ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

លេខ​ទំព័រ:close

external-link copy
195 : 3

فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ اَنِّیْ لَاۤ اُضِیْعُ عَمَلَ عَامِلٍ مِّنْكُمْ مِّنْ ذَكَرٍ اَوْ اُنۡثٰى​ۚ بَعْضُكُمْ مِّنْ بَعْضٍ ۚ— فَالَّذِیْنَ هَاجَرُوْا وَاُخْرِجُوْا مِنْ دِیَارِهِمْ وَاُوْذُوْا فِیْ سَبِیْلِیْ وَقٰتَلُوْا وَقُتِلُوْا لَاُكَفِّرَنَّ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَاُدْخِلَنَّهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ— ثَوَابًا مِّنْ عِنْدِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الثَّوَابِ ۟

ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு பதிலளித்தான், "உங்களில் ஆண் அல்லது பெண்களில் (நற்)செயல் செய்பவரின் (நற்)செயலை நிச்சயம் வீணாக்க மாட்டேன். உங்களில் சிலர், சிலரைச் சேர்ந்தவர்கள்தான். ஹிஜ்ரா சென்றவர்கள், தங்கள் ஊர்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், என் பாதையில் துன்புறுத்தப்பட்டவர்கள், போர் செய்தவர்கள், (அதில்) கொல்லப்பட்டவர்கள், அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயம் அகற்றி விடுவேன். அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களில் நிச்சயம் அவர்களை நுழைப்பேன்.” அல்லாஹ்விடமிருந்து நற்கூலியாக (இவை வழங்கப்படுவார்கள்). அல்லாஹ், அவனிடத்தில்தான் அழகிய நற்கூலி உண்டு. info
التفاسير: |

external-link copy
196 : 3

لَا یَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِیْنَ كَفَرُوْا فِی الْبِلَادِ ۟ؕ

(நபியே!) நிராகரிப்பவர்கள் (ஆடம்பரமாக) நகரங்களில் சுற்றித்திரிவது உம்மை நிச்சயம் மயக்கிடவேண்டாம். info
التفاسير: |

external-link copy
197 : 3

مَتَاعٌ قَلِیْلٌ ۫— ثُمَّ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ— وَبِئْسَ الْمِهَادُ ۟

(இது) ஓர் அற்ப இன்பமாகும். பிறகு, அவர்களுடைய தங்குமிடம் ஜஹன்னம் (நரகம்)தான். (அந்த) தங்குமிடம் கெட்டுவிட்டது. info
التفاسير: |

external-link copy
198 : 3

لٰكِنِ الَّذِیْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا نُزُلًا مِّنْ عِنْدِ اللّٰهِ ؕ— وَمَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ لِّلْاَبْرَارِ ۟

எனினும், தங்கள் இறைவனை அஞ்சியவர்கள், அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து விருந்தோம்பலாக நதிகள் ஓடும் சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். அல்லாஹ்விடம் உள்ளது நல்லோருக்கு மிகச் சிறந்ததாகும். info
التفاسير: |

external-link copy
199 : 3

وَاِنَّ مِنْ اَهْلِ الْكِتٰبِ لَمَنْ یُّؤْمِنُ بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِمْ خٰشِعِیْنَ لِلّٰهِ ۙ— لَا یَشْتَرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِیْلًا ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ؕ— اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟

வேதக்காரர்களில் அல்லாஹ்விற்கு பணிந்தவர்களாக அல்லாஹ்வையும் உங்களுக்கு இறக்கப்பட்டதையும், அவர்களுக்கு இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்பவர்கள் உண்டு. அல்லாஹ்வுடைய வசனங்களுக்குப் பகரமாக ஒரு சொற்பகிரயத்தை வாங்க மாட்டார்கள். (வேத வசனங்களை மாற்ற மாட்டார்கள்.) அவர்கள், அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிக விரைவானவன். info
التفاسير: |

external-link copy
200 : 3

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا ۫— وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟۠

நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றியடைவதற்காக பொறுங்கள்; (எதிரிகளைவிட) அதிகம் பொறுத்துக் கொள்ளுங்கள்; போருக்குத் தயாராகுங்கள்; அல்லாஹ்வை அஞ்சுங்கள். info
التفاسير: |