Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
24 : 5

قَالُوْا یٰمُوْسٰۤی اِنَّا لَنْ نَّدْخُلَهَاۤ اَبَدًا مَّا دَامُوْا فِیْهَا فَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَاۤ اِنَّا هٰهُنَا قٰعِدُوْنَ ۟

"மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் காலமெல்லாம் நிச்சயமாக நாங்கள் அதில் அறவே நுழையவே மாட்டோம். ஆகவே, நீயும், உன் இறைவனும் சென்று போரிடுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேதான் உட்கார்ந்திருப்போம்” என்று கூறினர். info
التفاسير:

external-link copy
25 : 5

قَالَ رَبِّ اِنِّیْ لَاۤ اَمْلِكُ اِلَّا نَفْسِیْ وَاَخِیْ فَافْرُقْ بَیْنَنَا وَبَیْنَ الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟

"என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கும், என் சகோதரருக்கும் தவிர, (மற்றவர் விஷயத்தில்) அதிகாரம் பெறமாட்டேன். ஆகவே, பாவிகளான சமுதாயத்திற்கு மத்தியிலும் எங்களுக்கு மத்தியிலும் பிரித்திடு!” என்று (மூஸா) கூறினார். info
التفاسير:

external-link copy
26 : 5

قَالَ فَاِنَّهَا مُحَرَّمَةٌ عَلَیْهِمْ اَرْبَعِیْنَ سَنَةً ۚ— یَتِیْهُوْنَ فِی الْاَرْضِ ؕ— فَلَا تَاْسَ عَلَی الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟۠

"நிச்சயமாக அது அவர்கள் மீது தடுக்கப்பட்டதாகும். நாற்பது ஆண்டுகள் (அவர்கள்) பூமியில் திக்கற்றலைவார்கள். ஆகவே, பாவிகளான சமுதாயத்தின் மீது கவலைப்படாதீர்!” என்று (மூஸாவுக்கு அல்லாஹ்) கூறினான். info
التفاسير:

external-link copy
27 : 5

وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ ابْنَیْ اٰدَمَ بِالْحَقِّ ۘ— اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ یُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ ؕ— قَالَ لَاَقْتُلَنَّكَ ؕ— قَالَ اِنَّمَا یَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِیْنَ ۟

(நபியே!) ஆதமுடைய இரு மகன்களின் செய்தியை உண்மையில் அவர்கள் முன் ஓதுவீராக. இருவரும் ஒரு 'குர்பானி' (பலி)யைக் கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருவரிடமிருந்து (குர்பானி) ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து ஏற்கப்படவில்லை. (ஏற்கப்படாதவர்) "நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன்” என்றார். (ஏற்கப்பட்டவர்) "அல்லாஹ் ஏற்பதெல்லாம் அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
28 : 5

لَىِٕنْۢ بَسَطْتَّ اِلَیَّ یَدَكَ لِتَقْتُلَنِیْ مَاۤ اَنَا بِبَاسِطٍ یَّدِیَ اِلَیْكَ لِاَقْتُلَكَ ۚ— اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِیْنَ ۟

நீ என்னைக் கொல்வதற்காக உன் கரத்தை என்னளவில் நீட்டினாலும் உன்னைக் கொல்வதற்காக என் கரத்தை உன்னளவில் நான் நீட்டுபவனாக இல்லை. நிச்சயமாக நான் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வைப் பயப்படுகிறேன். info
التفاسير:

external-link copy
29 : 5

اِنِّیْۤ اُرِیْدُ اَنْ تَبُوَْاَ بِاِثْمِیْ وَاِثْمِكَ فَتَكُوْنَ مِنْ اَصْحٰبِ النَّارِ ۚ— وَذٰلِكَ جَزٰٓؤُا الظّٰلِمِیْنَ ۟ۚ

"என் பாவத்துடனும், உன் பாவத்துடனும் (இறைவன் பக்கம்) நீ திரும்புவதை நிச்சயமாக நான் நாடுகிறேன். (அவ்வாறு வந்தால்) நீ நரகவாசிகளில் ஆகி விடுவாய்; இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும்” (என்றும் கூறினார்). info
التفاسير:

external-link copy
30 : 5

فَطَوَّعَتْ لَهٗ نَفْسُهٗ قَتْلَ اَخِیْهِ فَقَتَلَهٗ فَاَصْبَحَ مِنَ الْخٰسِرِیْنَ ۟

அவர் தன் சகோதரரை கொல்ல அவருடைய மனம் அவரைத் தூண்டியது. ஆகவே, அவரைக் கொன்றார். ஆகவே, நஷ்டவாளிகளில் (அவர்) ஆகினார். info
التفاسير:

external-link copy
31 : 5

فَبَعَثَ اللّٰهُ غُرَابًا یَّبْحَثُ فِی الْاَرْضِ لِیُرِیَهٗ كَیْفَ یُوَارِیْ سَوْءَةَ اَخِیْهِ ؕ— قَالَ یٰوَیْلَتٰۤی اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِیَ سَوْءَةَ اَخِیْ ۚ— فَاَصْبَحَ مِنَ النّٰدِمِیْنَ ۟

தன் சகோதரரின் சடலத்தை எவ்வாறு அவன் மறைப்பான் என்பதை அவனுக்கு அல்லாஹ் காட்டுவதற்காக பூமியில் தோண்டுகிற ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். அவன் என் நாசமே! இந்தக் காகத்தைப் போன்று நான் ஆக இயலாமலாகிவிட்டேனா! அப்படி ஆகியிருந்தால் என் சகோதரனின் சடலத்தை மறைத்திருப்பேனே! என்று கூறி துக்கப்படுபவர்களில் ஆகிவிட்டான். info
التفاسير: