copy
58 : 4

اِنَّ اللّٰهَ یَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰۤی اَهْلِهَا ۙ— وَاِذَا حَكَمْتُمْ بَیْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ ؕ— اِنَّ اللّٰهَ نِعِمَّا یَعِظُكُمْ بِهٖ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ سَمِیْعًا بَصِیْرًا ۟

(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களை அதன் சொந்தக்காரரிடம் நீங்கள் ஒப்படைத்து விடுவதற்கும், மக்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்பளித்தால் (பாரபட்சமின்றி) நீதமாக தீர்ப்பளிப்பதற்கும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் உபதேசிப்பது மிக சிறந்ததாகும்! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
59 : 4

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَاُولِی الْاَمْرِ مِنْكُمْ ۚ— فَاِنْ تَنَازَعْتُمْ فِیْ شَیْءٍ فَرُدُّوْهُ اِلَی اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ— ذٰلِكَ خَیْرٌ وَّاَحْسَنُ تَاْوِیْلًا ۟۠

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிகாரிகளுக்கும் கீழ்ப்படியுங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டால், (மெய்யாகவே) நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் திருப்பிவிடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை திருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு சிறந்ததாகவும், மிக அழகான முடிவும் ஆகும். info
التفاسير: