ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

លេខ​ទំព័រ:close

external-link copy
166 : 3

وَمَاۤ اَصَابَكُمْ یَوْمَ الْتَقَی الْجَمْعٰنِ فَبِاِذْنِ اللّٰهِ وَلِیَعْلَمَ الْمُؤْمِنِیْنَ ۟ۙ

இன்னும், இரு கூட்டங்களும் (உஹுத் போரில்) சந்தித்த நாளில் உங்களுக்கு எது ஏற்பட்டதோ அது அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் ஏற்பட்டது. (அல்லாஹ்) நம்பிக்கையாளர்களை (நயவஞ்சகக்காரர்களிடமிருந்து பிரித்து வெளிப்படையாக) அறிவதற்காகவும் (இந்த சோதனை உங்களுக்கு ஏற்பட்டது). info
التفاسير: |

external-link copy
167 : 3

وَلِیَعْلَمَ الَّذِیْنَ نَافَقُوْا ۖۚ— وَقِیْلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اَوِ ادْفَعُوْا ؕ— قَالُوْا لَوْ نَعْلَمُ قِتَالًا لَّاتَّبَعْنٰكُمْ ؕ— هُمْ لِلْكُفْرِ یَوْمَىِٕذٍ اَقْرَبُ مِنْهُمْ لِلْاِیْمَانِ ۚ— یَقُوْلُوْنَ بِاَفْوَاهِهِمْ مَّا لَیْسَ فِیْ قُلُوْبِهِمْ ؕ— وَاللّٰهُ اَعْلَمُ بِمَا یَكْتُمُوْنَ ۟ۚ

இன்னும், நயவஞ்சகர்களை (நம்பிக்கையாளர்களில் இருந்து பிரித்து வெளிப்படையாக) அறிவதற்காகவும் (இந்த சோதனை உங்களுக்கு ஏற்பட்டது). இன்னும், “வாருங்கள், அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள். அல்லது, (அந்த நிராகரிப்பவர்களைத்) தடுங்கள்” என்று அ(ந்த நயவஞ்சகம் உடைய)வர்களுக்கு கூறப்பட்டது. (அதற்கு) “போர் என்று (இதை) நாங்கள் அறிந்திருந்தால் நிச்சயமாக உங்களைப் பின்பற்றி (போருக்கு வந்து) இருப்போம்” என்று கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையை விட நிராகரிப்புக்கே மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாததை தங்கள் வாய்களால் கூறுகிறார்கள். இன்னும், அவர்கள் மறைப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன் ஆவான். info
التفاسير: |

external-link copy
168 : 3

اَلَّذِیْنَ قَالُوْا لِاِخْوَانِهِمْ وَقَعَدُوْا لَوْ اَطَاعُوْنَا مَا قُتِلُوْا ؕ— قُلْ فَادْرَءُوْا عَنْ اَنْفُسِكُمُ الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

(நயவஞ்சகர்கள் தங்கள் வீடுகளில்) உட்கார்ந்து கொண்டு, (கொல்லப்பட்ட) அவர்கள் எங்களுக்கு கீழ்ப்படிந்திருந்தால் (போரில்) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று தங்கள் சகோதரர்களுக்கு கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டு மரணத்தை தடுங்கள்!" info
التفاسير: |

external-link copy
169 : 3

وَلَا تَحْسَبَنَّ الَّذِیْنَ قُتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اَمْوَاتًا ؕ— بَلْ اَحْیَآءٌ عِنْدَ رَبِّهِمْ یُرْزَقُوْنَ ۟ۙ

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களாக எண்ணாதீர். மாறாக (அவர்கள்) உயிருள்ளவர்கள், தங்கள் இறைவனிடம் உணவளிக்கப்படுகிறார்கள், info
التفاسير: |

external-link copy
170 : 3

فَرِحِیْنَ بِمَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۙ— وَیَسْتَبْشِرُوْنَ بِالَّذِیْنَ لَمْ یَلْحَقُوْا بِهِمْ مِّنْ خَلْفِهِمْ ۙ— اَلَّا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۘ

அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்கு கொடுத்ததைக் கொண்டு மகிழ்ச்சியடைந்தவர்களாக (இருப்பார்கள்). (போரில் கொல்லப்பட்டு) தங்களுடன் வந்து சேராமல், தங்களுக்குப் பின்னால் (இவ்வுலகில் உயிரோடு தங்கி) இருப்பவர்களைக் கொண்டு, "அவர்கள் மீது ஒரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்" என்று மகிழ்ச்சியடைவார்கள். info
التفاسير: |

external-link copy
171 : 3

یَسْتَبْشِرُوْنَ بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ ۙ— وَّاَنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُؤْمِنِیْنَ ۟

அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் அருட்கொடையைக் கொண்டும், அருளைக் கொண்டும், "நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் கூலியை வீணாக்க மாட்டான்" என்பதைக் கொண்டும் மகிழ்ச்சியடைவார்கள். info
التفاسير: |

external-link copy
172 : 3

اَلَّذِیْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَّسُوْلِ مِنْ بَعْدِ مَاۤ اَصَابَهُمُ الْقَرْحُ ۛؕ— لِلَّذِیْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِیْمٌ ۟ۚ

(அவர்கள்) தங்களுக்கு காயமேற்பட்ட பின்னரும் அல்லாஹ்விற்கும் தூதருக்கும் பதிலளித்தார்கள். அவர்களில் நல்லறம் புரிந்து, அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு மகத்தான கூலி உண்டு. info
التفاسير: |

external-link copy
173 : 3

اَلَّذِیْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِیْمَانًا ۖۗ— وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِیْلُ ۟

"நிச்சயமாக மக்கள் (தங்கள் படைகளையும் ஆயுதங்களையும்) உங்களுக்கு (எதிராக) ஒன்று சேர்த்துள்ளனர், ஆகவே, அவர்களைப் பயப்படுங்கள்" என்று (சில) மக்கள் அவர்களுக்கு கூறினர். (அது) அவர்களுக்கு நம்பிக்கையை(த்தான்) அதிகப்படுத்தியது. "அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன், அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்றும் கூறினார்கள். info
التفاسير: |