ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

លេខ​ទំព័រ:close

external-link copy
133 : 3

وَسَارِعُوْۤا اِلٰی مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُ ۙ— اُعِدَّتْ لِلْمُتَّقِیْنَ ۟ۙ

உங்கள் இறைவனின் மன்னிப்பு இன்னும், சொர்க்கத்தின் பக்கம் விரையுங்கள். அதன் அகலம் வானங்களும் பூமியுமாகும். (அது) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளது. info
التفاسير: |

external-link copy
134 : 3

الَّذِیْنَ یُنْفِقُوْنَ فِی السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِیْنَ الْغَیْظَ وَالْعَافِیْنَ عَنِ النَّاسِ ؕ— وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟ۚ

(அவர்கள்) செல்வத்திலும், வறுமையிலும் தர்மம் புரிபவர்கள்; கோபத்தை மென்றுவிடுபவர்கள்; மக்களை மன்னித்து விடுபவர்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லறம் புரிவோரை நேசிக்கிறான். info
التفاسير: |

external-link copy
135 : 3

وَالَّذِیْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ۫— وَمَنْ یَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ ۪۫— وَلَمْ یُصِرُّوْا عَلٰی مَا فَعَلُوْا وَهُمْ یَعْلَمُوْنَ ۟

(அவர்கள்) ஒரு மானக்கேடானதைச் செய்தால் அல்லது தங்களுக்கு அநீதியிழைத்தால் அல்லாஹ்வை நினைத்து, தங்கள் பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை யார் மன்னிப்பார்? அவர்களுமோ (பாவம் என) அறிந்துகொண்டு, தாங்கள் செய்த (பாவத்)தின் மீது நிலைத்திருக்க மாட்டார்கள். info
التفاسير: |

external-link copy
136 : 3

اُولٰٓىِٕكَ جَزَآؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَجَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ— وَنِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟ؕ

அவர்களின் கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும் சொர்க்கங்களும் ஆகும். (அவர்கள்) அதில் நிரந்தரமானவர்கள். நன்மைபுரிவோரின் கூலி சிறந்ததாகிவிட்டது! info
التفاسير: |

external-link copy
137 : 3

قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌ ۙ— فَسِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِیْنَ ۟

உங்களுக்கு முன்னர் (பல) வரலாறுகள் சென்றுவிட்டன. ஆகவே, பூமியில் சுற்றுங்கள்; பொய்ப்பிப்பவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று பாருங்கள்! info
التفاسير: |

external-link copy
138 : 3

هٰذَا بَیَانٌ لِّلنَّاسِ وَهُدًی وَّمَوْعِظَةٌ لِّلْمُتَّقِیْنَ ۟

இது மக்களுக்கு ஒரு தெளிவுரையாகும். (குறிப்பாக) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு நேர்வழியும், நல்லுபதேசமும் ஆகும். info
التفاسير: |

external-link copy
139 : 3

وَلَا تَهِنُوْا وَلَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟

துணிவிழக்காதீர்கள்; கவலைப்படாதீர்கள்; நீங்கள் உயர்ந்தவர்கள்தான் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால். info
التفاسير: |

external-link copy
140 : 3

اِنْ یَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ؕ— وَتِلْكَ الْاَیَّامُ نُدَاوِلُهَا بَیْنَ النَّاسِ ۚ— وَلِیَعْلَمَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَیَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟ۙ

உங்களை காயம் (உயிர்ச் சேதம், உடல் சேதம்) அடைந்தால் (அந்த) கூட்டத்தையும் அது போன்ற காயம் அடைந்துள்ளது. அந்த நாள்கள், அவற்றை மக்களுக்கு மத்தியில் சுழற்றுகிறோம். நம்பிக்கையாளர்களை அல்லாஹ் அறிவதற்காகவும், உங்களில் (உயிர் நீத்த) தியாகிகளை எடுப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்). அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான். info
التفاسير: |