ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

លេខ​ទំព័រ:close

external-link copy
158 : 3

وَلَىِٕنْ مُّتُّمْ اَوْ قُتِلْتُمْ لَاۡاِلَی اللّٰهِ تُحْشَرُوْنَ ۟

நீங்கள் இறந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் திட்டமாக அல்லாஹ்விடமே (மறுமையில்) ஒன்று சேர்க்கப்படுவீர்கள். info
التفاسير: |

external-link copy
159 : 3

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ ۚ— وَلَوْ كُنْتَ فَظًّا غَلِیْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ ۪— فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِی الْاَمْرِ ۚ— فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَوَكِّلِیْنَ ۟

(நபியே!) அல்லாஹ்வின் கருணையினால் அவர்களுக்கு மென்மையானீர். நீர் கடுகடுப்பானவராக, உள்ளம் கடுமையானவராக இருந்திருந்தால் உம் சுற்றுப்புறத்திலிருந்து பிரிந்திருப்பார்கள். ஆகவே, அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காக (அல்லாஹ்விடம்) மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசிப்பீராக! (முடிவை) நீர் உறுதிசெய்தால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (தவக்குல்) வைப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) நம்பிக்கை வைப்பவர்களை நேசிக்கிறான். info
التفاسير: |

external-link copy
160 : 3

اِنْ یَّنْصُرْكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَكُمْ ۚ— وَاِنْ یَّخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِیْ یَنْصُرُكُمْ مِّنْ بَعْدِهٖ ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟

அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை மிகைப்பவர் அறவே இல்லை. உங்களை அவன் கைவிட்டால் அதற்குப் பின்னர் உங்களுக்கு உதவுபவர் யார்? அல்லாஹ்வின் மீதே நம்பிக்கையாளர்கள் (தவக்குல்) நம்பிக்கை வைக்கவும். info
التفاسير: |

external-link copy
161 : 3

وَمَا كَانَ لِنَبِیٍّ اَنْ یَّغُلَّ ؕ— وَمَنْ یَّغْلُلْ یَاْتِ بِمَا غَلَّ یَوْمَ الْقِیٰمَةِ ۚ— ثُمَّ تُوَفّٰی كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

மோசம் செய்வது ஒரு நபிக்கு தகுதி இல்லை. எவர் மோசம் செய்வாரோ அவர் தான் மோசம் செய்ததை மறுமைநாளில் (தம்முடன்) கொண்டு வருவார். பிறகு ஒவ்வோர் ஆன்மாவு(க்கு)ம் தான் செய்ததை முழுமையாக கொடுக்கப்படும். அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள். info
التفاسير: |

external-link copy
162 : 3

اَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللّٰهِ كَمَنْ بَآءَ بِسَخَطٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰىهُ جَهَنَّمُ ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟

அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றியவர் அல்லாஹ்வின் கோபத்துடன் திரும்பியவனைப் போல் ஆவாரா? அவனுடைய தங்குமிடம் நரகம் ஆகும். (அந்த) மீளுமிடம் கெட்டுவிட்டது. info
التفاسير: |

external-link copy
163 : 3

هُمْ دَرَجٰتٌ عِنْدَ اللّٰهِ ؕ— وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا یَعْمَلُوْنَ ۟

அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல தரங்கள் (உடையோர்) ஆவர். அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير: |

external-link copy
164 : 3

لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَی الْمُؤْمِنِیْنَ اِذْ بَعَثَ فِیْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِهٖ وَیُزَكِّیْهِمْ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ ۚ— وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

நம்பிக்கையாளர்கள் மீது திட்டமாக அல்லாஹ் அருள் புரிந்தான். ஏனெனில், அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு மத்தியில் அனுப்பினான். அவர்கள் மீது அவனுடைய வசனங்களை (அவர்) ஓதுகிறார்; அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். நிச்சயமாக (அவர்கள் இதற்கு) முன்னர் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர். info
التفاسير: |

external-link copy
165 : 3

اَوَلَمَّاۤ اَصَابَتْكُمْ مُّصِیْبَةٌ قَدْ اَصَبْتُمْ مِّثْلَیْهَا ۙ— قُلْتُمْ اَنّٰی هٰذَا ؕ— قُلْ هُوَ مِنْ عِنْدِ اَنْفُسِكُمْ ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

(அவர்கள் மூலம் உஹுத் போரில்) உங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்ட போது (‘பத்ரு' போரில் அவர்களிடம்) அது போன்று இருமடங்கை நீங்கள் அடைந்திருக்க, இது எங்கிருந்து ஏற்பட்டது எனக் கூறுகிறீர்களா? (நபியே) கூறுவீராக: உங்களிடமிருந்துதான் அது ஏற்பட்டது. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான். info
التفاسير: |