Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
78 : 5

لُعِنَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی لِسَانِ دَاوٗدَ وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ؕ— ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟

இஸ்ரவேலர்களில் நிராகரித்தவர்கள் தாவூத் இன்னும் மர்யமின் மகன் ஈஸாவின் நாவினால் சபிக்கப்பட்டனர். அது அவர்கள் மாறுசெய்ததாலும் (இறை சட்டங்களை) மீறுபவர்களாக இருந்ததாலுமாகும். info
التفاسير:

external-link copy
79 : 5

كَانُوْا لَا یَتَنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ ؕ— لَبِئْسَ مَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟

அவர்கள் செய்த தீமையை விட்டு ஒருவர் மற்றவரை தடுக்காதவர்களாக இருந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவை உறுதியாகக் கெட்டு விட்டது! info
التفاسير:

external-link copy
80 : 5

تَرٰی كَثِیْرًا مِّنْهُمْ یَتَوَلَّوْنَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ— لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ اَنْفُسُهُمْ اَنْ سَخِطَ اللّٰهُ عَلَیْهِمْ وَفِی الْعَذَابِ هُمْ خٰلِدُوْنَ ۟

அவர்களில் அதிகமானோர் நிராகரிப்பவர்களிடம் நட்புவைப்பதை (நபியே!) காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படியாக அவர்களுக்கு அவர்களுடைய ஆன்மாக்கள் முற்படுத்தியன கெட்டு விட்டது. வேதனையில் அவர்கள் நிரந்தரமானவர்கள். info
التفاسير:

external-link copy
81 : 5

وَلَوْ كَانُوْا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالنَّبِیِّ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِ مَا اتَّخَذُوْهُمْ اَوْلِیَآءَ وَلٰكِنَّ كَثِیْرًا مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟

அல்லாஹ்வையும், நபியையும் அவருக்கு இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்பவர்களாக அவர்கள் இருந்திருந்தால் அ(ந்நிராகரிப்ப)வர்களை நண்பர்களாக (பொறுப்பாளர்களாக) எடுத்திருக்கமாட்டார்கள். என்றாலும், அவர்களில் அதிகமானோர் பாவிகள் ஆவர். info
التفاسير:

external-link copy
82 : 5

لَتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِیْنَ اٰمَنُوا الْیَهُوْدَ وَالَّذِیْنَ اَشْرَكُوْا ۚ— وَلَتَجِدَنَّ اَقْرَبَهُمْ مَّوَدَّةً لِّلَّذِیْنَ اٰمَنُوا الَّذِیْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰی ؕ— ذٰلِكَ بِاَنَّ مِنْهُمْ قِسِّیْسِیْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟

(நபியே!) மக்களில் யூதர்களையும், இணைவைப்பவர்களையும் நம்பிக்கையாளர்களுக்கு பகைமையில் கடுமையானவர்களாக காண்பீர்! நிச்சயமாக நீர் நாங்கள் கிறித்தவர்கள் என்று கூறுபவர்களை நேசத்தில் நம்பிக்கையாளர்களுக்கு அவர்களில் மிக நெருங்கியவர்களாகக் காண்பீர்! நிச்சயமாக அவர்களில் குருக்களும், துறவிகளுமாக இருப்பதும், நிச்சயமாக அவர்கள் பெருமை கொள்ள மாட்டார்கள் என்பதும்தான் அதற்குக் காரணம். info
التفاسير:

external-link copy
83 : 5

وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَی الرَّسُوْلِ تَرٰۤی اَعْیُنَهُمْ تَفِیْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَقِّ ۚ— یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِیْنَ ۟

தூதருக்கு இறக்கப்பட்டதை அவர்கள் செவியுற்றால், உண்மையை அவர்கள் அறிந்த காரணத்தினால் அவர்களின் கண்களை அவை கண்ணீரால் நிரம்பி வழியக்கூடியதாகக் காண்பீர். "எங்கள் இறைவா! (இத்தூதரையும் இவ்வேதத்தையும்) நம்பிக்கை கொண்டோம். ஆகவே, சாட்சியாளர்களுடன் எங்களை(யும்) பதிவு செய்!” என்று கூறுகின்றனர். info
التفاسير: