Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
96 : 5

اُحِلَّ لَكُمْ صَیْدُ الْبَحْرِ وَطَعَامُهٗ مَتَاعًا لَّكُمْ وَلِلسَّیَّارَةِ ۚ— وَحُرِّمَ عَلَیْكُمْ صَیْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا ؕ— وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு பயனளிப்பதற்காக கடலில் வேட்டையாடுவதும், அதை புசிப்பதும் (இஹ்ராமிலுள்ள) உங்களுக்கும் (மற்ற) பயணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. (எனினும்,) நீங்கள் இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போதெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள், அவன் பக்கமே நீங்கள் ஒன்றுதிரட்டப்படுவீர்கள். info
التفاسير:

external-link copy
97 : 5

جَعَلَ اللّٰهُ الْكَعْبَةَ الْبَیْتَ الْحَرَامَ قِیٰمًا لِّلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْیَ وَالْقَلَآىِٕدَ ؕ— ذٰلِكَ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ وَاَنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟

மக்களுக்கு புனித வீடாகிய கஅபாவையும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) பலிப் பிராணியையும், மாலையிடப்பட்ட பலிப் பிராணிகளையும் வாழ்வளிக்கக்கூடியதாக அல்லாஹ் ஆக்கினான். அது, வானங்களிலுள்ளதையும் பூமியிலுள்ளதையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும். info
التفاسير:

external-link copy
98 : 5

اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ وَاَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟ؕ

நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன், நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். info
التفاسير:

external-link copy
99 : 5

مَا عَلَی الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ ۟

தூதர் மீது கடமையில்லை (தூதை) எடுத்துரைப்பது தவிர. நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். info
التفاسير:

external-link copy
100 : 5

قُلْ لَّا یَسْتَوِی الْخَبِیْثُ وَالطَّیِّبُ وَلَوْ اَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِیْثِ ۚ— فَاتَّقُوا اللّٰهَ یٰۤاُولِی الْاَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟۠

(நபியே!) கூறுவீராக, "தீயது அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்தினாலும், தீயதும் நல்லதும் சமமாகாது. ஆகவே, அறிவாளிகளே! நீங்கள் வெற்றிபெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்.” info
التفاسير:

external-link copy
101 : 5

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَسْـَٔلُوْا عَنْ اَشْیَآءَ اِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ ۚ— وَاِنْ تَسْـَٔلُوْا عَنْهَا حِیْنَ یُنَزَّلُ الْقُرْاٰنُ تُبْدَ لَكُمْ ؕ— عَفَا اللّٰهُ عَنْهَا ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ حَلِیْمٌ ۟

நம்பிக்கையாளர்களே! (நபியிடம்) பல விஷயங்கள் பற்றி கேள்வி கேட்காதீர்கள். அவை உங்களுக்கு வெளியாக்கப்பட்டால் உங்களுக்கு வருத்தமளிக்கும். குர்ஆன் இறக்கப்படும் நேரத்தில் அவற்றைப் பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளியாக்கப்படும். அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன். info
التفاسير:

external-link copy
102 : 5

قَدْ سَاَلَهَا قَوْمٌ مِّنْ قَبْلِكُمْ ثُمَّ اَصْبَحُوْا بِهَا كٰفِرِیْنَ ۟

உங்களுக்கு முன்பு சில மக்கள் திட்டமாக அவற்றைப் பற்றி (கேள்வி) கேட்டார்கள். (அவை விவரிக்கப்பட்ட) பிறகு அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக மாறிவிட்டனர். info
التفاسير:

external-link copy
103 : 5

مَا جَعَلَ اللّٰهُ مِنْ بَحِیْرَةٍ وَّلَا سَآىِٕبَةٍ وَّلَا وَصِیْلَةٍ وَّلَا حَامٍ ۙ— وَّلٰكِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ ؕ— وَاَكْثَرُهُمْ لَا یَعْقِلُوْنَ ۟

பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட) இவற்றில் எதையும் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனினும், நிராகரிப்பவர்கள் அல்லாஹ் மீது பொய்யை கற்பனை செய்கின்றனர். அவர்களில் அதிகமானோர் (உண்மையை சிந்தித்து) புரியமாட்டார்கள். info
التفاسير: