លេខ​ទំព័រ:close

external-link copy
69 : 9

كَالَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ كَانُوْۤا اَشَدَّ مِنْكُمْ قُوَّةً وَّاَكْثَرَ اَمْوَالًا وَّاَوْلَادًا ؕ— فَاسْتَمْتَعُوْا بِخَلَاقِهِمْ فَاسْتَمْتَعْتُمْ بِخَلَاقِكُمْ كَمَا اسْتَمْتَعَ الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ بِخَلَاقِهِمْ وَخُضْتُمْ كَالَّذِیْ خَاضُوْا ؕ— اُولٰٓىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟

(நயவஞ்சகர்களே! நீங்கள்) உங்களுக்கு முன்னுள்ளவர்களைப் போன்றே. அவர்கள் உங்களைவிட பலத்தால் கடுமையானவர்களாக; செல்வங்களாலும் சந்ததிகளாலும் அதிகமானவர்களாக இருந்தனர். (அவர்கள் இவ்வுலகில்) தங்கள் பங்கைக் கொண்டு சுகமடைந்தார்கள். உங்களுக்கு முன்னுள்ளவர்கள் தங்கள் பங்கைக் கொண்டு (இவ்வுலகில்) சுகமடைந்தது போன்று, (நீங்களும்) உங்கள் பங்கைக் கொண்டு சுகமடைந்தீர்கள். அவர்கள் (பரிகசிப்பதில்) மூழ்கியது போன்றே (நீங்களும்) மூழ்கினீர்கள். அவர்கள், இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய (நற்)செயல்கள் அழிந்தன. அவர்கள்தான் நஷ்டவாளிகள். (அவ்வாறே நீங்களும் நஷ்டவாளிகள்.) info
التفاسير: |

external-link copy
70 : 9

اَلَمْ یَاْتِهِمْ نَبَاُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۙ۬— وَقَوْمِ اِبْرٰهِیْمَ وَاَصْحٰبِ مَدْیَنَ وَالْمُؤْتَفِكٰتِ ؕ— اَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ— فَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟

இவர்களுக்கு முன்னருள்ள நூஹ் (நபி) உடைய சமுதாயம், ஆது, ஸமூது, இப்ராஹீம் (நபி) உடைய சமுதாயம், மத்யன் வாசிகள், தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்கள் ஆகியோரின் சரித்திரம் அவர்களுக்கு வரவில்லையா? அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அநீதியிழைப்பவனாக இருக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்கே அநீதியிழைப்பவர்களாக இருந்தனர். info
التفاسير: |

external-link copy
71 : 9

وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ۘ— یَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَیُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَیُطِیْعُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ— اُولٰٓىِٕكَ سَیَرْحَمُهُمُ اللّٰهُ ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟

நம்பிக்கை கொண்ட ஆண்கள், நம்பிக்கை கொண்ட பெண்கள் அவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள். அவர்கள், நன்மையை ஏவுகின்றனர்; தீமையைவிட்டு தடுக்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றனர்; ஸகாத்தை கொடுக்கின்றனர்; அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகின்றனர். இவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான். info
التفاسير: |

external-link copy
72 : 9

وَعَدَ اللّٰهُ الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا وَمَسٰكِنَ طَیِّبَةً فِیْ جَنّٰتِ عَدْنٍ ؕ— وَرِضْوَانٌ مِّنَ اللّٰهِ اَكْبَرُ ؕ— ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟۠

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களையும், (அத்ன் எனும்) நிலையான சொர்க்கங்களில் நல்ல தங்குமிடங்களையும் அல்லாஹ் வாக்களித்தான். (அவர்கள்) அவற்றில் நிரந்தரமானவர்கள். அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுதான் மகத்தான வெற்றியாகும். info
التفاسير: |