Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
60 : 4

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یَزْعُمُوْنَ اَنَّهُمْ اٰمَنُوْا بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ یُرِیْدُوْنَ اَنْ یَّتَحَاكَمُوْۤا اِلَی الطَّاغُوْتِ وَقَدْ اُمِرُوْۤا اَنْ یَّكْفُرُوْا بِهٖ ؕ— وَیُرِیْدُ الشَّیْطٰنُ اَنْ یُّضِلَّهُمْ ضَلٰلًا بَعِیْدًا ۟

(நபியே!) உமக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டனர் என்று எண்ணுபவர்களை நீர் பார்க்கவில்லையா? தீயவனிடமே அவர்கள் தீர்ப்புத் தேடிச் செல்ல நாடுகின்றனர். அவர்கள் அ(ந்த தீய)வனை புறக்கணிக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளனர். ஷைத்தான் அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் வழிகெடுக்கவே நாடுகிறான். info
التفاسير:

external-link copy
61 : 4

وَاِذَا قِیْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰی مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَی الرَّسُوْلِ رَاَیْتَ الْمُنٰفِقِیْنَ یَصُدُّوْنَ عَنْكَ صُدُوْدًا ۟ۚ

"(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனது) தூதரின் பக்கமும் நீங்கள் வாருங்கள். (அந்த தீயவனிடம் செல்லாதீர்கள்.)" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந்நயவஞ்சகர்களை அவர்கள் உம்மைவிட்டு முற்றிலும் புறக்கணிப்பதையே நீர் காண்பீர். info
التفاسير:

external-link copy
62 : 4

فَكَیْفَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِیْبَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ثُمَّ جَآءُوْكَ یَحْلِفُوْنَ ۖۗ— بِاللّٰهِ اِنْ اَرَدْنَاۤ اِلَّاۤ اِحْسَانًا وَّتَوْفِیْقًا ۟

(நபியே!) (தீமைகளில்) அவர்களின் கரங்கள் முற்படுத்தியவற்றின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டால் (அதற்குப் பரிகாரம் தேடிக் கொள்ள முடியாமல்போன அவர்களின் இழி நிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனிப்பீராக.) பிறகு அவர்கள் உம்மிடம் வந்து "(அந்த தீயவனிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் அன்றி, (வேறொன்றையும்) நாங்கள் நாடவில்லை" என்று அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்கின்றனர். info
التفاسير:

external-link copy
63 : 4

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ یَعْلَمُ اللّٰهُ مَا فِیْ قُلُوْبِهِمْ ۗ— فَاَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُلْ لَّهُمْ فِیْۤ اَنْفُسِهِمْ قَوْلًا بَلِیْغًا ۟

இ(த்தகைய)வர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் அறிவான். ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து அவர்களுக்கு உபதேசிப்பீராக. அவர்களுடைய உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் கூற்றை அவர்களுக்குக் கூறுவீராக. info
التفاسير:

external-link copy
64 : 4

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِیُطَاعَ بِاِذْنِ اللّٰهِ ؕ— وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِیْمًا ۟

நாம் எந்தத் தூதரையும் அனுப்பவில்லை. அல்லாஹ்வுடைய அனுமதி கொண்டு அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர. நிச்சயமாக அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோது, உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி இருந்தால், (அத்துடன்) அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரியிருந்தால், பிழை பொறுப்பவனாக, பெரும் கருணையாளனாக அல்லாஹ்வைக் கண்டிருப்பார்கள். info
التفاسير:

external-link copy
65 : 4

فَلَا وَرَبِّكَ لَا یُؤْمِنُوْنَ حَتّٰی یُحَكِّمُوْكَ فِیْمَا شَجَرَ بَیْنَهُمْ ثُمَّ لَا یَجِدُوْا فِیْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَیْتَ وَیُسَلِّمُوْا تَسْلِیْمًا ۟

ஆகவே, (உண்மை அவ்வாறு) இல்லை. உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்களுக்கிடையில் சச்சரவு ஏற்பட்டதில் உம்மை தீர்ப்பாளராக்கி, பிறகு, நீர் தீர்ப்பளித்ததில் தங்கள் உள்ளங்களில் (எத்தகைய) அதிருப்தி காணாமல் முழுமையாக (உமக்கு) பணியும் வரை அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகமாட்டார்கள். info
التفاسير: