Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
102 : 4

وَاِذَا كُنْتَ فِیْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآىِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْیَاْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ ۫— فَاِذَا سَجَدُوْا فَلْیَكُوْنُوْا مِنْ وَّرَآىِٕكُمْ ۪— وَلْتَاْتِ طَآىِٕفَةٌ اُخْرٰی لَمْ یُصَلُّوْا فَلْیُصَلُّوْا مَعَكَ وَلْیَاْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ ۚ— وَدَّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَیَمِیْلُوْنَ عَلَیْكُمْ مَّیْلَةً وَّاحِدَةً ؕ— وَلَا جُنَاحَ عَلَیْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَذًی مِّنْ مَّطَرٍ اَوْ كُنْتُمْ مَّرْضٰۤی اَنْ تَضَعُوْۤا اَسْلِحَتَكُمْ ۚ— وَخُذُوْا حِذْرَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟

(நபியே! போரில்) நீர் அவர்களுடன் இருந்து, அவர்களுக்கு தொழுகையை நிலைநிறுத்தினால் அவர்களில் ஒரு பிரிவு உம்முடன் (தொழ) நிற்கவும். அவர்கள் தங்கள் ஆயுதங்களை (கைகளில்) எடுக்கவும். அவர்கள் (உம்முடன் தொழுது) சஜ்தா செய்துவிட்டால் (தொழுகையிலிருந்து விலகி) உங்களுக்குப் பின்னால் இருக்கவும். தொழாமலிருந்த மற்றொரு பிரிவு வரவும், உம்முடன் அவர்கள் தொழவும். அவர்களும் தங்கள் தற்காப்பையும், தங்கள் ஆயுதங்களையும் எடுக்கவும். நீங்கள் உங்கள் ஆயுதங்கள் மற்றும் உங்கள் பொருள்களிலிருந்து கவனமற்றுவிட வேண்டுமே! என்று நிராகரிப்பாளர்கள் விரும்பினர். (அப்படி கவனமற்றால்) உடனே உங்கள் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்து விடுவார்கள். மழையின் காரணமாக சிரமம் உங்களுக்கு இருந்தால் அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தால் உங்கள் ஆயுதங்களை (கீழே) வைப்பது உங்கள் மீது குற்றமில்லை. உங்கள் தற்காப்பை எடுங்கள் (உஷாராக இருங்கள்). நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு இழிவான வேதனையை ஏற்படுத்தினான். info
التفاسير:

external-link copy
103 : 4

فَاِذَا قَضَیْتُمُ الصَّلٰوةَ فَاذْكُرُوا اللّٰهَ قِیٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰی جُنُوْبِكُمْ ۚ— فَاِذَا اطْمَاْنَنْتُمْ فَاَقِیْمُوا الصَّلٰوةَ ۚ— اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَی الْمُؤْمِنِیْنَ كِتٰبًا مَّوْقُوْتًا ۟

நீங்கள் தொழுகையை முடித்தால் நின்றவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும், உங்கள் விலாக்கள் மீது (படுத்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். (எதிரிகளின் தாக்குதலில் இருந்து) நீங்கள் நிம்மதி அடைந்தால் தொழுகையை (முறைப்படி) நிலைநிறுத்துங்கள். நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது. info
التفاسير:

external-link copy
104 : 4

وَلَا تَهِنُوْا فِی ابْتِغَآءِ الْقَوْمِ ؕ— اِنْ تَكُوْنُوْا تَاْلَمُوْنَ فَاِنَّهُمْ یَاْلَمُوْنَ كَمَا تَاْلَمُوْنَ ۚ— وَتَرْجُوْنَ مِنَ اللّٰهِ مَا لَا یَرْجُوْنَ ؕ— وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟۠

(எதிரி) கூட்டத்தைத் தேடுவதில் (நீங்கள் சிறிதும்) சோர்வடையாதீர்கள். நீங்கள் (காயத்தினால்) வேதனைப்படுபவர்களாக இருந்தால் நீங்கள் வேதனைப்படுவது போன்று நிச்சயமாக அவர்களும் வேதனைப்படுகிறார்கள். அவர்கள் ஆதரவு வைக்காத (வெற்றி, நற்கூலி அனைத்)தை(யும்) அல்லாஹ்விடம் நீங்கள் ஆதரவு வைக்கிறீர்கள். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானவானாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
105 : 4

اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَیْنَ النَّاسِ بِمَاۤ اَرٰىكَ اللّٰهُ ؕ— وَلَا تَكُنْ لِّلْخَآىِٕنِیْنَ خَصِیْمًا ۟ۙ

(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பளிப்பதற்காக உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நிச்சயமாக நாமே உம்மீது இறக்கினோம். நீர் மோசடிக்காரர்களுக்கு தர்க்கிப்பவராக ஆகிவிடாதீர். info
التفاسير: